ஞயம்பட உரை
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 98
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஞயம்பட – இனிமை பொருந்த, உரை – நீ பேசுவாயாக.
ஒரு காட்டு வழியில் இனியன், முனியன் என்று இரண்டு பிள்ளைகள் மாடு மெய்த்துக் கொண்டிருந்தார்கள். இனியன் எப்போதும் எவரிடமும் இனிமையாகவே பேசுவான். வழி விசாரிப்பவர்களுக்கு நயமாகப் பதில் சொல்லுவான். முனியனுக்கு நயம் என்பதே தெரியாது. யாராவது வழி விசாரித்தால் துடுக்காகப் பதில் சொல்லுவான். கேலி பண்ணிச் சிரிப்பான்.
அவ்வழியே ஒரு வள்ளல் வண்டியில் வந்தார். முனியனைப் பார்த்து இங்கு ஏதாவது குளம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு முனியன், இங்குக் குளமும் இல்லை. கிளமும் இல்லை. உனக்குக் குளம் காட்ட நீ வைத்த ஆளா நான்? என்று துடுக்காகப் பேசினான்.
அப்போது, சற்றுத் தூரத்தில் இருந்த இனியன் அங்கு வந்தான். வள்ளலைம் பார்த்து, தங்களுக்கு என்ன ஐயா வேண்டும் என்று இனிமையாகக் கேட்டான். அவர் குளம் காட்டச் சொன்னார். உடனே இனியன், நீங்கள் இங்கேயே இருங்கள் ஐயா என்று சொல்லிவிட்டுத், தான் போய்த் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான்.
வள்ளல் இனியனுடைய நயத்தைக் கண்டு மெச்சினார். அவனைத் தம் விட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றார். பள்ளிக்கூடத்தில் படிக்கவிட்டார். தம் சொந்தப் பிள்ளையைப் போல் வளர்த்து வந்தார். (ஆகையால்)
நயமாகப் பேசினால் நன்மை உண்டாகும்.
எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அறம் செய விரும்பு
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஆறுவது சினம்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஈவது விலக்கேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
