கதையாசிரியர் தொகுப்பு: எம்.ரிஸ்வானா

5 கதைகள் கிடைத்துள்ளன.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

 

 மஞ்சளையும் சந்தனத்தையும் அரச்சி ஒரே சீரா பூசுன, புதுசா சமஞ்ச பொண்ணு கணக்கா ஊற சுத்தி செவ்வந்தி பூக்க பூத்து கெடக்கு.செவந்து கெடக்கு ஊரு. இந்த ஊருக்கு கொளத்தூர் ங்கற பேர்க்கு பதிலா செவ்வந்திபுரம்னு பேர மாத்தி வைக்கக்கூட பரிசீலன பண்லாம் னா பாத்துக்கோங்க. மானம் பாத்த பூமி, தப்பாம பேயர மழையினால வெள்ளாமா சுகபோகமா நடக்குது அந்த கிராமத்துல. மேடதெரு மூணாம் வீடுதான் கனகாம்பரத்தோட வீடு, பேருதான் கனகம் ஆனா அழகுல குறிஞ்சிப்பூ. அம்புட்டு அழகு.


ரீவைண்ட்

 

 அது என் சொந்த ஊர். அங்கு நான் கழித்த நாட்களை பற்றி தங்க தகட்டில் பட்டு ஜரிகையினால் எழுதினால் நான் சொல்ல வருவதை நீங்கள் சொல்லாமலே புரிந்துகொள்ளலாம். ஏனெனில் அவை ஆனந்தமான என் தொடக்கப்பள்ளி நாட்கள். என் தலை பூ மட்டும் மதியமே காய்ந்துவிடுவதும், ஒரு மார்க்கில் செகண்ட் ரேங்கை தவரவிடுவதும் மாதம் இரு சனிக்கிழமைகளிலும் அரை நேரம் பள்ளி வைப்பதுமே எனக்கு அதிகபட்ச கவலைகளாய் இருந்தன அந்நாட்களில். இது நடந்தது சென்ற நூற்றாண்டின் இறுதி, தொண்ணூறுகளின்


தாய்ப்பாசம்

 

 குழந்தை நேஹாவுக்கு இரண்டு வயது ஆகிறது. காலையில் குழந்தையை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு பால் காய்ச்சி கொடுத்ததாள் துளசி. நேஹாவும் பாலை சமர்த்தாக குடித்துவிட்டு தன் குட்டி மிதிவண்டியில் உட்கார்ந்து விளையாட தொடங்கினாள். துளசி, காலையில் சமைத்து போட்ட பாத்திரத்தை தேய்ப்பதில் தொடங்கி வீட்டை பெருக்குதல் துணி துவைத்தல் போன்ற வேலைகளை செய்தாள். இடையிடையே குழந்தையையும் கவனித்துக்கொண்டாள். நேஹவை வீட்டின் வெளியில் அழைத்து சென்று கேட்டிற்கு உள்ளே நிற்கவைத்து காக்கை காட்டி சாதம் ஊட்டினாள். பின் அவளை


மந்திரப்பலகை

 

 “டேய் தினேஷ்! ஏன்டா லொட்டு லொட்டுன்னு சேனல மாத்திட்டே இருக்க…?” இந்த குரலுக்கு சொந்தக்காரர் தினேஷுடைய அம்மா. தினேஷ் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும், இல்லை இல்லை மூன்றாம் ஆண்டு வகுப்புக்கு செல்லும் மாணவன்(ஏறக்குறைய எல்லா பாடத்திலும் அரியர் வைத்திருப் பவனை ‘படிக்கும்’ என்று சொல்வது நியாயம் இல்லை அல்லவா!). “காலேஜ் லீவ்னா போதுமே நாள் முழுக்க ரிமோட்டும் கையுமா உக்காரவேண்டியது, இல்லனா லேப்டாப்-அ நோண்ட வேண்டியது வேற என்ன தெரியும் உனக்கு. ஊர்ல உள்ள பசங்கலாம்


எனது இரயில் பயணம்

 

 வணக்கம்! என் பெயர் சங்கர். என்னைப்பற்றி நீங்கள் இன்னும் விவரம் அறிந்துகொள்ள ஆசைப்படலாம், ஆனால் எனக்கு இரயிலுக்கு நேரம் ஆகிறது. இன்னும் அரை மணிநேரத்தில் நான் தாம்பரம் இரயில் நிலையம் அடையவேண்டும். இப்பொழுது துரிதமாக பேருந்து நிறுத்தம் நோக்கி நடப்பதால் சற்று மூச்சு வாங்குகிறது. என்னுடன் நீங்கள் பயணம் செய்தால் என்னைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம். விரைவாக நடந்ததால் ஐந்தே நிமிடத்தில் பேருந்து நிருத்தம் வந்துவிட்டோம். ஆம் அது ‘தாம்பரம்’ என்று பலகையில் எழுதப்பட்ட மாநகராட்சி பேருந்துதான். நேரம் இரவு