சத்தியதின் குரல் கேட்கும் சாந்தியே வரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 7,991 
 
 

அண்ணன் ஏன் இவ்வாறு சொன்னார் என்று மதுவுக்குப் புரியவில்லை. அவர் நன்கு படித்தவர் தான். அந்தக் காலத்து பி ஏ பாஸ் செய்த மகா, கெட்டிக்காரன். பேசும் போது சுத்த வெளி மறந்து போன ஒரு மயக்கச் சுழலினுள் தான் சிக்குண்டு அவரும் பேசுவதாகப் பட்டது. பேசும் போது வேதம் கூறாவிட்டாலும் வீண் பேச்சுப் பேசினால், அது ஒரு தப்புக் கணக்குத் தான் அப்படி அவர் என்ன சொல்லி விட்டார், இந்த மதுபாஷினியிடம்.

ஆம் அவர் சொன்னது வேதமல்ல, நிலையற்ற வாழ்கை மறந்து போட் அவர் சொன்ன, அந்த வார்த்தையைக் கேட்டு, மதுவுக்கு ஆழ்ந்த மனவருத்தத்துடன் சிரிக்கவும் தோன்றியது.

மதுபாஷினியிடம் காசைப் பற்றிய, பேச்சு ஒரு முறை வந்தபோது ஏக்கமாக அவர் சொன்னார்.

மது உனக்கு ஒன்று தெரியுமே? உமா, காசுக்கு மேலையல்லே படுக்கிறாள்.

இது என்ன விசர்க் கதை காசு வரும் போகும் வாழ்க்கையும் அப்படித் தான் மனிதன் இருப்பே கேள்விக் குறியாக இருக்கிறது. அதை மறந்து நிலையாமை பற்றிய. பிரக்ஞை கொஞ்சம், கூட இல்லாமல், யாரைப் பார்த்து, என்ன கதை சொல்கிறார் இந்த அண்ணன். உமா பணக்காரியாகவே இருந்து விட்டுப் போகட்டும். இந்த மேலான வாழ்க்கை நிரந்தரமானதா என்பதே, இங்கு கேள்வியாகிறது. அவர் போட கணக்குக்கு ஒத்திசைவாய் பேச, மதுவிற்கு குரல் வரவில்லை. அவருக்கு மறுப்புச் சொல்லி ஒரு வார்த்தை கூட, அவள் பேசியறியாள். அதிலும் அவர் பி ஏ படித்து தமிழை சிறப்புப் பாடமாக படித்துக் கற்றுத் தேறிய கல்விமாக விளங்கும் அவருக்கா இப்படி ஒரு புத்தி இடறல். இதை மறுத்துப் பேசுகிற தைரியம் வராமல், வெகு நேரம் வரை அவள் மெளனித்துப் போயிருந்தாள் சலனமற்ற, தெளிந்த ஆகாசம் போல் விளங்கும்.

அவளின் உள் இருப்பை பரீட்சித்து பார்பது போல அவரின் இந்தக் கதை வெகு நாள்வரை அவளைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது.

உமா அவளின் சொந்த மச்சாள் அவள் போல் இல்லாமல், உச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஓர் ஒளி தேவதை அவள் நடந்தாலே பணம் காய்க்கும் உலகில் எல்லாமே பணமென்றான, பின் நிலையாமை பற்றி, மனிதர் மறந்து போவது சகஜம், தான் ஆனால், நிறையத் தமிழ் படித்துசுத வெளியையே, கண்டு விட்டது போல், அவரின் நிலை. எனினும் சாதாரண மனிதன் போல் தான் அவர் இருப்பு என்று நினைக்கிறது போது, அவர் மீது பரிதாபம் தான் மிஞ்சியது இது மட்டுமல்ல, இதையும், தாண்டி அழகு ஆராதனை செய்யவும் அவருக்குத் தெரியும் அவர் பேச்சிலேயே அதைப் புரிந்து கொள்ளலாம். இந்த அழகும் எத்தனை நாளைக்கு உடல் வீழ்ந்தால், அதுவும் வெறும் கனவு தான்.

இந்த பேருண்மையை, பேரறிவைஅறியாதவனெல்லாம். அஞ்ஞானி தான் அது அண்ணனுக்கும் பொருந்தும் காலம் தான், இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

இது நடந்து, ஒரு யுகம் சென்றிருக்கும், அண்ணனும் உயிரை விட்டு, நீண்ட, நாளாகிறது. அன்று அவர் சொன்ன பொய், மதுவின் மனதில் புரையோடிக் கிடந்தது. கண்ணுக்குள் ஒரு பணக்காரியாக, பட்டுத் தேவதையாக உமா ஒளிர்ந்து பிரகாசிப்பது போல் தோன்றினாலும் அதைப் பொய்யாகிவிடுவது, போல், திடீரென்று கண்ணுக்கு முன்னால், அந்த சோக சம்பவம் நடந்தேறிய போது மதுவாக, நிலை குலைந்து தான் போனாள். உண்மையில் உமா அவளுக்கு? நெருங்கிய இரத்த உறவு ஒன்ற விட்ட தங்கை இருந்தாலும் அவள் அண்ணன் கூறியது போல் அவள் எங்கோ துருவத்தில், அதை அண்ணாந்து பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிற நிலையில் மது இல்லாமல், போனது சிறந்த ஒரு வாழ்க்கை வரம். காலுக்கடியில் மண் புதைந்து போவது போல் மனிதர்களது நிலைமை. அதை நிதர்ஸனமாக்குவது போலவே உமாவுக்கு நேர்ந்த பெரும் வீழுக்காடு அண்ணன் [போட்ட கணக்கின்படி, கணக்கின்படிஅவள் பணக் குவியலாலும் அவளைக் காப்பாற்ற முடியாமல், போனதையிட்டு மன வருத்தம் தான், மிஞ்சியது மதுவுக்கு.

உண்மையில் உமா எவரும் மிஞ்சாத அளவுக்கு பெரும் பணக்காரிதான். உல்லாச தேவதையாக ஒரு சொர்க்க நாயகியாக அவள் பதித்து விட்டு சென்ற தடங்கள் இப்போது மதுவின் கண்களையே சூறையாடிக் கொண்டு, போகும் விதமாய், முற்றிலும் களை இழந்து காடு பற்றிக் கிடக்கிறது. கொழும்பிலே, பெரும் பணக்காரர்களின் வாழ்விடமான கறுவாக்காட்டில், அவள் வாழ்ந்த சொகுசு வீடு கூட, இப்போது, ஆளில்லாமல் சூனியம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

உமாவின் புருஷனுக்கு பெரும் பதவி ஒரு புகழ் பெற்ற, தொழிலதிபராய் இருந்து திடீரென்று மாரடைப்பு வந்து அவர் முடி சாய்ந்த, பின், உமா நடுத் தெரு நாயகியாக, அவுஸ்திரேலியாவில் அவல வாழ்க்கை வாழ்கிறாள். பெயருக்குத் தான் அவளூக்கு பிள்ளைகள் கொரொனோவைக் காரணம் காட்டி, அவர்கள் அவளைத் தனிமரமாய் விட்டு நீண்ட, காலமாகிறது. ஒரு அடுக்கு மாடி தொடரில் தான் அவள் வீடுதானே சமைத்து உண்டு மிகுதி நேரம் எப்படிப் பொழுது கழிகிறதோ தெரியவில்லை. அண்ணன் அன்று கூறிய பொய் எடுபடாமல், அவள் அப்படி வாழ்ந்த கதை, ஒரு சாகாப்தமாகவல்ல, சகதியே குளித்து நிற்கிறது. இதை இந்த நிலையாமை வாழ்க்கை அனுபவங்கள் பற்றி, அன்று அண்ணன் உள்ளார்ந்த மனத் தெளிவோடு அறிவு பூர்வமாக உணர்ந்து, அறிந்திருந்தால், உமாவின் நிலையற்ற இருப்பு பற்றி இப்படியொரு நடைமுறை வாழ்க்கை அனுபவங்களுக்குப் பொருந்தாத ஒரு பொய்யை இவ்வாறு கட்டவிழ்த்து விட்டிருப்பாரா. இன்று அவர் சொன்ன அந்தப் பொய்யுரைக்கு மாறாக, உமா நடுத் தெரு நாயகியாக மண்ணில்லல நரகத்தில் வீழ்ந்து கிடக்கிறாளே. அவள் வாழ்ந்த வாழ்க்கையென்ன காரில் வந்து இறங்கும் போது ஒரு பளிங்கு தேவதையாகக் காட்சி அளித்ததற்கு மாறாக, பெற்ற பிள்ளைகளே, அவளைப் புறம் தள்ளி விட இந்த வயதான, காலத்தில் அவள் தனிமரமாக,……இப்படி எத்தனை நாளைக்குத் தான் அவள் உயிரோடு இருப்பாள்.

ஊரிலேயே மாளிகை மாதிரி பெரிய வீடு இருக்க, அவளைக் கரை ஒதுங்கிப் போக வைத்து விட்டதே விதி. மதுவிக்கு இது குறித்து பெரும் ஆதங்கமே இருந்தது. யாரும் மெய்யறிவு பற்றி சிந்திப்பதில்லை தார்மீக வாழ்க்கையின் உயிரோட்டமான தெய்வீக இருப்பையே பொருட்படுத்தாமல், கண்டதே காட்சி கொண்டதே, கோலம் என்றாகி, விட்டதே மனிதனின் போக்கு அண்ணா கூட இதற்கு விதி விலக்கல்ல. நெஞ்சிலே கல் எறிந்த, மாதிரி, அன்று அவர் சொன்ன வார்த்தை, எடுபடாமல், இன்று உமாவின் நிலைமை. இது பற்றி, நிறையக் கேள்விகள் எழுந்தன மதுவின் மனதில். அவை மறைபொருளாகவே போயின உண்மையான சத்திய இருப்புக்கு முன் எல்லாம் தலை குனிகிற மாதிரி வரட்சி காய்கிறதே இந்த மண்ணில், இது குறித்து ஆழத் துளைக்கும் கேள்விக் கணைகளிலேயே மனம் குமுறி வெடிக்க, ஒரு தினம், கண் முன் உமா தோன்றினாள்.

பச்சை வண்ணத் திரையில் அந்தப் பழைய, பளிங்கு வார்ப்பு போலில்லாமல், முகமே பொலிவிழந்து பூச்சிழந்து பொட்டிழ்ந்த விதவைக் கோலம் மெசன்ஞர் திரையில் களையிழந்து மதுவின் கண்களில் வெறிக்க. கொழும்பிலிருந்து பூரண அன்பு வசப்பட்டு அவள் அமைதியாக கேட்டாள்.

என்ன உமா யோசிக்கிறாய்?

ஒன்றுமில்லை.

பொய் சொல்லாதை நீ தனியனாகிப் போனாய், எனக்குத் தெரியும் உன் வெறுமை இருப்பு உனக்கு நேர்ந்த இழப்புகளின் வலி, எவ்வளவு குரூரமானதென்று. இதற்குப் போய் கழுவாய் சுமக்கிற நிலை உனக்கு வரக் கூடாதென்று நான் பிராத்தனை செய்கிறேன்.

அதற்கு அவள் சொன்னாள் இப்படி வருமென்று கொஞ்சம், கூட நான் சிந்திக்கேலை. இதுக்கு என் விதி தான் காரணம்.

விதியல்ல இதற்கு ஆரோக்கியமான சிந்தனையுள்ள ஒரு மனிதன் தான் தேவை , மனிதனுக்குப் பொத்தி கெட்டால் நாம் எங்கே போய் விழுவோமென்று தெரியாது இது தான் நிதர்ஸனம், கசப்பான உண்மை எப்பவும் போலியைக் கண்டு மயக்கினால், நீயல்ல வாழ்க்கை இப்படித்தான் அடி சறுக்கும் நிஜம் பற்றிக் கொள்ளும் போது தான் காடு வெறிக்க களைச்சு நிக்கிற கோலம் வெறும் கனவாகவே போய் விடும்.

இந்த நினைப்பிலே நீ மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான் என்றாள் மது. ஆகாய நினைப்பில் உலா வரும் களிப்பு மாறாமல் அதன் பிறகு அதைக் கேட்க விரும்பாமலோ என்னவோ அங்கே அந்த சொர்க்கபுரி மண்ணிலிருந்து, அவள் அடியோடு மறைந்து, போனாள். இடை விடாத ஒரு வேதவாக்காகவல்ல வாழ்க்கை.

விழுமியங்களை மறந்து பேசிய அன்றைய அண்ணனின் குரல் எல்லாம் ஒழிந்து போன பற்றைக்காட்டினிலிருந்து ஒற்றைக் குரலாக, மதுவின் காதுகளில் கேட்பது போல் படவே, அது கேட்டகத வண்ணம் ரேடியோவைத் திருகி, சப்ததத்தை அடர் சஞ்சாரமாக ஒலிக்க, விட்ட தருணத்தில் ஆழந்த மெளனம் அவளுள் குடி கொள்ள. அதை உள் வாங்கிய சிலிர்ப்புடன் கண்களை மூடி அவள் ஒரு தபஸ்வினி போல வீற்றிருந்த அந்த பொழுது ஒரு யுகமாகவே நீடித்துக் கரைந்தது அதன் பிறகு வெகு நேரம் வரை அவள் கண்களைத் திறக்கவேயில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *