குணமெனும் குன்றேறி நின்றார்!





அண்மையில்தான் அவனுக்கு நண்பரானவர் சபாபதி. அவர். தன் அந்தரங்க விஷயங்களைக்கூட அவனுடன்பகிர்ந்து கொள்ளத் தயங்கிய தில்லை .
ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் அவன் மனதை நெருடிக் கொண்டே இருந்தது.
‘ஏன் இப்படிச் சபாபதி செய்கிறார்? ஒருவேளை தன்னிடம் ஆத்மார்த்தமாகப் பழகுவதுபோல் நடிக்கிறாரோ?

புரியவில்லை.
நட்பைப் பெறுவதைவிட கஷ்டமானது ஒருவருக்குக் கிடைத்த நட்பை இழப்பது.
இதற்கு யாரிடம் தீர்வு பெறுவது? தயங்கினான் அவன்.
அது வேறொன்று மில்லை சபாபதி என்னதான் ஆத்மார்த்தமாக அவனிடம் பழகினாலும், அவர் மது அருந்தப் போகையில் மட்டும் அவனைத் தவிர்த்து வேறு யாரோடாவதுதான் போவார். ஏன்? ஏன் ? ஏன் ? ஒரு கிண்ணத்தை ஏந்துகையில் இவனைத் தவிர்த்தே போவது ஏன்? ஏன் ?ஏன்?
நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள் சதீஷ் அவனுடை கார் மெக்கானிக் அவனைப் பார்க்க வந்தான். காரில் இருந்த ஒருசின்ன வேலை விஷயமாக வந்தவன் இவன் வீட்டுக்குள் வரவே இல்லை, எத்தனை கம்ப்பல் பண்ணி அழைத்தும் வாசலிலேயே நின்று வண்டியில் என்ன சார் செய்ய வேண்டும் கேட்டுக் கொண்டான். இவனும் ஏன் இப்படி ஒதுங்குகிறான். வற்புறுத்தி கேட்டபோது தயங்கியபடியே சொன்னான்.
‘சார் தண்ணி போட்டிருக்கேன் அதன் உங்க பக்கத்துல வரலை’ எனறான்.
‘இதுக்கா இவ்வளவு தயக்கம்.?’ என்று அவன் கேட்க. சதீஷ் சொன்னான்.
‘சார் வாங்க தண்ணி போடலாம்னு சொன்னா எவ்வளவு தப்போ அதைவிடத் தப்பு ,நாம மதிக்கிறவங்க முன்னாடி தண்ணீ போட்டுட்டுப் போய் நெருங்கி நிக்கறது. மரியாதைகெட்டுப்போகுமில்லே?!’ என்று சதீஷ் சொன்ன போதுதான் புரிந்தது.. !
ஓ! அவனை குணத்தில் உயர்ந்தவனாக சபாபதி நெனைக்கிறதுனாலதான் தண்ணி போட அவனை தவிர்திருக்கார் சபாபதின்னு புரிஞ்சது மட்டுமில்ல.
‘தண்ணி போட தன்னை அழைக்கலையே’ன்னு அவன் அங்கலாய்ப்பு பட்டதைவிட அழைக்காமல்விட்ட அவர்தான் குணமெனும் குன்றேறி நின்றவர் என்பது அவனுக்குப் புரிந்தது சதீஷ் மூலமாக!