கதையாசிரியர் தொகுப்பு: கவிஞர் சுரதா

7 கதைகள் கிடைத்துள்ளன.

கொய்யாப் பழமும் கொய்யும் பழமும்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருநீலகண்டநாயனார் என்பவர், சிறிது காலம் தம் மனைவியைத் தொட்டுப் பழகியும், பின்னர் அவர் அவ்வம்மையாரை நெடுங்காலமாகத் தொடாமலேயே பழகியும் வந்தாராம். ஆனால் உதயசூரியன் அப்படி யல்ல. அது, தாமரைப் பூக்களைத் தொடாமலேயே பழகி வரும் ஒரு நெருப்பு நாயகன். அது, தன் வெளிச்சத்தால், ஆண்களையும் பெண் களையும் அடையாளம் காட்டும். அவர்களின் ஆயுட் காலத்தையும் அது அன்றாடம்


அவனுக்கு மன்மத மயக்கம் அவளுக்குக் கண்மத மயக்கம்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜான்சிராணி லட்சுமிபாய் மிகவும் அழகாக இருப்பாளாம். அவள் முகம் உருண்டையாகவும், கண்கள் பெரிதாகவும், பேரொளி மிக்கதாகவும் இருக்குமாம். ஜான்சிராணியைப் போலவே, பூங்கோதை என்ப வளும் அழகாகத்தான் இருந்தாள். அவளது முகமும் அம்பு விழிகளும் அப்படித்தான் இருந்தன. அந்த ஜான்சிராணி, நடுத்தர உயரமுடையவளாம். பூங்கோதையும் அப்படித்தான் இருந்தாள். இந்தியப் பெண்கள் கல்வி கற்று முன்னேறவும், பூவும் பொட்டுமிழந்து வேதனைப்படும் விதவைகளின் துயர் தீரவும், தம்


அவள் அங்கமும் தங்கம் அவள் பெயரும் தங்கம்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் ஒரு சேற்றுத் தாமரை; கீற்றுநிலா; ஆற்றுப் படகு, ஐந்தெழுத்துக் கதம்பம்; ஆறுகால் வண்டு; ஈரமேகத்தில் தோன்றும் ஏழு நிறங்களைக் கொண்ட வானவில். பச்சை வாழை தன் பக்கத்தில் இருந்தால், அப்போது மதிப்பு மிக்க மரகதம் போலவும்; செருந்திப்பூ அருகில் இருந்தால், செம்பொன் போலவும்; மலர்ந்த செந்தாமரை அருகில் இருந்தால், மாணிக்கம் போலவும், தோற்றம் அளிக்கக் கூடிய ஒரு பளிங்குக் கல் போன்றவள்


சுடாத இரவும் தொடாத உறவும்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஞாயிற்றுக் கிழமை இரவில், திங்கள் வந்தது. தேய்ந்து வளர்ந்த அத்திங்களைக் கண்டு, செவ்வாய்த் தாமரைகள் அழுது கொண்டிருந்தன. அரக்காம்பல் என்னும் அல்லிகள் அப்போது சிரித்துக்கொண்டிருந்தன. அந்த ஊரும், தடாகத்திலுள்ள நீரும்; கலப்பைகள் உழுதுவைத்த சேறும், இரவு நேரத்தில் ஒற்றுமையாக உறங்கிக் கொண்டிருந்தன. ஆனால், அவள் மட்டும் உறங்கவில்லை. சுடாத இரவும், இரண்டு நாட்களாகத் தொடாத உறவும், அவளுடைய இளமை உணர்ச்சிகளை எழுப்பிவிட்டதால், உள்ளத்தில்


மரகதச் சோலையே மஞ்சம்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் – பல் முளைக்காமலும், நாவில் சொல் முளைக்காமலும் பிறந்தவள். முதற் பருவத்தில் அவள் ஒரு பேதை; மூன்றாம் பருவத்தில் அவள் ஒரு மங்கை; மாமன் மகன் அவளை மாலையிட்டபோது, அவளொரு மங்கல மடந்தை. அவள் வதனவட்டம் – ஒரு நிலா நிலம்! அவள் வாயிதழ்கள், சேர்ந்து பிறந்த செம்பவளங்கள். அவள் அழகு நெற்றி, ஓர் அகத்திப்பூ. அவள் அடிவயிறு ஓர் ஆலந்தளிர்.


மங்கையர்க்கரசி

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி – 1 – 14 காட்சி – 15 இடம்: கொலைக்களம் முதல் கொலைஞன்: தாயே! இந்த வழியா தப்பிப் போயிடுங்க. மங்கை: என்னை வெட்டும்படி அல்லவா மஹாராஜாவின் கட்டளை. இரண்டாவது கொலைஞன்: எங்க மஹாராணியா இருக்குற ஒங்க எப்படியம்மா கொல்றது. ஐயோ பாவம்! ஒங்களுக்கா இந்த கெதி வரணும். மங்கை: கொனை விலக்க முடியாத விதியை நினைத்து….வேதனைப்படுவதால் பயன்? கப்பல்


மங்கையர்க்கரசி

 

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி – 1 – 14 | காட்சி – 15 – 28 காட்சி – 1 இடம்: அரண்மனை [மதுராபுரியில் வசந்தவிழா கொண்டாடு கின்றனர். அரண்மனையில் இளவரசன் காந்த ரூபனையும், அவன் மனைவி மங்கையர்க்கரசி யையும் தோழிகள் வாழ்த்துப்பாடி ஆரத்தி எடுக்கின்றனர். அப்போது காந்தரூபனின் தந்தை மதுராங்கதன் அங்கே வருகிறான் அவனைக் கண்டு இளந்தம்பதிகள் இருவரும் வணங்குகின்றனர். அவர்களைப் பார்த்து]