கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா..கிருஷ்ணா!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 5,911 
 
 

காலை ஒன்பது மணி இருக்கும் மகளைக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிட்டு வீடு திரும்பினாள் திவ்யா!

அதிகாலை குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புவது என்பது பெரிய பிரச்சனை, ரோடு பிஸிக்கு வீடியோ கேம் விளையாடறா மாதிரி விளையாடி பிள்ளைகளை காரோட்டி விட்டுவிட்டு வீடு வந்து சேர்வதும், அத்தோடு தானும் வேலைக்கும் போவதுமாதிரி இருந்தால், பெண்கள் நிலையை நெனைச்சுப் பார்த்தால், சிம்ம சொப்பனம்தான் வாழ்க்கை.

லிப்டின் ஸ்விட்ச் ஆன்பண்ணி, நாலாம் மாடி பிரஸ் பண்ணி, மேலே லிப்ட் ஏறுவதற்குள் ஏழு முறை போன் பண்ணிவிட்டான் அவன். ‘இருங்க வரேன்!’வந்துட்டே இருக்கேன்னு போனில் சொன்னாலும், கேட்காமல், சீக்கிரம் சீக்கிரம் என்று பரபரத்தான் அவன்.

மேலே ஏறி, வீடு கதவைத் திறக்க காத்திருந்த அவன் முகத்தில் இன்னமும் கடுகடுப்புக் குறையவில்லை.,’ சீக்கிரம் உள்ள எடுத்து வைங்க!’ சிலிண்டரை வாசலில் வைத்தே கொடுத்துவிட்டு, ஓடிபி கேட்டான் கேஸ்சிலிண்டர் கொண்டுவந்த கனகராஜ்.

‘இருங்கண்ணா…உள்ள கொண்டுவந்து வைங்க!’ என்றாள் திவ்யா.

‘உள்ள வேற கொண்டாரணுமா?’

‘ஆமா, என்னைப் பார்த்தா.. பதினைந்து கிலோ சிலிண்டர் வெயிட் தூக்கறாமாதிரியா இருக்கேன்..? உள்ளே கொண்டாங்க பிளீஸ்!’ கெஞ்ச,

‘நாங்க உள்ள போகக்கூடாதுன்னு ஆர்டர். எங்களை யாரும் உள்ளயே கூப்பிட மாட்டாங்க..! நீங்க கூப்பிடறீங்க?!’ அவன் படபடப்பில் இப்போது கொஞ்சம் பயம் தெரிந்தது.

“ஓ…போக்ஸோ.. பயம் போலிருக்கு!?’

‘அதெல்லாம் பரவாயில்லை… நானே வெளியிலிருந்து இப்பத்தான் வந்துருக்கேன். எனக்கும் மூச்சு வாங்குதே?!’ என்றாள் திவ்யா.

‘இல்லை.!. இல்லை! அதெல்லாம் முடியாது! எடுத்து வச்சுக்கோங்க… நானு, இன்னம் ஏகப்பட்ட இடம் போணும்!. எல்லா வீட்டுலயும் நாங்களே இறக்கி வச்சு மாட்டிக் கொடுத்துட்டு, டெஸ்ட் பண்ணிக் காமிக்கறது நடக்கற காரியமா?’ அவன் புலம்ப,

‘கோவிச்சுக்காதீங்க…! சேர்த்துத்தரேன்..!’ கடிவாளம் போட கப்சிப்பானான் கனகராஜ்.

எல்லாருக்கும் எதாவது ஒரு வகையில் கஷ்டம் இருக்கத்தான் செய்யுது. ஆனால், கஷ்டத்தை மறக்கடிக்கிற கடவுள் காசு தானே?! காசே தான் கடவுளடா.!

இப்ப எல்லாரும் ஜீபேயும் ஆன்லைலயும் கேஸுக்குப் பணம் அனுப்பிடறதுனால காசைக் கண்ணாலேயே பார்க்கமுடியலை கேஸ் சப்ளையர்களால.!. அடுத்தவன் காசுன்னாலும் அரைநாள் அது நம்ம கையிலிருந்தா எதோ மகாலட்சுமியே மார்ல இருக்காமாதிரி ஒரு மவுசுதானே?!

சேர்த்துக் கொடுக்க, சிரமம் மறந்தான் கனகராஜ். சிம்ப்பிளிலாய் காரியம் முடித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் திவ்யா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *