கதையாசிரியர் தொகுப்பு: ஜே.டேனியல்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பிப்ரவரி இரண்டு

 

 ‘கௌரவர்கள் சூதுக்கிழுத்து பன்னிரண்டு + ஒன்று என்ற கணக்கில் பாண்டவரின் இயல்பு வாழ்வை முடக்கியதுபோல்’ உன் சுற்றத்தார் நான் தெளிவில்லாமல் இருந்தபோதும் கையை கடிக்காமல் இருப்பதற்கு சரியான ஆள் என நினைத்திருப்பார்கள், நீயும் உன் வீட்டுக்கு கழிதல் கணக்கில் சுலபமாய் அடங்கிவிட்டாய். இருவரும் வெயிலுக்கும் மழைக்கும் அடிப்பட்டோம். ஹெலிகாப்ட்ரில் வீசும் நிவாரண பொட்டலத்தை கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து வாழ்வோருக்கு சமமாய்த்தான் நம் வாழ்வும் இருந்தது. பதினான்கு ஆண்டுகள் வாழ்வின் பந்தம் முடியும்போது மூக்கு ஒழுகும் பிள்ளைகளை


தறுதலை தகப்பன்

 

 ஹிட்லர் மீசையளவு, மூக்குக்கு கீழ் வெள்ளை மயிரில் பொடியின் கறை அப்பியிருந்தது. “கருணாநிதிய உட்டுட்டு எதுக்கு போனும், அதனால எம்.ஜி.ஆரை எனுக்குப் புடிக்காது.” இதைச்சொல்லும் போது பெரியவரின் முகம் சிவந்தது. இருந்தாலும் எதுக்கு தேவையில்லாம இவரிடம் கோபத்தை காட்டனும். கிடைக்கிற ஒரு ரூபாயும் கிடைக்காமல் போயிவிடுமோ என்று யோசித்தார். முகத்தை இயல்பாக வைத்துகொண்டார். காலர் இல்லாத ஜிப்பா அணிந்திருந்தார். அது வெளுப்பும் இல்லாமல், அதிகமான அழுக்கும் இல்லாமல் இருந்தது. சிகப்புக் கலரில் குறுக்கும் நெடுக்குமாக வெள்ளைக் கோடு