உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 14,114 
 
 

கோழி கூவ வில்லை. கோயில் மணி கேட்கவில்லை. காலை இளம் காற்றுக்கு முற்றத்து மல்லிகை முகம் கொடுக்கவில்லை. தெருக்களில் நடமாட்டம் இல்லை. ஏன் சத்தம் இல்லை. அவள் இலங்கையிலுள்ள தனது வீட்டிலிருந்து அதிகாலையை லண்டனில் எதிர்பார்க்க முடியாது என்று லட்சுமி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

இது லண்டன். எங்கேயோ டிரெய்ன் ஓடும் சத்தம் கேட்கிறது. இன்னும் கார்களின் சத்தம் ஆரம்பிக்கவில்லை. சுவர் கடிகாரத்தில் அலார்ம் குnளாக் சில சிவப்பு நம்பர் கால 5 மணி என்று கண்சிமிட்டியது. லட்சுமி அப்போது எழும்பிவிட்டாள்.

அவள் முதுமை சிலவேளை அவள் எங்கிருக்கிறாள் என்ற நினைவைக் குழப்புகிறது. பழைய நினைவின் எதிரொலிப்புகள் அவள் நெஞ்சில் நெருப்புக் கணைகளhகத் தாக்குகின்றன. நிகழ் காலம், எதிர்காலம் என்பவையின் யதார்த்தம் தெரியாத இறந்த கால நினைவுகள் அவளை ஆட்டிப் படைக்கின்றன.

இலங்கையில் எத்தனை தாய்மார் இரவுகளை பகலாக்கி துடித்துக் கொண்டிருப்பார்கள். இன்று என் மகன் திரும்பி வருவானென்று எதிர்கால எதிர்பார்ப்பில் எத்தனை தமிழ் தாய்கள் பெருமூச்சு விடுவார்கள்?

லட்சுமியின் கண்களில் நீர் குளம் கட்டியது. இன்று அவளால் மறக்க முடியாத நாள். மறக்க முயல்வதால் திரும்பத் திரும்ப நினைத்து நிகழ்ச்சிகள் சிலயாய்ப் படிந்து விட்டன அவள் சிந்தனையில். விம்மல் வெடிக்க பார்த்தது. அவளின் விம்மல் சத்தத்தில் பக்கத்து அறையில் படுத்திருக்கும் அவள் மகள் சிவசக்தியும் அவள் கணவன் இராமநாதனும் எழும்பி விடுவார்கள் என்பதால் அவள் தன் விம்மலை அடக்கிக் கொண்டாள். ஆனால் ஏனோ அவர்களும் இன்று அதிகாலையில் எழும்பிவிட்டார்கள் என்று தெரிந்தது.

லட்சுமியின் அடி வயிற்றில் ஒரு நோ. இப்படித்தான் 30 வருடங்களுக்கு முன்னால் துடித்தாள். மகனின் பிரசவ வேதனையில் துடித்தாள். அவன் பிறந்த அன்றே அவன் ஏதோ காரணத்தால் இறந்திருந்தால் லட்சுமி அந்த வேதனையை ஒரு வருடத்திலோ இரண்டு வருடத்திலும் மறந்து விட்டு இருக்கலாம். அவளின்பிரசவ வேதனையில் துடித்தபோது. கடைசியாகத் தாயின் உயிர் முக்கியமா குழந்தை முக்கியம் என்று மருத்துவர் போராடும் போது அவள் தனது மகன் உயிருடன் பிறக்க வேண்டுமென்று எத்தனை கடவுளை வேண்டிக் கொண்டாள்?

ஆபத்பாந்தவனே அவதார புருஷனே என் குழந்தையைக் காப்பாற்றித்தா? என்று கதறினாள். அந்த கதறல்களுக்கு. செவி கொடுத்து ஆண்டவன்; அருளிய செல்வமான அவளின் மகனின் 20 வயதில் எமதூதர்கள் போல் இலங்கை ராணுவம் இழுத்துக் கொண்டு போன போது அவளின் கதறலை ஆண்டவன் ஏன் மறந்து விட்டான்?

தூரத்தில் இன்னுமொரு ரெய்ன் ஓடிய சத்தம். பக்கத்து அறை திறக்கப் படும் சத்தம். லட்சுமியின் மகள் சிவசக்தியின் கணவர் எழும்பியிருப்பார்.

தன் அறைக் கதவு திற படாதா? ‘அம்மா நான் கோயிலுக்கு போயிட்டு வாரேன் அம்மா’ என்று அவள் அருமை மகன் ராகவன் சொல்ல மாட்டானா? இறந்தவர்கள் திரும்புவார்களா? என் மகன் திரும்பி வரமாட்டானா? பேதைத் தாயின் புலம்பல் இது.

அவனை விசாரணைக்குக் கொண்டு போகிறோம் என்று சொன்னானே அந்த திமிர் பிடித்த சிங்கள அதிகாரி. அவன் என் குழந்தையை என்ன செய்திருப்பான். எத்தனை கொடுமைகளை என் மகன் எதிர் கொண்டிருப்பான்?. பக்கத்து வீட்டு பையனைத் தங்கள் வாகனத்தில் கட்டித் தெருவில் இலங்கை ராணுவம் இழுத்துக் கொண்டு போனபோது அவன் தசையும் நிணநீரும் ஊர் தெருவில் கோலம் போட்ட கொடுமை என்ன?

‘அம்மா தேநீர் போடட்டுமா?’ லட்சுமியின் மகள் சிவசக்தி உருவம் அறை வாசலில் நிழல் தட்டியது. முன் அறையின் வெளிச்சத்தில் அவள் உருவம் ஒரு சிலை போல் தெரிந்தது. மகள் சிவசக்தி அவளின் ஒரே ஒரு மகன் ராகவன்; பிறப்பதற்கு இரண்டு வருடங்களின் முன் பிறந்தவள்.

லட்சுமி – செல்வராசா தம்பதிகளுக்கு, கல்யாணி, காயத்ரி, சிவசக்தி என்று மூன்று பெண் குழந்தைகள். அவள் கணவன் ‘மூன்று பெண் தெய்வத்தை பெற்று தந்த தாயே’ என்று அவளை அணைத்துக் கொண்டான் அப்போது. திரிபுரசுந்தரிகள் மாதிரி பிறந்த நாளிலிருந்து மூத்த மகள் காயத்திரி முதல் மகள் என்ற செல்லத்துடனும் இரண்டாம் மகள் கல்யாணி பெண்மையின் மென்மையின் லலிதம் உடம்பெல்லாம் பிரதிபலிக்கும் அழகுடன் வளர்ந்தவர்கள். தாய் தந்தையர் தெரிவு செய்த எதிர்காலத்தைத் தலை குனிந்து ஏற்றுக் கொண்டவர்கள்.

கடைசி மகள் சிவசக்தி அவளின் பெயருக்கேற்ப மற்றவர்களை அன்புடன் அரவணைக்கும் கனிவான சக்தியுடன் வளர்ந்தவள். அவள் லட்சுமியின் மூன்றாம் குழந்தையாக தனது வயிற்றில் வந்ததும் இந்தக் குழந்தையென்றாலும் ஆண் குழந்தையாகப் பிறந்தால் சிவகுமாரன் அல்லது சத்தியமூர்த்தி என்று பெயர் வைப்பதாக பிரார்த்தனை செய்திருந்தாள் லட்சுமி. குழந்தையும் பெண்ணாக பிறந்த போது மகனுக்காக நினைத்து வைத்திருந்த பெயர்களின் ஞாபகமாக சிவசக்தி என்று பெயர் வைத்தாள்.

சிவசக்தி பிறக்கும்போது அவளின் மற்ற மகள்களுக்கு வயதுகள் ஏழும் ஒன்பதும்அவர்கள் முழுநேரப் பாடசாலைக்குப் போகத் தொடங்கி விட்டார்கள் அதனால் சிவசக்தி தாயின் முழுக்கவனத்திலும் ஒரு தேவதைமாதிரி மிக மிக அன்புடன் வளர்க்கப்பட்டாள். அவள் தனது வயிற்றில் இருக்கும்போது அந்தக்குழந்தை ஒரு ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை சிவசக்தியின் அழகும் அறிவும் மறக்கப் பண்ணியது. சிவசக்தி அவளது தமக்கைகளை விட வித்தியாசமாகவிருந்தாள்.

ஆறு வயதிலேயே தகப்பன் செய்யும் சில விடயங்களக்கு உதவ முன்வருவாள் சிவசக்தி.

‘’உனக்கு ஆண்குழந்தை வேண்டுமென்றாய்.அது ஒரு அழகிய பெண்ணுருவில் வந்திருக்கிறது’’ என்று வேடிக்கையாகச் சொன்னார் லட்சுமியின் கணவர். தனது தாயை மிகவும் புரிந்து கொண்ட ஒரு நுணுக்கமான அறிவுள்ள சிறு குழந்தையாக வளர்ந்தாள் சிவசக்தி.

அவள் பிறந்து இருவருடங்களில், லட்சுமி பிரார்தனை செய்ததுபோல் ஒரு ஆண் குழந்தை பிறந்தபோது அது தனக்கு சிவசக்தியின் அதிர்ஷ்டத்தால் பிறந்தது என்று மனதுள் நினைத்துக் கொண்டாள் லட்சுமி. தனது தம்பி.கவனை அள்ளி அணைத்து விளையாடினாள சிவசக்தி.

ராகவனை இராணுவம் இழுத்துக்கொண்டு போன நாளிலிருந்த சிவசக்தி பட்ட துன்பம் சொல்லில் அடங்காது. ஆனால் தங்கள் ஒரே ஒரு மகனையிழந்த பெற்றோர் தாங்காத துயரில் தவித்தபோது தனது துயரை அடக்கிக் கொண்டு அவர்களைப் பராமரித்தாள் சிவசக்தி.

‘அம்மா தேநீர் போடட்டுமா?’ சிவசக்தி தாயின் மறுமொழிக்காக இன்னும் கதவடியில் காத்திருக்கிறாள். சிவசக்திக்குத் தனது தாய் இப்போது என்ன நினைத்துக் கொண்டு துயர்படுவாள் என்று தெரியும். இன்று அவளின் தம்பி பிறந்த தினம்.அத்துடன். இலங்கை இராணுவத்தினால் அழைத்துச் செல்லப்பட்ட நாளும் இன்றுதான். 20 ஆம் பிறந்தநாளை கொண்டாட தாயிடம் ஆசிர்வாதம் வாங்க பல்கலைக்கழகத்திருந்து வந்தவனை காலன் தேடி வந்தானா? அது நடந்து 10 வருடங்கள் ஆகி விட்டன.

அப்போது இலங்கை ராணுவம் பயங்கரவாதிகளைத தேடுவதாகப் பல நாட்கள்; ரோந்து என்ற பெயரில் ஊழிக் கூத்தாடத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்றும் தாய்க்கோழிகள் மாதிரி தமிழ்த் தாய்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாக்கத் துடித்தார்கள். லட்சுமியும் தன் குஞ்சுவைக் காப்பாற்ற துடித்தாள். முடிந்ததா? லட்சுமியின் கண்ணில் நீர் நிறைந்து கன்னங்களில் புரண்டது. சிவசக்தி இன்னும் அறை வாசலில் நின்று கொண்டிருக்கிறாள். அவள் தனது தாயின் வேதனையை புரிந்து கொண்டவள்.

‘அம்மா’ என்றழைத்தபடி தாயின் கதவடியில் அவள் பதிலுக்காகக் காத்திருந்த சிவசக்தி தனது தாயின் கட்டிலில் வந்து உட்கார்ந்தாள். பல்கலைகழகப் படிப்பை முடித்துக் கொண்டு சிவசக்தி தனது எதிர்காலக் கனவுகளுடன் வீடு திரும்பியபோது அவளின் தம்பியை இராணுவம் இழுத்துக்கொண்டுபோனது.

அப்போது அவளின் இருதமக்கைகளும் திருமணமாகி வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள். துயராற் துடித்த தாயைத் தன் அணைப்புக்குள் பராமரித்த தாயாக மாறியவள் சிவசக்தி.இப்போது தனது தாயைப் பார்த்தபடி மவுனமாகவிருந்தாள். அவள் கணவர் அதிகாலையில் அதிக தூரத்திற்கு வேலைக்குச் செல்பவர். அவர் போய்விட்டார். தாயைக் கனிவுடன் பார்த்தாள் சிவசக்தி. மகள் ஏதோ சொல்லப் போகிறாள் என்பதை அவள் தாய் லட்சுமிக்கு தெரிந்தது.

‘அம்மா. நாங்க இன்டைக்குக் கோயிலுக்குப் போவமா?’ சிவசக்தி நேரடியாக தாயைப் பார்த்து கேட்டாள். லட்சுமி துயருடன் தன் மகளைப் பார்த்தாள். கண்களில் நீர். முகத்தில் சோகம். தாயின் தவிப்பு மகளுக்கு புரிந்தது. ‘என் மகன் உயிருடன் பார்க்கும் வரை எந்த இடமும் நகரமாட்டேன்’ என்று இலங்கையில் இருந்த தாயை லண்டனுக்கு அழைக்க சிவசக்தி பட்ட பாடு ஏராளம்.

கடந்த 10 வருடங்களாகலட்சுமி கோவிலுக்கு போவதில்லை. கடவுள் தன்னை வஞ்சித்து விட்டதாக ஒரு ஆத்திரம். கோயில் பக்கம் போக மாட்டேன் என்று பிடிவாதம்.

‘எத்தனை வருடம் கடவுளிடம் கோபிக்க போகிறீர்கள்? மகள் கேட்டாள். தாய் மறுமொழி பேசவில்லை. வெறுமையாக தன் பார்வையை அங்குமிங்கும் செலுத்தினாள்.

‘’இந்தக் கொடுமையை இலங்கையில் பிறந்த எத்தனையோ தமிழர்கள் அனுபவிக்கிறார்கள் அதற்காக கடவுளை கோபித்து என்ன பயன்?’’

32 வயது மகள் தன் நடு வயது தாயை கேள்வி கேட்டாள். சில தமிழர்கள் தங்கள் கடவுளர் தங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்பதால் இன்னுமொரு கடவுளைத் தேடுவது சிவசக்திக்குத் தெரியாதா?

அந்த அடுத்த தெருவில் இருக்கும் தமிழர் குடும்பம் இப்போது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்து விட்டார்கள். ‘இந்துக்களாக வாழ்ந்து எத்தனையோ கடவுளரை வணங்கியும் என்ன கண்டுவிட்டோம்’ என்ற ஆத்திரம் அவர்களுக்கு. கொழும்பில் எல்லாவற்றையும் இழந்த கோபம். சமயம் மாறியதால் அதன் மூலம் சில சலுகைகள் லண்டனில் கிடைத்தன. அவை பழகிய கலாச்சாரத்துக்கு இழப்புக்களை ஈடுசெய்யுமா?’ மகளின் கேள்வியில் எத்தனையோ பதில்கள் இருப்பது அந்தத் தாய்க்குத் தெரியும்.

லட்சுமியின் குடும்பத்துப் nபண்ணொருத்தியும் அண்மையில் வேற்று மதம் மாறிவிட்டாள்.சிங்கள இராணுவம் செய்த கொடுமையை மறக்க அந்த இளம்பெண் புதிய சமயத்தை புது உலகத்தை காண யோசிக்கிறாளா?

லட்சுமி தன்னை வஞ்சித்த கடவுளிடம் கோபமா? எத்தனை ஆசையாய் அவள் மகனப் பெற்றெடுத்தாள். அவள் தனது திரிபுர சுந்தரிகளுக்குத் தம்பியாகப் பிறந்த மகனுக்கு என்ன பெயர் வைப்பது என்று திணறி பிரசவ வேதனையில் துடித்த போது உதவிக்கு கூப்பிட்ட கண்ணனை நமஸ்கரிக்க அவன் நாமம் சூட்ட யோசித்தாள். கிருஷ்ணனுக்கு எத்தனை நாமம். அதில் எதைத் தேர்ந்தெடுக்கலாம்? என்ன பெயர் சொல்வது ? மகிமை வரும் மாதவன் என்பதா? மன வசீகரமான மனோகரன் என்பது என்றழைப்பதா? குழலூதும் கண்ணன் என்பதா? குறும்புக்காரகோபி மாதிரி இருந்தால் அவனைக் கோவிந்தன் என்பதா? யாதும் செய்யும் ஜனார்த்தனன் என்பதா அல்லது மகா வலிமை படைத்த நாராயணன் என்பதா?

லட்சுமி ஆசை தீர அன்பு கனிய பாசம் வழியே பக்தி பரவசத்துடன் ராகவன் என்று பெயரிட்டாள் அவனின் வெளிச்சமான எதிர்காலத்துக்கு எத்தனை பிரார்த்தனை செய்தாள்? ராகவனுக்கு ஒரு மைதிலி வரும் நாளை கற்பனை செய்தாள். என்ன கொடுமை ராகவனுக்கு என்ன நடந்தது?

லட்சுமி அடி வயிறு குலுங்க குலுங்க அழுதாள். மகள் சிவசக்தி வேதனையில் அழும் தனது தாயைத் தாங்கிக் கொண்டாள்.வெளியில் விடி வெளிச்சம் தெரிகிறது. இப்படி ஒரு காலையிலதான் சிங்கள அரசாங்கம் கதவை தட்டியது. இவளின் அருமை மகனை ராகவனை இழுத்துக் கொண்டு போனது.அதைத் தொடர்ந்து, ராகவன் மாதிரி எத்தனை செல்வங்கள் அழிந்து விட்டார்கள். இந்த கொடுமைகளைத்தான் தாங்காமல் லட்சுமி வீட்டுக்குள்ளேயே துறவியாகி விட்டாள். அதைத் தொடர்ந்து பல மாற்றங்கள். பாதுகாப்புக்காக சிவசக்தி தன் கணவருடன் லண்டன் வந்தபோது அவளுடன் வர லட்சுமி மறுத்து விட்டாள். கடைசியாகப் படாதாபாடுபட்டுத் மகள் சிவசக்தி தனிமையில் தவித்த தாயை லண்டனுக்கு எடுத்து விட்டாள். ஆனாலும் தாயின் மனமாற்றத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

லண்டன் குளிர். அவசரமான வாழ்க்கை நிலை. சில தமிழர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை என்பன லட்சுமியை மேலும்; குழப்பியது. எதையும் பார்க்க விரும்பாமல் வீட்டோடு அடைந்து கிடக்க பழகி விட்டாள். லண்டன் வாழ்க்கையே லட்சியம் என்று சிந்தித்து அதற்காக எதையும் செய்யும் மனிதர்களைக் கண்டதும் இந்த மாயா உலகத்தை அருவருப்பாகப் பார்த்தாள் அந்தத் தாய்.

‘அம்மா வாழ்க்கையைpல் பலதும் நடக்கும் பழையவற்றை நினைத்து நினைத்து வீட்டுக்குள் அடைந்து கிடப்பதால் ஒரு மாற்றவும் வந்துவிடப்போவதில்லை’. சிவசக்தி தனது தாய்க்கு இப்படி எத்தனையோ முறை சொல்லி அலுத்து விட்டாள்.

10 வருடங்களாகியும் மகன் இறந்து விட்டான் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள் லட்சுமி. என்றோ ஒரு நாள் திரும்பி வருவான் என்ற நப்பாசை அவளுக்கு. லட்சுமியின் மற்ற இரண்டு மகள்மாரும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தங்கள் தாய்க்குப் புத்திமதி சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

சிவசக்திக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் குழந்தையும் இல்லை. அந்த துன்பத்தை அவள் தாயிடம் பகிரக் கூட முடியாமல் தாய் தன்னை யதார்த்தத்திலிருந்துதுண்டித்துக் கொண்டு துறவும் செய்கிறாள். மகளின் குரலில் சோகம் தாயின் தலையைநிமிர பண்ணியது.

‘அம்மா புலி வாலில் சிக்கிய மான் குட்டி உயிர் பிழைப்பது இல்லை. சிங்கள இராணுவம் எங்கள் தமிழ்ப் பையன்கள்யை உயிருடன் புதைத்தவர்கள் அவர்களிடம் போன தம்பிக்காக எவ்வளவு காலம் காத்திருப்பாய்? தாயும் மகளும் அழுதார்கள்.

‘அம்மா நீங்க தம்பியை நினைத்து மற்றவர்களை மறந்து விட்டீர்களா? கல்யாணிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவளின் குழந்தைகளில் தம்பிiயக் காணவில்லையா? காயத்ரியின் மகன் தம்பியை அப்படியே அச்செடுத்த மாதிரிப் பிறந்திருக்கிறான். உனக்கு முன்னால் வளரும் குழந்தைகளை வாழ்த்துவதற்கு பதில் உன்னையே வருத்திக் கொண்டிருக்கிறாயே?’

சிவசக்தி பேராசிரியர் மாதிரி தாய்க்குப் பிரசங்கம் செய்தாள்..

‘அம்மா தம்பி நினைவில் உன்னை சிறை வைப்பதால் என்னையும் சிறைப்பிடித்து வைத்திருக்கிறீPர்கள் என்று புரியவில்லையா?’

மகளின் குரலில் சோகம் தாயைச் சுண்டி இழுத்தது. ‘தம்பியின் ஆத்மா சாந்தி அடைய அவனுக்குரிய அந்த சடங்குகளை செய்ய மறுப்பது சரியா’

கேள்வி கேட்கும் மகளை மௌனமாகப் பார்த்தாள் தாய்.

மகள் தாயின் கையைத் தனது வயிற்றில் எடுத்து வைத்தபடி சொன்னாள் ‘அம்மா நீங்கள் இன்றைக்கு கோயிலுக்கு வரவேண்டும் செத்துப்போன தம்பிக்காக அழுதது போதும் பிறக்கப் போகிற உங்க பேரனுக்காக வாழ முடியாதா’? மகள் தன் தாயிடம் மனம் விட்டுக் கதறினாள்.

மகளின் வயிற்றிலிருந்த தனது கையை எடுக்காமல் கண்களை மூடினாள் லட்சுமி. அவள் விம்மல் இருதயத்தைப் பிழந்தது. மகள் தனது முதற்குழந்தையைத் தரிதிருக்கிறாள்.

சிவக்தியின்; கணவன் லட்சுமியைத் தனது தாய்க்கு மேலாகப் பராமரித்தவன். லட்சுமியின் மகன் ராகவன் உயிரோடிருந்து தனக்கு ஒரு மனைவி வந்ததும் சிவசக்தியின் கணவன் மாதிரித் தன்னைப் பராமரித்திருப்பானா?. லட்சுமியின் மனதில் சட்டென்று பல கேள்விகள் வந்து போயின.

தம்பி மறைந்த துன்பத்தால் வாடும்; பெற்றோரைப் பராமரிக்கத் தனது பட்டப் படிப்பினால் வரக் கூடிய உத்தியோகத்தைத் தியாகம் செய்தவள் சிவசக்தி.அவள் கணவன் அவளைப் பல்கலைக் காலத்திலிருந்து காதலித்தவன். rpவசக்தி தனது பெற்றோரைப் பராமரித்தபடியால் சில வருடங்கள் அவளுக்காகக் காத்திருந்தவன். கடைசியாக இலங்கையில் போர்நிலை கடுமையானபோது நாட்டை விட்டு வெளியேறத் தனது அன்புக் காதலி சிவசக்தியைக் கெஞ்சி மன்றாடித் திருமணம் செய்து கொண்டு லண்டன் வந்தவன். அவர்களுக்கு ஏழுவருடங்களுக்குப் பின் இப்போதுதான் குழந்தை வந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியைத் தாயுடன்; பகிர்ந்து கொள்ளக்கூட அவர்களால் முடியாமலிருப்பது வேதனையான விடயம்.

‘அம்மா நீங்கள் கொடுமைகளுக்கு பயந்து கூண்டுக்குள் அடைபட்டு வாழ்வதால் எங்கள் இனத்திற்கு என்ன? நடக்கும் கொடுமை நின்றுவிடுமா?உங்களின் பேரக் குழந்தைகளிடம் இருந்து வாழ்க்கையை துண்டித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த செய்கையால் அதர்மம் அழிந்து விடுமா?’’

தாய் மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளின் சிந்தனை மகளின் கேள்விகளால் உலுக்கப் பட்டு விட்டது என்பதை அவள் உணரத் தொடங்கினாள். லட்சுமியின் வாழ்க்கையில் ராகவனைப் பிரிந்த பேரிடி வர முதல் தன்னுடன் பல்கலைக் கழகத்தில் படித்த இராமநாதன் என்ற வாலிபன் தன்னை விரும்புவதாகவும் அவன் மேற்படிப்புக்காக லண்டன் செல்லவிருப்பதாகவும் அற்;கு முன்னால் சிவசக்தியைத் திருமணம் செய்தால் அவளை லண்டனுக்கு அழைத்துச் செல்லும் வேலையைப் பார்க்கலாம் என்று சொன்னதாகவும் தனது பெற்றோருக்குச சிவசக்தி சொன்னாள்.

ஆனால் அந்த விடயம், ராகவனின் மறைவால் தனது பெற்றோரின் சிந்தனையில் பெரிதாக எடுபடவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சிவசக்தி அவர்களைப் பராமரிப்பதில் கவனத்தைச் செலுத்தினாள்.

ஆனால் சில வருடங்கள் காத்திருந்த இராமநாதன் சிவசக்தியைத் திருமணம் செய்யமுடியாத நிலை வந்து விடுமோ என்றஞ்சிய அவனின் பெற்றோர் அவளுக்கு வேறு பெண்ணைப் பார்க்கத் தொடங்கினர்.அதனால் சிவசக்தியின் தகப்பன் தனது மகளை அவள் விரும்பிய இராமநாதனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அதன்பின் சிவசக்தி தனது கணவருடன் லண்டனுக்கு வந்து சில மாதங்களில் அவளின் தகப்பன் மாரடைப்பால் அகால மரணமடைந்தார்.

பிடிவாதம் பிடித்த தாயை இலங்கையிலிருந்து மிகக் கஷ்டப்பட்டு லண்டனுக்கு அழைத்தாள். வாழ்க்கையின் பல நெருக்கடிகளாலான மன உழைவோ என்னவோ சிவசக்திக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தை வரவில்லை.

கணவர் செயற்கை கர்ப்பம் பற்றிப் பேசத்தொடங்கியதும் அவள் அதிர்ந்து விட்டாள்.

அவள் பிரச்சினையைப் பகிர்ந்து கொள்ள அவள் தாயின் மனநிலை சரியில்லை என்பதால் சிவசக்தி பட்ட மனத்துயர் அடங்காது. ஆனால் இப்போது அவளின் பல்லாண்டு வேண்டுதலால் கடவுள் கண்திறந்தாரோ என்னவோ அவள் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வருகிறது. ‘அம்மா என்னைப் புரிந்துகொள். வாழ்க்கையில் இருளும் பகலும் இயற்கை. நான் என் உயிர் இருக்கும்வரையும் எனது தாயை எனது மகள் மாதிரிப் பார்த்தக் கொள்வேன் எனக்கு நானே உறுதி செய்திருக்கிறேன்’ சிவசக்தி விம்மினாள்.

அவள் தனது வயிற்றில் அவளின் எதிர்காலத்தைச் சுமந்து கொண்டு தனது தாயின் ஆசிர்வாதத்தை எதிர்பார்க்கும் பரிதாபம் லஷ்மியை நெகிழப் பண்ணியது. வெளியில் லண்டன் தெருக்கள் ஆரவாரமாகத் தொடங்கி விட்டது.

‘நான் மட்டுமா ஒரு மகனை இழந்தேன். இலங்கையில் பல தமிழ்த் தாய்கள் என்னைப் போல் எத்தனையோ கொடுமைகளுடன் போராடிக் கொண்டுதான் வாழ்கிறார்கள்.. வாழ வேண்டிய வயதில் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த வீரர்களுடன் என் மகனின் தியாகம் ஒன்றாகட்டும். உயிரோடு போய் இன்னும் திரும்பாத ஒரு தமிழ்த் தலைமுறையின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் என்னுடைய மகனும் ஒருத்தன்.

லட்சுமி மகளின் தேம்பலுடன் தானும் சேர்ந்து கொண்டு மகளின் வயிற்றைத் தடவிக் கொடுத்தாள்.

தனது வாழ்க்கையைப் பெரிதுபடுத்தாமல் இரவு பகலாகத் தன்னைப் பராமரித்த தன் மகளைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் லட்சுமி;. லட்சுமியின் அன்பான மகளுக்கு ஆசிர்வாதம் செய்தாள். மற்றவர்களைத் தன் அரவணைப்பில் துயர்தீர்க்கும் சிவசக்தியின் அன்பான உள்ளத்தை ஆசிர்வதித்தாள்.பாடசாலை செல்லும் குழந்தைகளின் ஆரவாரம் கேட்கிறது. அவை இன்று லட்சுமிக்கு அருமையான வீணையொலி மாதிரிக் காதுகளில் கேட்கின்றன.

லஷ்மி இன்றைக்குத் தன் கர்ப்பவதி மகளுடன் கோயிலுக்குப் போவாள். ‘மறைந்துபோன’ தனது மகனின் ஆத்மா சாந்தியடையவும் பிறக்கப் போகும் தனது பேரக் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் அவள் பிரார்த்தனை செய்வாள். பத்துவருட துறவறத்தையகற்றிய தனது மகளை அன்புடன் அணைத்துக் கொண்டாள் லஷ்மி. தனது மகள் உள்ளத்தில் மிகவும் நல்ல உள்ளம் கொண்ட அற்புதமான பெண் என்பதை நினைத்துப் பெருமையுடன் தனது கர்ப்பவதி மகளைப் உளம் நிறைந்த பாசத்துடன் முத்தமிட்டாள் லட்சுமி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *