கதையாசிரியர் தொகுப்பு: புதுவண்டி ரவீந்திரன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

திரைக்கதை

 

 இரவு மணி ஏழு. இருவது வருடங்களாய் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனராய் கொடி நாட்டி வரும் ஹரிபிரசாத் ,சமீபத்தில் ரிலீசாகி ,மெகா ஹிட்டான தனது படம் ‘ ஆக்‌ஷன் ஹீரோ’ வினை தனிமையில் தனது அறையில் அமர்ந்து ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். ‘ஆக்‌ஷன் ஹீரோவில் ‘க்ளைமேக்ஸ் காட்சி நெருங்கிக்கொண்டிருந்தது. இதை எல்லாம் இவ்ளோ சரியா சொல்றியே நீ யார்னுதானே என்னைப்பார்த்து கேக்கறீங்க.சரிதானே?! சொல்றேன்..அப்புறமா! சதீஷ் வேறு யாருமல்ல. ஹரிபிரசாத்தின் அசோசியேட் டைரக்டர்தான் சதீஷ்.மீன் குட்டிக்கு நீச்சல்


கல்யாணத்துக்கு கல்யாணம்

 

  கல்யாணத்துக்கு, பலவருஷங்களாய் பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வயசு ஏறிக்கொண்டே சென்றது. வயசு ஏறுவதற்கு மட்டும் ஏணியோ அல்லது சின்னதா ஒரு ஸ்டூல் கூட தேவையில்லை. தானாகவே ஏறிவிடும், விலைவாசி போலவே. அவனோட ஜாதகத்தில், சந்தோஷம் ஒன்னை தவிர எல்லா தோஷமும் இருந்தது.செவ்வாய் தோஷம், புதன் தோஷம் என்று வாரத்தில் ஏழு நாட்களுமே தோஷம்தான் அவனுக்கு. இதெல்லாம்கூட பரவாயில்லை. தோஷங்களை கழிக்க பரிகாரம் செஞ்சிக்கலாம்.ஆனா..உள்ளூர் தோஷம்னு ஒன்னு இருக்கு .அதுதான் எந்த பரிகாரத்துக்கும் குறையாத தோஷம். அந்த ஓட்டலுக்கு


யாரு சுட்ட தோசை

 

  *யாரு சுட்ட தோசை இது அப்பா சுட்ட தோசை* கைகளில் ஃபோனை வைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கை நோண்டியபடியிருந்த என்னைப்பார்த்து பெருமூச்சி விட்டபடி சொன்னாள், என் மனைவி கமலா. “‘லாக் டவுன்’ லீவ்ல நீங்கதாங்க லைஃபை என்ஞ்சாய் செய்யறீங்க” “என்னடி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டே.? எப்போ இந்த கொரோனா ‘யூ டர்ன்’ அடிச்சி திரும்பி போகும்.எப்போ கார்டு ரீடர்ல ‘பன்ச்’அடிச்சிட்டு கம்பனிக்குள்ள நான் வேலைக்கு போவேன்னு ஆவலா எதிர்பார்த்துக்கிட்டிருக்கிற என்னைப்பார்த்து இப்படி சொல்லிட்டியேடி?!” “நீங்க வேலைக்கு போறப்பவே, நான்


இனி எல்லாம் இன்பமே

 

 தினம் தினம் நடக்கும் வழக்கமான நிகழ்வுதான் அது. அன்றைக்கும் எனக்கு அது நடந்தது. அந்த நிகழ்வு நடந்தது எனது வீட்டுக்குள்தான் என்றதால்,மெல்ல நகர்ந்து ஒவ்வொரு சுவிட்ச் போர்டாய் சென்று பார்த்தேன்.இன்னேரம் புரிந்திருக்குமே உங்களுக்கு..என் ஃபோனில் சார்ஜ் போடத்தான் இப்படி அலைந்து கொண்டிருக்கிறேன் என்று? அனைத்து சுவிட்ச் போர்டுகளும் பிஸியாகவே இருந்தது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள்,கோவிலிலிருக்கும் ஆலமர விழுதுகளில் கட்டி தொங்கவிடும் பொம்மைத்தொட்டில் நினைவுக்கு வந்தது எனக்கு. ஒவ்வொரு சுவிட்ச் போர்டிலும் ஒவ்வொன்று தொங்கிக்கொண்டிருந்தது. சுவிட்ச் போர்டு ஒன்றின் ப்ளக்கில்,