வாயுரை உதவியா, கையுறை உதவியா
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 779
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1118ஆம் ஆண்டு மலையாள நாட்டில் பஞ்சத் தால் துன்புற்ற மக்களுக்கு உதவிபுரியும்படி கூட் டப்பட்ட கூட்டம் ஒன்றில் இளைஞரும் மங்கைய ரும் பலர் முன்வந்து மலையாள மக்களின் துயரை விரித்துப் பேசினர். இன்னும் பலர் அவர்கள் மீது தமக்கு ஏற்பட்ட இரக்கத்தை வானளாவப் புகழ்ந்து கற்பனைக் கோட்டைகள் கட்டினர். இவற்றை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கிழவி மேடையேறி நின்று, “என் நண்பர்களே, என்னிடம் இரக்கம் மிகுதியாக இல்லை. இதோ இவ்வளவுதான் இருக்கிறது,” என்று பத்து ரூபாத் தாள்கள் இரண்டினை எடுத்து மேடைப் பலகை மீது வைத்தாள்.
அதற்கு மேல் எல்லாரும் வெறும் பேச்சுப் பேச வெட்கித், தம்மாலானதைக் கொடுக்கத் தொடங்கினர். விரைவில் அக்கிழவியின் புண்ணி யத்தால் ஒரு நல்ல தொகை சேர்ந்து மலையாளத்து ஏழை மக்களுக்கு உதவியாயிற்று.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.
தொடர்புள்ள சிறுகதைகள்
வேந்தர்க்கு வேண்டும் குணம்
வளர்கவி
July 5, 2026
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026