கதையாசிரியர் தொகுப்பு: ச.பிரசன்னகிருஷ்ணன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

மாறாட்டம்

 

 காலை 4 மணிக்கே அழைப்பானை வைத்திருந்தாள் பார்கவி.. கை பேசியிலிருந்து நாராசமாக எழுந்த ஒலியை கேட்டு பேருந்திலிருந்த அனைவரும் துயில் கலைந்து லேசான கடுப்புடனும் ‘உஸ்’சுடனும், முன்னர் படுத்திருந்த நிலையிலிருந்து சற்று உடம்பை அசைத்து கொண்டு வேறு நிலைக்கு மாறினர்.. அருகிலிருந்த கிருஷ்ணன் பயணம் முழுக்க தூங்கவே இல்லையெனினும், தூக்கம் கலைந்த பாவனையுடன், கை கடிகார மணியை பார்த்து கொண்டு ‘யோவ்.. ஏன் யா இப்பவே அலார்ம் வெச்சுருக்க.. இன்னும் நிறைய நாழி இருக்கே.. இப்போ தான்


கானல் சுவர்

 

 வெளிச்சம் வருவதற்கு முன்னே உள்ளுள் ஓர் அழைப்பு மணி எழுப்பி விட்டது.. உள் செயல் பாட்டை கட்டு படுத்த முடியுமா? அது நம்மையும் மீறியல்லவா பயணம் செய்து கொண்டிருக்கிறது… ஏதோ ஒரு துள்ளல், ஒரு தவிப்பு… சிறு வெளிச்சம் வந்தால்கூட போதும்.. எவ்வளவு ஏற்பாடுகள்? ஆயிரமாயிரமாய் உரையாடல்கள், ஒப்பனைகள் என்னேரமும்… காற்று சற்று அதிகமாக எட்டி பார்க்கும் போது, போர்வையை இழுத்து மூடி கொள்ளும் போது எப்படியோ சிலிர்த்து விடுகிறது.. ஆனால் இப்படியே மன உரையாடல் அதிகரித்து


ஈசல்

 

 இருட்டு தன் இருப்பிடத்தை தேடி உலகினுள் புகுந்து கொள்ள எத்தணித்து கொண்டிருக்கிறது… மஞ்சள் விளக்கொளிகள் ஆங்காங்கே தெருவை புதுப்பித்து கொண்டிருந்தது… நாகரீகமடைந்த இரண்டு கால் மிருகங்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டும், ஏதேதோ பேசிக்கொண்டும் சென்று கொண்டிருந்தன.. தங்களுக்குள் உன்டாண சம்பாஷனைகளின் விளைவாக சத்தம் போட்டு கத்தி கொண்டும், கொக்கரித்து கொண்டும் பல விதமான சேஷ்டைகளை தொடர்ந்து கொண்டிருந்தன… நடை பயிற்சிக்கு ஏற்ப பல செடிகள் நட்டு வைக்க பட்டிருந்த இடத்தினுள் கை காள்களை ஆட்டி கொண்டும், வினோதாமான


நவீன அடிமைகள்

 

 காலையில் பெயரிடப் படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன் புருவத்தை சுழித்து யாருடைய எண் என்று மூலை ஒரு பக்கம் சிந்திக்க தொடங்கிவிட்டது.. யாராக இருக்கும் என்று சில மணி துளிகள் மனதிற்குள்ளேயே ஒருசிறிய வடிகட்டியை போட்டு துழாவ ஆரம்பித்தேன்… செல்பேசியின் ரிங்டோனாக வைத்திருந்த “ஹௌ டு நேம் இட்” நெடுநேரமாக ஒலித்து கொண்டே இருந்தது.. பொதுவாக இது போன்று காலையிலேயே ஒரு அழைப்பு என்றால் அலுவலகத்தில் ஏதோ அவசர வேலை என்று அர்த்தம்… ஆனால் நேற்று


திறந்தவெளி

 

 “மார்கழி திங்கள்…….” எங்கேயோ கேட்கும் இசை, ஊர் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு தன் முகத்தைமாற்றி கொள்ள போகும் இயல்பு, எங்கேயும் ஜனத்திரள், எல்லோர் முகங்களிலும் ஏற்படும் இயல்பான சிரிப்பு, இதெல்லாம் விட போலீஸ் கெடுபிடி என ஊரின் முகமே மாறிப்போகும் நிலை ஸ்ரீரங்கத்தில் நெருங்கி கொண்டிருக்கிறது… இதெல்லாவற்றையும் நிம்மதியாக அசை போட்டவாறே, வெளியில் திரிந்துகொண்டிருக்கும் அனாதையான பேய் பிடித்து அலையும் காற்றுக்கு தன் முகத்தில் கொஞ்சம் இடம் ஒதுக்கி கொண்டு, காதில் செறுகி இருந்த ஹெட்