கேடு நினைப்பான்… கெட்டழிவான்!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 2,769
(பழைய கதை புதிய பாடல்)

அடர்ந்த காடு ஒன்றிலே
பிடரி சிலிர்த்த சிங்கமும்
இடரைக் கொடுக்கும் நரியுமே
இருந்து வந்த வேளையில்
சிங்கத் திற்கு கொலைபசி
திங்க எதுவும் இல்லையாம்
அங்கி ருந்த நரியையே
அதுவும் தின்ன நினைத்ததாம்!
அந்த சமயம் அங்கொரு
நொந்த கழுதை வந்தது!
இந்த நரியும் கழுதையை
இரையாய் ஆக்க எண்ணியே
திங்க கழுதை தன்னைநான்
உங்க ளுக்கு உதவிட
அங்கு போக என்னைநீர்
அனுமதிப்பீர் என்றது!
கழுதை தன்னை நெருங்கிய
கயமை மிக்க நரியுமே
இருந்த ஆழக் குழியிலே
இறங்கி மறையச் சொன்னது!
நரியை நம்பிக் கழுதையும்
நடுவிலிருந்த குழியிலே
இறங்கிப் படுத்துக் கொண்டதை
இருந்த சிங்கம் கண்டது!
எகிறிப் பாய்ந்து நரியினை
இரையாய் ஆக்கிச் சிங்கமும்
குழியில் கிடந்த கழுதையை
குஷியாய்ப் பின்னர் தின்றது!
காட்டிக் கொடுக்கும் கயவரும்
கால ஓட்டம் தன்னிலே
மாட்டிக் கொள்வர் என்பதை
மனதில் வைப்பீர் என்றுமே!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வெற்றியும் தோல்வியும்
காமேஷ்
April 18, 2026
மனித வாழ்க்கை
அல்போன்ஸ் மோசஸ்
April 18, 2026
ஸதாநந்த போதக சாமியார்
வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்
April 18, 2026
