இணக்கம் அறிந்து இணங்கு
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 79
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு தோட்டத்தில் ஒரு பசுமாடு இருந்தது. அதற்கு அழகான கன்றுகுட்டி ஒன்று உண்டு. அது துள்ளித் துள்ளிக் குதிக்கும். அம்மா என்று அழகாக அழைக்கும். ஒருநாள் கன்றுகுட்டி ஒய்யாரமாய் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியெ ஒரு பன்றிக்குட்டி வந்தது. கன்றைப் பார்த்து, என்னையும் சேர்த்துக்கெண்டு விளையாடக் கூடாதா என்று கெஞ்சியது. கபடற்ற கன்றுகுட்டியின் மனம் கரைந்து விட்டது. அன்றுமுதல் இரண்டும் விளையாடிக் கொண்டு வந்தன. ஆனால் பசுவிற்குப் பிடிக்கவில்லை. பன்றியோடு கூடவேண்டாம் என்று கன்றுக்குப் புத்தி புகட்டி வந்தது. கன்று கேட்கவில்லை.
ஒருநாள் பன்றிக்குட்டி கன்றுகுட்டியை அழைத்துக் கொண்டு சென்றது. சேற்றில் புரட்டி விளையாடியது. தான் தின்னும் மலத்தைத் தின்னும்படியாகக் கன்றையும் வற்புறுத்தியது. பன்றியின் பேச்சைக் கேட்டுக் கன்றும் கொஞ்சம் மலம் தின்று பார்த்தது. அதற்கு அது ஒத்துக்கொள்ளவில்லை. உடனே வாந்தி எடுத்தது. பன்றி பயந்து ஓடிவிட்டது.
இச்சேதி பசுவிற்குத் தெரிந்தது. தன் கன்றைப் பார்த்து, அந்தப் பாழாய்ப்போன பன்றிக் குட்டியோடு ஏன் சேர்ந்தாய்? அதனால் தானே வாந்தி வந்தது என்று வைதது. அன்று முதல் கன்றுகுட்டி பன்றிக்குட்டியோடு சேர்வதில்லை. (ஆகையால்)
நல்ல தன்மை உடையவரோடே சினேகிக்கவேண்டும்.
எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அறம் செய விரும்பு
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஆறுவது சினம்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஈவது விலக்கேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
