கதையாசிரியர் தொகுப்பு: உமா மகேஸ்வரி

2 கதைகள் கிடைத்துள்ளன.

அது

 

 வெறுமையில் வெளிறிய வானம், தன்னில் எதுவுமே இல்லை என்று கைவிரித்துக் கிடந்தது. மொட்டை மாடியின் கட்டைச் சுவர் ஈரக் கரும்பச்சை நிறத்தில் இந்த உச்சி வெயிலிலும் தண்மை உள்ளோடியிருந்தது. “பானு…” என்று வட்ட விளிம்பில் பெயர் பொறித்த வட்டிலில் பருப்புச் சாதமும், பட்டாணிப் பொரியலும் வைத்து என்னை மாடிக்கு ஏற்றிவிட்டிருந்தாள் அம்மா. ஆரம்பப்பள்ளி நாள்களில் ஸ்கூல் மெஸ்ஸூக்குக் கொண்டு போகவென்று, அம்மா தினமும் காலையில் புதிது போல் துலக்கிய வட்டிலையும், டம்ளரையும் அவரவர் பையில் எடுத்து வைப்பாள்.


மரப்பாச்சி

 

 பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் – எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகumamaheswariரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள்