கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.வன்னியகுலம்

1 கதை கிடைத்துள்ளன.

இதுவும் ஒரு பிரசவம்

 

 (1971 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உச்சந்தலையில் ஓங்கி அறைந்தது போலிருக்கிறது. நெற்றித்திட்டு விண் விண்ணென்று வலியெடுத்து வெடித்துச் சிதறிவிடும் போலிருக்கிறது. காற்றோட்டமற்ற புகைக்கிடங்கில் கிடந்து தத்தளிப்பது போல மூச்சு முட்டுகிறது. நினைவுகள் தடுமாறி எண்ணங்கள் தத்தளிக்கின்றன. இப்படி ஓர் அவலம் ஏற்படுமென ஏற்கெனவே தெரிந்திருந்தால்..! “சுப்பையா அண்ணை , உங்களைத் தான்! பப்பாசிக்காய் ஏனெண்டு கேட்டனான்.” கனியிருப்பக் காய் கவர்வது மனிதன் சுயாதீனமாக இல்லை என்பதைத் தான் காட்டுகிறது!