Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 26, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

பன்னிரண்டாம் இரவு

 

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னுரை ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர் தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. இந் நான்காம் புத்தகத்தில் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night), சிறுபிழையால் நேர்ந்த பெருந்தொல்லை (Much Ado About Nothing), சரிக்குச் சரி (Measure for Measure), ரோமியோவும் ஜுலியட்டும் (Romeo and Juliet) ஆகிய நான்கு கதைகளும் வெளிவருகின்றன. இவை இளைஞர்கள் படித்து இன்புறத்தக்க


மார்ஷல் ரோடு

 

 அந்த ரோட்டுக்கு பெயர் ‘மார்ஷல் ரோடு’ எக்மோரில் உள்ளது. இப்பொழுது அந்த ரோட்டுக்கு பெயர் வேறு. ராஜரத்தினம் ஸ்டேடியம் வந்தபின் அந்த ரோட்டுக்கும், அந்த பெயரே நிலைத்துவிட்டது. வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று அந்த ரோட்டில் இருந்தது என நண்பன் ரவி கூற கேட்டு அங்கு சென்றேன். அவன் அந்த தகவலை என்னிடன் கூறியதற்கு காரணம் உள்ளது. நான் வானொலித் தொடர்பான எதைப் பார்த்தாலும் என்னிடம் கூறு என்று கூறியிருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் அவனிடம்


சங்கம வேளையில்…

 

 சனிக்கிழமை விடியற்காலை மணி 5.30. மூச்சு இரைக்க ஓடி வந்த வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் எழும்பூர் ஸ்டேஷனில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. ராஜரத்தினமும் சிவகாமியும் தம்முடன் கொண்டு வந்த லக்கேஜ்களுடன் கீழே இறங்கினார்கள். இனி, அவர்கள் பஸ் பிடித்து திருவொற்றியூர் செல்ல வேண்டும். சரவணனும் சங்கீதாவும் போர்வைக்குள் வெற்றுடம்புடன் முடங்கி கிடந்தனர். உடுத்தி இருந்த லுங்கியும், நைட் கவுனும் கட்டிலிலிருந்து நழுவி தரையில் விழுந்து கிடந்தன. சங்கீதா வலது புறமாக ஒருக்களித்து காலை மடக்கி தூக்கம் கலைந்தும்


மீண்டு வந்த தோடி!

 

 அந்த அதிகாலை வேளையில் முள்ளியாற்றின் கரையில் படபடப்போடு காத்திருந்தான், ஏகலைவன்! சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் முள்ளியாற்றுக்கோ அளப்பரியா சந்தோஷம். இரண்டுக்கும் ஒரே காரணம் தான். ஆம், டி.என்.ராஜரத்தினம் பிள்ளை! இசையை ரசிக்காத ஜீவன்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்ன? அதுவும் தோடி ராகம் புகழ் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்றால், ஜில்லா அத்தனையும் அவர் முன் கை கட்டி நிற்குமே! தோடியும் பிள்ளை அவர்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா? பிள்ளை அவர்கள் தோடி ராகத்தால் புகழின் உச்சம் தொட்டவர்.


நேர்த்திக்கடன்

 

 அர்ச்சனா வாசலில் செருப்பை கழற்றி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். மணி சரியாக இரவு எட்டு பத்து. அர்ச்சனாவின் பதினோரு வயது மகன் நகுல், கணவன் நிரஞ்சன் மற்றும் மாமியார் ஹாலில் அமர்ந்திருந்தனர். நிரஞ்சன் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். உஷ்..அப்பாடா..என்று சோபாவில் அமர்ந்தவளை பார்த்து “என்ன டிபன் செய்ய போற?”..என்றான் நகுல். இரு ஏதாவது செய்யறேன்..என்றவளிடம் “ஏதாவது டேஸ்டா செய்” என்றான் சத்தமாக. நான் தான் வெங்காயம் தக்காளி எல்லாம் ஏற்கனவே வெட்டி வச்சிட்டேனே.. குருமா வைக்க


குடையைக் கண்டனீங்களோ?

 

 “குடையைக் கண்டனீங்களோ?” –வழமை போல ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கடைக்குப் புறப்படும் போது இடம்பெறும் குடை தேடு படலம் தான்- “குடையைக் கண்டனீங்களோ?” வீட்டுக்கும் கடைக்கும் இடைத்தூரம் அதிகமில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு மூன்று நிமிட நேர நடை அல்லது மூன்னூறு மீற்றர் தூரம். ஒவ்வொரு நாளும் சொல்லி வைத்தாற் போல ஆறு மணிக்குப் போகத்தான் வேணும்-தினசரிப்பேப்பர் எடுப்பதற்கு. மழைபெய்யயில்லை..மழைக்குணமும் இல்லை. ஆறு மணிக்கு வெய்யில் அடிக்காதென்றும் தெரியும். ஆனாலும் ஒரு


மாற்றான் தோட்டத்து மலர்

 

 காலை பத்து மணிப் பொழுது – திருவாட்டி தில்லைக்கூத்தனுக்குப் போரடிக்க ஆரம்பித்து விட்டது. எட்டு மணிக்கு முதலே அவர் அலுவலகத்திற்குப் போய் விடுவார். அவர் நின்றால் பொழுது போவதே தெரியாது – காலை ஆறுமணிக்கே கட்டிலுக்குக் கோப்பி கொண்டு போக வேண்டும். “இஞ்சருங்கோ …. எழும்புங்கோ ….. நேரம் போட்டுது, கிடக்கிறியள்”. அவர் எழுந்து, படுத்தபடியே கைகளை உயர்த்தி சோம் பல் முறித்துக்கொண்டு, எழும்புவதற்கு விரும்பாதவர் போல மீண்டும் குப்புறப் படுத்து விடுவார். “எழும்புங்கோ!…இதென்ன குழந்தைப் பிள்ளையள்


குழந்தை காந்தி

 

 இந்தியா என்றால் உலகத்தில் அங்கங்கே உள்ள ஜனங்களுக்கு இரண்டு பொருள்கள் ஞாபகத்துக்கு வரும். இமயமலை இருக்கிறதே, அது ஒன்று. அதைப்போல உயர்ந்த மலை உலகத் திலே வேறு எங்கும் இல்லை. மற்ருென்று மகாத்மா காந்தியின் பெயர். ஒருகால் இமயமலை சில பேருக்குத் தெரியாமல் இருக்க லாம். ஆனல் மகாத்மா காந்தியைத் தெரியாத தேசமே இல்லை. நம் இந்தியாப் படத்தில் இடப்பக்கத்தில் கிட்டத்தட்டப் பாதியில் காதுபோல ஒரு பாகம் இருப்பதைப் பார்க்கலாம். அந்த இடத்துக்குக் கூர்ஜரம் என்று பெயர்.


புத்திசாலி..! – ஒரு பக்க கதை

 

 அந்த மளிகைக் கடை, கல்லாவில் உட்கார்ந்திருந்த சந்திரா, தன் கணவன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் பொருட்களை தராசில் எடை போட்டு நிறுத்துக் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒருவித இறுக்கம் பரவத் தொடங்கியது. வாடிக்கையாளர்களில் சிலபேர், முணுமுணுத்தபடி பொருட்களை வாங்கிக் கொண்டு போவதைக் கவனித்தாள். ‘ஊகும், இவர் தேற மாட்டார் போலிருக்கே..?!?’ என்று நினைத்தவள், கணவனிடம், ‘நீங்க போய் கல்லாவுல் உட்காருங்க, நான் கொஞ்ச நேரம் வியாபாரத்தைப் பார்க்கிறேன்…!’ என்று சொன்னாள். அவளிடம் பொருள்களை வாங்கிக்


சாக்ரடீஸ்

 

 (இதற்கு முந்தைய ‘பதிவிரதை’ காந்தாரி கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). இன்றைய இந்து சமுதாயத்தில் பெரிய கொடுமையாக இருப்பது வரதட்சிணை வாங்கும், கொடுக்கும் வழக்கமாகும். இதில் விந்தை என்னவென்றால் சாஸ்திரங்களில் வரதட்சிணை கொடுப்பது பற்றி எந்த விதியும் இல்லை! அதைவிடப் பெரிய விந்தை என்னவென்றால் தமிழ் இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் ஆண்கள்தான் பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துள்ளனர். மனுதர்ம சாஸ்திரம் எழுதப்பட்ட காலத்திலும் இந்த வழக்கம் இருந்தது. பெண்ணின் அப்பா வரதட்சிணை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால்