ஒரு அப்பா அஸ்தமனமாகிறார்!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2025
பார்வையிட்டோர்: 2,979
தலைப்பைப் பார்த்ததும் தவிச்சுப் போயிடாதீங்க! இதைத் தலைப்பாய் வைக்க ஏராளமான காரணங்கள் இருக்கு! என்றாலும், ஒரு முக்கிய காரணத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கதை!
‘கை வீசம்மா கைவீசு! கடைக்குப் போலாம் கைவீசு!ன்னு ஒரு பாட்டை பாலர் பருவத்தில் படித்திருப்பீர்கள்! அது, அப்பா பாடுவதா?! அம்மா பாடுவதா?! பட்டி மன்றமா நடத்த முடியும்?!
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க?! அப்பாதான்னா நீங்க சொல்றது அப்பட்டமான தப்பு! ‘மிட்டாய் வாங்கலாம் கைவீசு! மெதுவாய்த் திங்கலாம் கைவீசு!’ என்று பாடல் தொடரும்! பர்சைத் திறக்கவே பயப்படறவனாச்சே!. அப்பாதான் குழந்தை பொறந்ததுமே கடமை முடிந்தது கல்யாணம் வாழ்க!ன்னு ‘ஹாயா’ கை வீசீட்டுப்போயிடறானே அப்பா!!
அப்பவே அப்பா அஸ்தமனமாகிவிடுகிறான்! அம்மாதான் அதன் ஆசைகளைப் புரிந்து ஆளாக்குகிறாள். பிறந்தது பெண் குழந்தையாய் இருந்து, அதுக்கொரு கல்யாணம் பண்ணி, அதுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அப்பா, மறு ஜென்மம் எடுக்கிறான்! இதுதான் எதார்த்த உண்மை!
அப்போது வேண்டுமானால், கைக் காசைச் செலவு செய்யும் கனிவு அவனுக்குப் பிறக்கும்! அவன் இப்போது, அப்பா இல்லை., தாத்தா!
பெண் பிறந்த போது அவளுக்குச் செய்யத் தவறியதை எல்லாம் அவன் இப்போது பேரன், பேத்திக்குச் செய்கிறான்.
இப்போது யோசித்துப் பாருங்கள்… கைவீசம்மா கைவீசு கடைக்குப் போகலாம் கைவீசு! மிட்டாய் வாங்கலாம் கைவீசு எல்லாம் எதோ எலக்ரோ சிக்கலோ ஈடிபஸ் சிக்கலாலோ மறுக்கப்பட்டது அல்ல…! எக்னாமிக்கல் சிக்கலால்தான்.
எப்படியோ அஸ்தமனமான அப்பா, தாத்தாவாய் மறு ரூபமெடுப்பது மண்ணுக்கும் மனசுக்கும் இதமாய்த்தான் இருக்கிறது!