கண்டு ஒன்று சொல்லேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 80 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்டு – நடந்த ஒன்றைப் பார்த்துவிட்டு, ஒன்று- – நடக்காத (காணாத) வேறு ஒன்றை, சொல்லேல் – நீ சொல்லாதே. 

ஓர் ஊரில் கந்தன் என்று ஒரு பையன் இருந்தான். அவனுக்கு ஒரு தம்பி உண்டு. இருவரும் குறும்புக்காரர்கள். தெருவில் நாய்களைக் கண்டால் கற்களை யெடுத்துப் போடுவார்கள். அவற்றின் காதுகளைப் பிடித்துத் தூக்குவார்கள். அப்படிச் செய்யக் கூடாது என்று பலமுறை அவர்களின் தகப்பனார் கண்டித்திருக்கிறார். அவர்கள் கேட்பதே யில்லை. 

ஒருநாள் தெருவில் ஒரு வெறிநாய் படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். கந்தன் அதன்மேல் ஒரு கல்லை யெடுத்துப்போட்டான். அது வள் என்றது. மெலும் அதன் காதைத் திருகப் போனான். அது கையை நன்றாகக் கடித்துவிட்டது. இரத்தம் “தொர தொர” என்று ஒழுகியது. கந்தன் வீடு சென்றான். தகப்பனார் என்ன காயம் என்று கேட்டார். அவன் பயந்து கொண்டு. அண்டை வீட்டு ஆளி கடித்து விட்டான் என்று நடக்காததைச் சொன்னான். தம்பியும் அண்ணனைப் போலவே கண்டதை மறைத்துக் காணாததைச் சொன்னான். 

தகப்பனாருக்கு நாய் கடித்தது தெரியாது. தெரிந்திருந்தால் அதற்கேற்ற வைத்தியம் செய்திருப்பார். இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் பிள்ளைகள் உண்மையைச் சொல்லவே யில்லை. கடைசியில் விடம் முற்றியதால், கந்தன் நாய்போல் குலைத்து இறந்து போனான். (ஆகையால்) 

கண்டதை மறைத்துக் காணாததைச் சொல்லக் கூடாது. 

எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *