கதையாசிரியர் தொகுப்பு: நடிகை சிநேகா

1 கதை கிடைத்துள்ளன.

பப்பி

 

 அக்ஷிதாவின் உடம்பு கொதித்தது. கண்கள் சிவந்து சோர்ந்து கட்டிலில் கிடந்தது குழந்தை. ஆன்ட்டிபயாடிக் கொடுத்ததோடு வைத்தியம் முடிந்துவிட்டது. சரியாகப் போய்விடும் என்பது அக்காவின் எண்ணம். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. அக்காவிடம் சொல்ல முடியாது. கடுப்படிப்பாள். ‘என் குழந்தை மேல எனக்கு இல்லாத அக்கறையா?’ என்பாள். அந்த ஜுரத்திலும் அக்ஷிதா வாசல் நோக்கி அடிக்கடி பார்வையைச் செலுத்தியதும் கண்களில் ஏமாற்றம் தெரிந்ததும் எனக்கு ஒருவிதக் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவள் உதடுகள் ஏதோ முணுமுணுப்பது போல் தெரிய… உன்னிப்பாகக்