கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2024
பார்வையிட்டோர்: 216 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீடு நெருங்குகையில் எனக்குத்தான் கண் இருட்டறதா, அஸ்தமிச்சுத்தான் போச்சா? இரண்டு கைகளிலும் பைகளின் சுமைக் கனம் கீழுக்கு இழுத்தது. 

அஸாமி எப்பவோ வந்திருக்கனும். அவர் வரவேளைக்கு நான் வீட்டில் இல்லாட்டா, அவருக்குக் கோபம் மூக்கைப் பொத்துக்கறது. ஆபீஸிலிருந்து வந்தவுடன் – மரக்கடையில் கணக்கெழுதினாலும் நம்மைப் பொறுத்தவரை கச்சேரி தானே,– கோட்டைக்கழட்ட உதவி,சிரமம் விசாரிச்சு, விசிறி எதிரே நிக்கணும். கொஞ்சம் சீலம் தான். ஆனால் அதைவிட எனக்குக் கைக்காரியமும் காலைச் சுத்தற குஞ்சானும் குளுவானும் என்ன தட்டுக் கெட்டுப் போறது? இது ஒண்ணுலே தான் ஆண்டவன் தயவு. ஒண்ணோடு விட்டான். அபயம்னு பேர் வெச்சதும் அபயம் தந்துட்டான். கைச்சுமையை வாங்கினால் தேவலை. 

ஜயா, ஈஸிச் சேரிலே சாஞ்சுண்டு பேப்பருக்குப் பின்னாலே ஒளிஞ்சுண்டால் என்னை எங்கே கண்ணிலே படும்? பட்டாலும் மன்னன் நகரமாட்டான். இந்தப் போஸ் கொடுத் தாலே, ஐயா படுகோவத்துலே இருக்கார். 

உள்ளே வந்து பைகளை இறக்கி, அருகே சுவர் மேல் சாய்ந்தாள், 

“உஸ் அப்பா! வரவர ரொம்ப சிரமமாயிருக்கு. ப்ளாஸ் கிலே ஊத்திவெச்சிருந்தேனே, சாப்பிட்டேளா? அபயா இல்லே? நீங்கள் வந்தாச்சுன்னு எங்கானும் விளையாட ஓடிப் போயிடுத்தா? லர வர அடங்கவே மாட்டேன்கறா! வந்து நேரமாச்சா? பேச மாட்டேளாக்கும்! நான் என்ன செய்ய? நாளை உலைக்கு ஒரு மணி அரிசி லேது. இந்த மாஸம் என்னவோ இப்பவே எல்லாமே தட்டுப் பாடு. ‘இன்னும் நாலு நாள் பொறுத்தும் ஆச்சி தானே வரணும்? வரமாத சாமானை இப்பவே வாங்கிட்டுப் போயிடுஹளேன்! பற்று எளுதற சரக்குக்கு மாதம் முதலேது? கடைசி ஏது? “கன்னத் துள் நாக்கை அடக்கிண்டு நாட்டான் நமுட்டாய்ச் சிரிக் கிறான் சிரிச்சுட்டுப் போறான், வாங்கிண்டு வந்துட்டேன். தூக்கத்தான் முடியல்லே கொஞ்சம் விளக்கைப் போடுங் களேன். மாட்டேளா? இன்னிக்கு சோதனையில் நீங்களும் சேர்ந்துண்டுட்டேளாக்கும்! 

எழுந்து ஸ்விச்சைத் தட்டி விட்டு உட்கார்ந்து. ஒவ்வொரு பொட்டலமாய் எடுக்க ஆரம்பித்தாள். 

“பொட்டலங்களைப் பிரிச்சு, சாமான்களை எடுத்து வைப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் இருக்கு.” 

(பல்லைக் கடித்துக் கொண்டு; என்னதான் பேசு வாளோ?) 

“ஆமாம் அப்படித்தான். அது என் சுபாவம்னு விட்டுடுங் களேன்! எனக்குப் பேசணும். உங்களுக்குப் பொருமணும், கடவுள் எப்படி ஜோடி சேர்த்து வெச்சான் பார்த்தேளா? பொரும் பொரும உங்களுக்குத்தான் வேக்காடு. என்னைப் பாருங்கோ. மனசுலே இருக்கறதை அப்பப்போ கொட்டிட்டு அத்தோடு மறந்துட்டு வளையவரேனோ பிழைச்சேன். உங்கள் வசைகளை சட்டை பண்ணினேனோ அதுகளின் கொக்கியில் மாட்டிண்டு எப்பவோ தொங்கியிருக்கணும். இருப்பது ஒரு உசிர், எத்தனை தடவை தொங்க முடியும்?” 

அவன் புழுங்குவது அவனுக்குத் தெரியும். என் படிப்புக்கும் என் யோக்யதைக்கும் எனக்குக் கிடைத்திருக்கும் வேலைக்கும் யாரைக் குற்றம் சொல்வது? பானை பிடித்தவள் பாக்யம்னு அவள் மேல் தள்ளி விடலாமா? ஆனால் பிறந்ததிலிருந்தே என் ராசியும் ஏப்ராசிதான். ஆனால் இரண்டுமேவா இப்படி? துடைச்சு வாய்க்கணும்? விவாகங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக் கப்படுகின்றன. இது தேறுதலா? தீர்ப்பா? 

அவனுடைய வெகுளித்தனத்தில் அவனுடைய உள் குமுறலைச் சீண்டிவிடுவது போல் ஏதாவது சொல்லுவாள். பார் பார் இப்போக்கூட ஏதோ ‘கிண்டியா யெனம்’ பண்ணு கிறாள்! 

“வர வழியில் அத்திம்பேரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கல்லே. கண்டிருந்தால் வீடுவரை கொண்டு விட்டிருப்பார். எங்கேயோ அவசரமாப் போறார்? நான் தான் காரை எனக்காக நிறுத்த வேண்டாம்னு விட்டுட்டேன்.” 

இவளுடைய தங்கை ஆம்படையானின் கார்ப் பெருமையை இப்படியெல்லாம் எனக்கு இடிச்சாகனுமாக்கும்! தங்கை ஆம்படையான் எப்படி இவளுக்கு அத்திம்பேர் உறவாகும்? கட்டைகுட்டையா தொந்தியும் தொப்பையுமா என்னைவிடப் பெரியவர்ன்னா? எப்படியிருந்தால் என்ன லக்ஷ்மி தாண்டவமாடறாள். இன்னிக்கு நகைக் கடையின் ஸ்டாக்கை எடுத்தால், நாலு தலைமுறைக்கு உட்கார்ந் துண்டே அழிக்கலாம். இத்தனைக்கும் வேலைக்குச் சேர்ந் தப்போ கணப்புச் சட்டியை குழலாலே ஊதத்தானாம். ஆனால் அவள் கொடுக்கணும்னு மனசு வெச்சுட்டாள்னா கூரையைக் கிழிச்சுண்டுதானே கொட்றாள்! ஏங்கிக் கிடக்கற வாளைக் கண்ணெடுத்தும் பார்க்கறாளா? அதுவும் பத்மா வீட்டில் காலை வெச்சதிலிருந்து கோழிப்பு என்று ஒரு பேரை யும் வாங்கிட்டாள். அப்புறம் கேக்கவும் வேணுமா? எல்லாரும் அவளை உள்ளங்கையில் ஏந்தறா. புக்காத்துச் செல்லம் கிட்டி விட்டால் பிறந்தாத்துக்கு மேலே – 

அங்கே சரியான கூட்டம். உறவு, ஓட்டு, வெட்டு, வேலையாள் எல்லாம் சேர்ந்து வேளைக்கு முப்பது இலை விழும் போல் இருக்கு. தயங்கும், தாங்கும், புண்யவானுக்கு மேலும் தாங்கும். ஆள் போட்டுத்தான் சமையல். “ஹரிஹரா! ஹரிஹரா!!’ ஹரிஹரன் வெச்சதுதான் சட்டம், சமையல் காரன் சாமான்காரன், இன்னிக்கு சாயந்திர பீச்சுக்கு சினிமா வுக்கு பாப்ளா தமுக்கடிக்கு கச்சேரிக்கு எந்த ரவிக்கையோடு எந்தப் புடவை சேரும் எனப் பெண்டுகளுக்கு ஆலோசகன், பூஜை சாஸ்திரி மூதலாளிக்கு வலதுகை, தோள், முதுகு எல்லாம் ஹரிஹரம், மார்க்குலையின் நரை நடுவே, மைனர் செயினில், ருத்ராக்ஷம் தங்கக் கட்டில் புரள்றது. ‘டேப்பா, அவன் பண்ற அமுத்தலைப் பாரய்யா! அவன் குதப்பற தழைக்கு வெள்ளிச் செல்லம்னா வெச்சிருக்காம்! இங்கே நம்ம பாடு சிங்கியடிக்கிறது. 

இன்னி சாயந்திரம் இவள் அத்திம்பேரைப் பார்த்தாளா? காலையில் அதே கல் காலில்தான் நானும் இடறி விழுந்தேன். இன்னிக்கு ரெண்டு பேருக்கும் கணக்காச்சு. இன்னிக்கு என் கணக்கே கிழிஞ்சு போயிருக்கணும். அடியில் போயிருந்தால் சட்னி; தொட்டுக்கத் தோசையில்லாமல். 

“அத்திம்பேரே, தெருவில் பார்த்து நடவுங்கள்” அவள் குயில் கூவுகிறாள். பின்ஸீட்டில் அவள் தான் தனி, வேணு மென்றே அவள் சொல்படி, என்னை உராயராப் போல், ட்ரைவர் தன் கை வரிசையைக் காட்டியிருக்கிறான். 

“ஏறிக்கறேளா? கடைக்குக் கொண்டு போய் விடறேன்?”

“ஒண்ணும் வேண்டாம். இவ்வளவு காலையிலே, வேகத்தில் என்ன ஜோலியோ?” 

”குதிரை தினம் ஓடாட்டா, உடல் திமிர்த்துக்குமாம். காரும் அப்படி ஆயிட்டால்? அது தான் என்ஜோலி. அத்திம் பேரே. ஏற்கனவே கேட்க வேண்டாம். அதிலும் என்னிலும் இரண்டு வயது மூத்தவனால் எனக்குப் பிள்ளையிருக்கான், எனக்கு என்ன வேலையிருக்கும், நீங்களே சொல்லுங்கோ-‘ அவள் சிரிப்பு புகைந்தது. ”பெத்தவளுக்கு ஒரே விசாரம் தான். பெண்களை எப்படியேனும் தட்டிக் கழிக்கணும், பிள்ளைகளைப் பொத்தி வெச்சுக்கணும். இவாள் கொடுத்த மாதிரியே வாங்கிக்கும் பெண் இவாள் பிள்ளையைத் தட்டிண்டு போகமாட்டாளா? அது தெரிவதில்லை.’ 

இவள் ஏன் தன் வயிற்றெரிச்சலை என்னிடம் பங்கிட்டுக் கொள்கிறாள், அதுவும் என்னிடம்? இதில் யாருக்குக் கால ணாவுக்கு லாபம்? யாருக்கு யார் தேவலை? இல்லை, இருவரும் யாருக்கும் பொதுவாய், பெற்றவயிறு எனும் யாக குண்டத் தில் ஆஹூதி விட்டுக் கொண்டிருக்கிறோமா? 

பத்மாவே இப்படித்தான். பேச்சில் துடுக்கு, துணிச்சல் காரி. டோண்ட் கேர் மாஸ்டர். ட்ரைவர் காதில் பட்டால்? நான்தான் கவலைப் படுகிறேன். அவன் சிலையாய்ச் சமைஞ் சிருக்கான். பார்வை அவன் மூக்குக்கு நேராய் நெட்டுக்குத்தல். அதனாலேயே அவன் காதெல்லாம் இங்கேதான் தெரியறது. ஆனால் வாயடைச்சிருக்கு. இவளுக்கு முன்னாலிருந்தே இவாள் வீட்டில் இருக்கிறான். பிள்ளை குட்டிக்காரன். பிழைக்கத் தெரிஞ்சவன். இவன் வாங்கும் சம்பளம் என்னிலும் கூடுதலாயிருக்குமோ? 

அவன் சிந்தனைகளை, அவன் மூக்கின் கீழ் ஒரு கரம் நீட்டி வெடுக்கெனக் கலைத்தது. இளைத்த எலும்புக்கை. கட்டைவிரலுக்கும் இடையே ஏதோ ‘பளிச் பளிச்’- 

“இதெப் பாருங்களேன், நன்னாயில்லே?” 

ஆனால் அவன் அதைப் பார்க்க வில்லை. புஸு புஸு என்று பொங்கிய ஒரு பரட்டைத்தலையைப் பார்த்தாள். ஒரு முட்டை எண்ணெய் வைத்து வாரினால்தான் என்ன? பற்கள் வரிசையாயினும், கன்னங்கள் ஒட்டிப் போயிருந் தமையால் பலகை பலகையாய்த் தெரிந்தன. கழுத்து – விண்டு விழுந்துவிடுமோ?-கழுத்தில் ஒரு நரம்பு அவசரமாய் அடித்துக் கொண்டது. 

இன்று காலை பத்மா இப்படியா யிருந்தாள்? அவனுக் குத் திடீரெனப் பயங்கரமான ஆச்சர்யம். இது யார்? 

“பார்க்க மாட்டேன்கறேளே? ப்ளாட்பாரத்தில் வித்துண் டிருந்தான். ஒரு ரூபா சொன்னான். எட்டணாவுக்குக் கேட் டேன். கொடுத்துட்டான் – “இனி அவள் அவனைக் கவனிக்க வில்லை. அவள் கைப்பொருளில் அவள் லயித்து விட்டாள். இனி அவனைப்பற்றி – யாரைப் பற்றியுமே அவளுக்கு அக்கரையில்லை. தானே வியந்து கொண்டு தானே பேசிக் கொண்டிருந்தாள். 

தனக்கே கேட்டுக் கொண்டு (!) 

”அபயாவின் விரலுக்கு சத்தே பெரிசாயிருக்குமோ? இருந்தால் என்ன, நான் என் சுண்டு விரலுக்குப் போட்டுண்டுட்டுப் போறேன். அவளுக்குக் கொட்டாங்கச்சி மோதிரம் இல்லாட்டாத்தான் என்ன? நல்ல காலம் வரப்போ நல்ல மோதிரமே போட்டுண்டுட்டுப் போறாள்” 

தன் அற்ப சந்தோஷத்தில் தன்னை இழந்து அவள் திளைத்துக் கொண்டிருக்கையில், அவள் மேல், அவனுள் மாபெரும் சீற்றம் ஒன்று திரள்வது உணர்ந்தான். தனியாக அவளென்று அவள் மேல் கூட இல்லை. இப்போது அவள், அவளாகப் படவில்லை. தன் அவல வாழ்க்கையின் அவ மானச் சின்னமாக, ஏன், காரணமாகக் கூட அவளைக் கண் டான். ஊழ்வினையோ, அல்ல இப் பிறப்பின் செய்வினை யின் விளைவோ, தன் பாழுக்கும் தவறுக்கும் பழிசுமத்தப் பிற ரைத் தேடுவது மனித இயல்பு என்று அவனுக்கே தெரிந்திருந் தாலும் – இவ்வளவு மரைலூஸூடன் விதி என்னைப் பிணைத்திருந்தால், என்வாழ்வு பின் எப்படியிருக்கும்? அவள் அப்படியிருப்பானேன், இவள் இப்படி’ 

வெடுக்கென அவள் கையிலிருந்து பிடுங்கியெறிந்தான். அது சுவரோரம் மூலையில் எங்கோ இருளில் ‘க்ளிங்’- 

அவன் மேல் வைத்த விழி கொட்டவில்லை. முகமும் மாறவில்லை. அதில் கோபமா, வருத்தமா, அதிர்ச்சியா? எதுவுமே அறியமுடியவில்லை, அவனைப் பார்த்துக்கொண்டே யிருந்தாள். துடைத்துப் பெருக்கி வைத்தாற்போல் வெறிச் சிட்ட முகம் அதில் காங்கையடிக்கும் விழிகள். 

“என்னடி முறைக்கறே?” கையை ஓங்கினான். “இப்பவே எனக்கு மூங்கிலுக்கு அளவெடுக்கறையா?” 

“அவ்விழிகள் மாறவில்லை. இமைகள் அசையவில்லை. கண்ணீர் கூடப் பெருகவில்லை. வரண்ட பெரும் வண்டு விழி கள். வெள்ளை விழியில் கறுப்புமணி அப்படியே உறைந்து போயிருந்தது, 

அவன் கோபம் உச்சி மண்டைக்கு ஏறிவிட்டது. செவி கள் ஆவிகக்கின. பளாரென்று அவளைக் கன்னத்தில் அறைந் தான். அவன் ஆயுசுக்கே அவளுடன் வாழ்க்கையின் முதல் தரம் ஓ மை காட்! 

அவள் உடல் பூரா வெடுக்கென உதறிற்று. வாயைப் பொத்திக் கொண்டு கொல்லைப்புறம் ஓடினாள். அங்கிருந்து குமட்டல் சத்தம். 

“ஓ காட்” தலையிலடித்துக் கொண்டான். இருக்கிற சோதனைகள் போதாதென்று இது வேறேயா, இத்தனை நாள் கழித்து? 

“என்னப்பா, எப்போ வந்தே?” 

அபயா உடம்பையெல்லாம் சர்வகோணலில் ஆட்டிக் காண்டு உள்ளே வந்தாள். “காலையிலே சொன்னேனே, எனக்கு ஸோனா ஹல்வா வாங்கி வந்தையா?” கைகளை ஏதோ முத்திரை பிடித்தாள். 

சனியன், தீனிப் பண்டாரம் எப்பவும் அரைச்சிண்டே யிருக்கணும், மாவுமெஷின் மாதிரி. படிப்பிலே ஓண்ணும் காணோம். சுழி. ஒரு நிமிஷம் உடம்பு சும்மாயிருக்கா பார். குரங்கு சேஷ்டை. 

“அம்மா எங்கே?” கேட்டுக் கொண்டே உள்ளே போனாள். 

“அப்பா! அப்பா!” 

அலறல் கேட்டு எழுந்து உள்ளே ஓடினான். 

தொட்டி முற்றத்தண்டை சுருண்டு விழுந்துகிடந்தாள், அவனுக்குத் திக்கென்றது. குனிந்து மெதுவாய்த் தோளை அசைத்தான். முனகிக்கொண்டு புரண்டாள். உதட்டோரம் ஒரு சிவப்பு 

நூல் ரொம்ப ஸன்னம்தான். ஆனால் சிவப்பு விழிகள் அலர்ந்தன. எவ்வளவு பெரிய விழிகள், கார்ட்டூன் பொம்மை விழிகள்! 

“வா, டாக்டரிடம் போவோம்” 


ஒண்ணுமில்லே, எல்லாம் பலஹீனம்தான். உடம்பு களைச்சுப் போனால், உள்ளே இருக்கிறது ஓங்கறத்துக்குக் காத்துண்டிருக்கு. வியாதிகளுக்கு வெளியே போகவே வேண்டாம். எல்லாம் நம்முள்ளேயே இருக்குகள். மளிகைக் கடைக்காரன் சின்னச் சின்னத் தட்டில் பயறு, கொள்ளு, பருப்பு, உளுந்து, பட்டாணி, எல்லாம் மாதிரிக்கு வெச்சிருக்காப்போல. ஆனால் இதுகள் கொள்ளிகள் கண்ணுக்கு படற தில்லே.ஆனால் ஸார் நீங்கள் நினைச்சமாதிரி. மாமிக்கு  இல்லே.” 

“அப்பாடா!” பெருமூச்சு விட்டான். 

இருவரும் எழுந்து கதவண்டை சென்றதும் டாக்டர்: ‘ஸார் ஒண்ணு மறந்துட்டேன். ஜஸ்ட் எ மினிட். உங்களுக்கு ஒண்ணுமில்லேம்மா. நீங்க வெளியிலே சோபாவிலே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருங்க ரெஸ்டுலே.” அவன் டாக்டர் அறையி லிருந்து வெளியே வந்தபோது, அவள் தன் சுண்டு விரலில் மோதிரத்தைத் திருகிக் கொண்டிருந்தாள். தனி ரகஸ்ய உவகையில் அவள் விழிகள் ஒளிவீசின. எப்பவுமே அவளிடம் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. அதன் உண்மை இன்றுதான் அவனுக்கு உறைத்ததோ? 

“வா, சுமதி போகலாம்” 

வியப்பில் நிமிர்ந்தாள். அவர் வாயில் தன் பெயர் கேட்டு எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. 

‘இன்னிக்கு இனிமேல் போய் எங்கே சமைக்கிறது? உனக்கு எப்போத்தான் ரெஸ்ட் இருக்கு?’ 

இம்பாலாவில் குழித்தட்டில் சுத்தி கிழங்கு, டால், கத்தரிக்காய்ச் சட்டினி நடுவில் மண்டை மண்டையா உப்பல் பூரி அடுத்து மஸாலாபால் கூடவே ரேடியோ கிராமில் உன் விருப்பம் கிஷோர் குமாரின் “ஜூலீ…” 

“ஏதேது ஈதென்ன ப்ரியத்தினாலேயே மேலே மேலே நீங்கள் இப்படி அடிச்சேன்னா, நான்செத்தே போயிடுவேன். இது உங்களுக்குப் பாந்தமாயுமில்லை – முதலில் நீங்கள் உடம்பு சரியாயிருக்கேளோ? உங்களுக்கேன் முகம் வெளிறிட்டிருக்கு? 

“இருக்கா என்ன?” கைக்குட்டையால் முகத்தை அழுத் தித் தேய்த்துக் கொண்டான். இங்கேயே விளக்கு பவரா யிருக்கு. அதனால் கண்ணுக்கு அப்படிப் பட்டிருக்கலாம்” 


பின்னால் கைகட்டிய வண்ணம், அத்திம்பேர் கூடத்தில் மாட்டியிருந்த பழைய போட்டோக்கள் சுவாமி படங்களைப் பார்த்துக் கொண்டு நின்றார். உள்ளறையில் ஒரே இரைச்சல். அப்பா, நாலு பெண்டுகள் சேர்ந்து விட்டால் போதும், சீக்காளியை நிம்மதியாகப் படுக்கவிட மாட்டார்கள். அதென்ன ஓயாத கேள்வியோ, பதிலையும் அவர்களே சொல்லிக் கொண்டு. இதற்கெல்லாம் நாம் லாயக்கில்லை, இந்த சுத்துப்பட்ட தேவதைகள் நடுவில் மாட்டிக்கொண்டால், முதலில் நான் குளோஸ், அதான் பத்மா உள்ளே போயிருக்காளே, அவசியமிருந்தால் கூப்பிடறாள். 

‘‘அத்திம்பேரே!”- 

யார் – ஓ இவளா? குழந்தைகள் தான் கொடுத்து வைத் தவர்கள். எந்தக் கவலையும் படாதவர்கள். ஆனால் அவள் கொடுத்து வைத்தவளா?, ஆண்டவனுக்குத் தான் தெரியும். 

“என்னம்மா?” 

“என் அம்மா எனக்கு வாங்கிக் கொடுத்திருக்காள் பார்த் தேளா?” நீங்களும் நகைக் கடை வெச்சிருக்கேளே, இது மாதிரி உங்கள் கடையில் இருக்கோ?” 

சிரத்தையாகக் குனிந்து மோதிரத்தை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டார். திருப்பித் திருப்பிப் பார்த்தார். இரண்டு வெள்ளைகளுக்கு நடுவே ஒரு நீலம். ஒரு கணம் அவர் புருவங்கள் உயர்ந்தன. கர்ண குண்டலம் போல், எப்பவும் கூடவேயிருக்கும் குட்டி பூதக்கண்ணாடி அவர் கை யில் தோன்றியது அவருக்கே தெரியாது. இதென்ன ஒரு நாளா, இரண்டு நாளா? தூக்கத்தில் புரள்கையில் கனவில் கடைதானே மூச்சு! 

“அத்திம்பேர், என் மோதிரம் என் மோதிரம் – அப்பா அப்பா! அத்திம்பேர் என் மோதிரத்தைக் கொடுக்க மாட் டேன் கறாரப்பா!” 

அப்போதுதான் அறையிலிருந்து வந்த அவனுக்கு அவள் சொல்வது கவனத்தில் பதியவில்லை. அவன் முகம் கவலையில் தோய்ந்திருந்தது. 

அத்திம்பேர், கைப்பொருள் மேல் பார்வை மாறாமலே ”உங்கள் ஆத்துக்காரி உங்கள் பெண்ணின் எதிர் காலத்தை வைரத்தாலேயே இழைத்து விட்டாள்” 

அர்த்தம் உள்தோயவே சற்று நேரமானது. 

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” அவள் உடவில் ஒரு உதறல் கண்டது. 

“ஆமாம்” அவர் தலை நிமிர்ந்தார், “சில சமயங்களில் லக்ஷத்தில் ஒரு சான்ஸ் – இதுபோல் நேர்ந்துவிடுகிறது, பித்தளைக்கும் தங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல், கண்ணாடித்துண்டோடு வைரம் எப்படிக் கலந்தது? கடவுளுக் குத்தான் அற்புதம். தவிர இது பூமியில் உற்பத்தியாகும் பொருள். எந்த ஜலத்தில் எந்த மணலோடு என்றைக்கு அடித்து வந்து எங்கே புதைந்து கிடந்ததோ?” குப்பையிலே மாணிக்கம்னு பழமொழியே இருக்கு’; சிரித்தாள். “எப்படி, ஏது, எதனால்?’ நம்மால் சொல்லமுடியாது. கடவுள் சித்தம், இயற்கையின் விளையாட்டு, எப்படியிருந்தால் என்ன? அகப் பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, மறுபடியும் அந்த சிரிப்பு. சிரிப்பா கொக்கரிப்பா? உதட்டோரம் ஒரு வெற்றிப் புன்னகை. “இது இனிமே என்னிடமிருப்பதே உங்களுக்கு சௌகரியம் என்று நினைக்கிறேன். கடைக்குப் போய் சோதிக்கணும்; முழு மதிப்புத் தெரிய. ஆனால் நமக்குள் என்ன? பின்னால் பேசிக்கலாம். இப்போ கையிலிருக்கறதை வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கும் செலவு இருக்கு. நான் வரேன்.” 

அவன் திகைப்பூண்டு மிதித்து நின்றான். அவர் அவன் கையில் திணித்த கற்றை நோட்டுகளுடன். அத்தனையும் பச்சை. இனிமேலும் வரப்போறது. காசு படைத்தவர்களுக்கு நினைத்தவிடத்தில் நினைத்த காரியத்தை நினைத்தபடி எப்படி முடித்துக்கொள்ள முடிகிறது பார்த்தையா? ஏதாவது மரியாதைக்குக்கூட தரேளா? என்று கேட்டானா மனுஷன்? கையிலிருந்து பிடுங்கிக் கொண்டே போயிட்டான். உண்மை விலையைக் இப்பவே இவன், மோதிரத்தின் கொடுப்பான் என்று என்ன நிச்சயம்? அட போய்யா? நீயுமாச்சு, உன் காசு மாச்சு, அவள் நினைப்பாய் இது எங்க கிட்டேயே இருந்து விட்டுப் போகட்டும்னு சொல்லும் நிலைமையில் நான் இருக்கிறேனோ? இந்த நிமிஷம் வரை நிலைமை இப்படி மாறப் போறது என்று எனக்குத் தெரியுமா? ஆனால் மாறினதும் இந்த நிமிஷமே, என் மனமும் எப்படிக் கெட்டுப் போச்சுப் பார்த்தையா? இதற்கெல்லாம் காரணம் யார்? ஆளைப்பார், உருண்டையாய், தஞ்சாவூர் செட்டிப் பொம்மை மாதிரி! 

அவர் மேல் அவனுக்குப் பயங்கரக் கரிப்பு எடுத்தது. அவர் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டு நின்றான். வயிற்றைக் குமட்டிற்று. 

“அத்திம்பேரே! அத்திம்பேரே!!” அவசரமாய்ப் பத்மா வின் குரல். அதில் பயம் தொனித்தது; திடுக்கிட்டுத் திரும்பினான். 

‘என் மோதிரம் என் மோதிரம். அபயா அவன் முழங்கை யைக் கட்டிக் கொண்டு தொங்கினாள். 

“சீ சனியனே விடு! கையை உதறிக் கொண்டு அவன் உள்ளே விரைந்தான். 

அபயா தொப்பென்று விழுந்தாள். எழுந்து சௌகரிய மாகத் தரையில் சப்பளங்கொட்டி உட்கார்ந்து, கண்ணைக் கசக்கிக் கொண்டு பாட்டு வைக்க ஆரம்பித்தாள்.

– மீனோட்டம், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1991, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *