நீதிக்கு தண்டனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2026
பார்வையிட்டோர்: 42 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

டேய்.. இந்தப் பக்கம் பாரு. ஏன் அவளையே பாக்கிற. என்கூட வரும்போதே இவ்வளோ சைட் அடிக்கிறயே, உன்ன தனியா விட்டா அவ்வளோதான். எனக்கு டாட்டா காமிச்சிட்டு ஓடிடுவே. உன்ன நம்பி எப்பிடிடா கழுத்த நீட்டறது.

ஹேய்..ச்சீ.. அசிங்கமா யோசிக்காத. எல்லாரும் பாக்கிறா மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்தா என்ன பண்ணுவாங்களாம்.. நான் மட்டுமா பாக்கிறேன். அதோ பாரு.. இந்த பார்க்குல அவள பார்க்காத கண்களே இல்ல. அப்பறம் டிரஸ் பண்ணிக்கிறது எங்க உரிமை.. அது.. இதுன்னு சட்டம் பேசுவீங்க. ஒருத்தர பாக்கிறதாலேயே அவன் கெட்டவன் ஆயிட மாட்டான்..

பல மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த வாக்குவாதம் இன்று ப்ரீத்தியின் முன் நிழலாடியது. இவளது காதலன் ராகுல் போலீஸ் காவலில் இருக்கும் இச்சமயம்..

இவரு எப்பிடிமா.. ஆளு? உன்னோட லவ்வர்ங்கிறான். போலீஸ் விசாரணையில் அவன் மீது வெறுப்பை உமிழ்ந்தாள். மேலும் கூறினாள்.. இவன் செஞ்சிறுப்பான்னு தான் தோணுது இன்ஸ்பெக்டர்..

ராகுலின் அப்பாவும் அம்மாவும்.. அய்யா எங்க பையன் அப்படி பட்டவன் இல்ல. அந்த பொண்ணு அபான்டமா பழி போடறா. நாங்களே பாத்திருக்கோம், டியூஷன்ல ஒரு இந்திக்கார பையனோட ரொம்ப நெருக்கமா பழகுவா இந்தப் பொண்ணு என்று எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் பெண்தரப்பு புகாரின் அடிப்படையில் FIR பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார் இன்ஸ்பெக்டர்.

என்ன வழக்கு?

ராகுல் நடத்தும் டியூஷன் சென்டரில் படிக்கும் பெண் தான் மானஸா. தன் வயிற்றில் வளரும் கருவிற்கு ராகுலே காரணம் என்பதே புகார். டியூஷன் சென்டர் சக மாணவர்கள் விசாரணையில்.. ராகுல் சற்றே அதிகமான பாசத்துடன் தான் மானஸாவுடன் பழகுவார் என்று கூறுவதை காவல்துறை கணக்கில் எடுத்துக் கொண்டது. எப்படியும் குற்றத்தை நிரூபித்து விடலாம் என்ற எண்ணத்தில் இன்று FIR பதிவு செய்து ராகுலை ஜெயிலில் தள்ளியது.

ராகுல் தரப்பு வழக்கறிஞர் ஜெயிலில் ராகுலை சந்தித்து விவரங்களை கேட்டார். பல குறுக்கு கேள்விகளுக்கு ராகுல் தந்த பதிலால் அவன் அக்குற்றத்தை செய்திருக்க வாய்ப்பில்லை என்று திடமாக நம்பினார் அவனது வக்கீல்.

மாதங்கள் ஓடின. கையில் கைக்குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனாள் மானஸா. நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு கொஞ்சமும் மனம் தளராமல் ராகுல்தான் குற்றவாளி என்று திரும்பத் திரும்ப ஆணித்தரமாக கூறினாள்..

ராகுல் தரப்பு வக்கீலின் குறுக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

உங்க பேர் என்ன?

மானஸா..

இதோ நிக்கறாரே ராகுல்.. இவரை எவ்வளவு நாளா தெரியும்.. இவர் மேலே ஏன் குற்றம் சுமத்தரீங்க..

இவரோட டியூஷன் சென்டர்லதான் பல வருடங்களா போயிட்டிருந்தேன். நீங்களே விசாரிச்சு பாருங்க சென்டர்ல.. இவரு எனக்கு எவ்வளவு நெருக்கம்னு உங்களுக்கே தெரியும்.

இந்த போட்டோல இருக்கிற நபர தெரியுமா என்று இவளுடன் டியூஷன் சென்டருக்கு வந்து படித்த வடமாநிலத்து இளைஞன் ஒருவனின் போட்டோவை வக்கீல் காட்ட..

ஹும். பாத்திருக்கேன் சென்டர்ல.. குல்தீப் இவன் பேரு. இவன் கூட எல்லாம் நான் அவ்வளவு நெருக்கம் இல்ல..

நான் நெருக்கமான்னு கேக்கவே இல்லையேம்மா.. அது சரி நெருக்கம்தான் என்று நிரூபிக்கிற நேரம் வந்தாச்சி.. நீ போய் உக்காருமா நான் திரும்ப கூப்பிடறேன்.

அங்கே தொலைவில் ஒரு டாக்டர் அமர்ந்திருப்பதை பார்த்து திகைத்துப் போன மானஸா.. பீதியில் போய் உட்கார்ந்தாள்.

லேடி டாக்டரிடம் நடந்த விசாரணையில் ராகுல் யாரென்றே தனக்கு தெரியாத என்றும்.. குல்தீப் புகைப்படத்தை காட்டி கேட்ட போது குல்தீப்பை தெரியும் என்றும் கூறிய டாக்டர் மேலும் கூறினாள்.. கருவை கலைக்க மானஸாவுடன் தனது கிளீனுக்கு வந்ததாகவும்.. கலைக்கும் உடல்தகுதி மானஸாவுக்கு இல்லை என்று கூறி அனுப்பி விட்டதாகவும் வாக்கு மூலம் தந்தாள் அந்த லேடி டாக்டர்..

ஊருக்கு பயந்து உயிருக்கு பயந்து எதாவது ஆகிவிடுமோ என்று ஒளிந்து ஊருக்கே ஓடிய குல்தீப்பை போலீஸ் டீம், அவனை அவனது ஊருக்கே சென்று பிடித்து வந்திருந்தது.

அங்கிருந்த டவாலி, குல்தீப்.. குல்தீப்.. குல்தீப்.. என்று மூன்று முறை அழைக்க போலீஸ் எஸ்கார்டுடன் கோர்ட் வளாகத்தில் நுழைந்ததை பார்த்த மானஸா அவன் மீது

வெறுப்பை உமிழ்ந்தாள். கோர்ட்வளாகம் என்றும் பாராமல் ஓடிவந்து பளார் என கன்னத்தில் அறைய.. காவலர்கள் அவளை தடுத்து அமர வைத்தனர்..

குல்தீப்பின் குறுக்கு விசாரணையில் உண்மைகள் வெளிவர ராகுல் விடுவிக்கப்பட்டான்.

விசாரணை முழுவதும் பார்த்துக் கொண்டிருந்த ப்ரீத்தி.. ஓடிவந்து ராகுலை இறுகப் பற்றினாள்..

அவளது கைகளை விடுவித்த ராகுல்.. இவ்வளவு நாள் பழகியும் நம்ம காதலை கொச்சை படுத்தி போலீசிடம் எனக்கு எதிராக வாக்குமூலம் தந்த உனக்கு கணவனாக இருப்பதை விட…

சில நொடி அமைதிக்குப் பிறகு…

மானஸா கையில் இருந்த குழந்தையை கையில் வாங்கிக்கொண்டு புறப்படத் தயாரானான்..

சார் என்ன மன்னிச்சிடுங்க என்று காலில் விழுந்த மானஸாவை தூக்கி எழுப்பி கூறினான்… தப்பாவே இருந்தாலும் உன்னோட செயலில் ஒரு நேர்மை இருக்கு. நீ உனக்கு வாழ்க்கை துணை தேடல. உன் குழந்தைக்கு அப்பாவா இருக்க நான் தகுதியானவன்னு நெனச்சியே.. Hats off.. வா போகலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *