வெள்ளை நிறத்தொரு பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2026
பார்வையிட்டோர்: 36 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

சென்னை குரோம்பேட்டையில் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள கவிதா மருத்துவமனை . திங்கட் கிழமை மாலை நேரம். ஓர் அறையில் அனுமதிக்கப்பட்டு படுக்கையில் படுத்திருந்த , பருமனான உடல்வாகு கொண்ட இளம்பெண் அழகு நிலா கண் விழித்தாள். அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த ஒடிசலான இளம் செவலிப் பெண்ணைப் பார்த்தாள் அழகு நிலா .

“சிஸ்டர் எனக்கு பயப்படும்டியா ஒண்ணும் இல்லையே…”

“ஒண்ணும் இல்லம்மா… ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டினதால… இடது தோள்ல லேசா அடியோட போச்சு… இனிமே பார்த்து வண்டி ஓட்டுங்க”

“சிஸ்டர்… என்னை யார் அட்மிட் பண்ணாங்க…?”

“பப்ளிக் ல ஒருத்தர் தாம்மா…”

திறந்து இருந்த அறைக் கதவு அருகில் வாட்டசாட்டமான மழித்த முகம் வெள்ளை கேசம் கொண்ட, வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டை அணிந்த நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

நர்ஸ் ‘வாங்க ஐயா’ என்றதும் உள்ளே வந்தார். “இந்த சார்தான் ஒங்கள எங்க ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் பண்ணாரு” அழகுநிலாவிடம் சொல்லி விட்டு அவள் வெளியே சென்றாள்.

உள்ளே வந்த நபர் “இந்தாங்க ஒங்க மொபைல் ஹேண்ட் பேக்… வீட்ல பேசிடுங்க…”

அழகுநிலாவின் முகம் மலர்ந்தது

“ஜெயபிரகாஷ் சார் நீங்களா? நான்தான் அழகுநிலா… சண்டே அன்னிக்கு நீங்க கலந்துகிட்ட தமிழ்த்தென்றல் ஜூம் மீட்டிங்ல ஹோஸ்ட் நான்தானே அழகுநிலா… என்னைத் தெரியலையா? பாரதியார் கவிதை பத்தி ஒங்க பேச்சு நல்லா இருந்துச்சு… அதுவும் வெள்ளை நிறத்தொரு பூனை கவிதை பத்தி பேசினிங்களே… சூப்பர் சார்…”

“அப்படியாம்மா…. நான் ஜெயபிரகாஷ் இல்ல… அவனோட ட்வின் பிரதர் விஜயபிரகாஷ்…”

அழகுநிலாவின் விழிகள் வியப்பில் விரிந்தன.

– ட்வின்ஸ் கதைகள், இரண்டாம் பகுதி.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *