கதையாசிரியர் தொகுப்பு: பி.என்.எஸ்.பாண்டியன்

1 கதை கிடைத்துள்ளன.

அப்பாவின் கண்கள்

 

 ராத்திரி எல்லாம் அப்பாவோடுதான் இருந்தான் சங்கரன். பொட்டு தூக்கம்கூட இல்லை. அப்பா, இருமிக்கொண்டே இருந்தார். சங்கரனின் கை விரல்களைப் பிடித்து நகத்தைத் தடவியவாறே ஓரக்கண்ணால் பார்த்தார். ‘நகத்தை வெட்டுடா சங்கரா… படிக்கிற பையன் மாதிரியா இருக்க!’ என அப்பா சொல்லும் வழக்கமான வசவு, சங்கரனின் காதுகளில் ஒலித்தது. நிரம்பியிருந்த மூத்திரப் பையை எடுத்துச் சென்று பாத்ரூமில் ஊற்றினான். திரும்பி வரும்போது நைட் டியூட்டி நர்ஸ், டேபிளின் மீது இருந்த காகிதத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவரிடம் அப்பாவின் ஆரோக்கியம்