கதைத்தொகுப்பு: நகைச்சுவை

624 கதைகள் கிடைத்துள்ளன.

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 புள்ளி சுப்புடு பரம திருப்தியோடு ஏப்பம் விட்டுச் கொண்டு வந்தார். 1 “அரண்மனை சாப்பாடு ரொம்ப பலம்போல இருக்கு!” என்றார் மனோரமா. “ஆமாம்; மனுஷனுக்குச் சாப்பாட்ல கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. எடைக்கு எடை பொன்னை அள்ளிக்” கொடுங்க. போதும்னு சொல்லமாட்டான். மண்ணை அளந்து கொடுங்க–அதிலும் திருப்தி ஏற்படாது. சாப்பாடு ஒண்ணுலதான் திருப்தி ஏற்படும். ‘போதும் போதும். வயிறு நிரம்பிட்டுது. இனி வேண்டாம்’ என்பான். நம்பூதிரி கதை தெரியுமா உங்களுக்கு?” என்று


இந்த நாள் இனிய நாள்

 

 தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு இன்று.. பிரபல ஜோதிடர் வாய் திறக்கவும், என் மனைவி டிவியை ஆப் செய்யவும் சரியாக இருந்தது. பார்த்துகிட்டு இருக்கேன்’ல..என்றேன் கோபமாக. தினமும் இதை கேட்காவிட்டால் எனக்கு அந்த நாளே ஓடாது. நேரமாச்சு..நான் பதிவு செய்து அனுப்பறேன்..பொறுமையா ஆபீஸ்’ல உக்கார்ந்து கேளுங்க என்றாள் கிண்டலாக. வழியில் பைக் பஞ்சராக, சரி செய்து கொண்டு அலுவலகம் வருவதற்கு காலை பத்து மணியாகி விட்டது. பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்திவிட்டு நான் வேலை செய்யும் பில்டிங்கை


ஒரு கொரோனா டைரிக்குறிப்பு

 

 கொரோனா முதல் அலை ஆரம்பம். வருடம் 2020 மார்ச் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 11மணி. கொரோனா ஒரு கொடிய நோய், சீனாவில் இருந்து இறக்குமதி ஆன இந்த கொள்ளை நோயில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சன் டிவியில் பிரெஞ்சு தாடி வைத்த டாக்டர் ஒருவர் விவரித்துக் கொண்டிருக்கும் போது, அபார்ட்மெண்ட் செக்ரேட்டரி தேவசகாயம் போன் செய்தார். “சுரேஷ் சார், வணக்கம், ஈவினிங் அஞ்சு மணிக்கு நம்ம ஜெனரல் பாடி மீட்டிங் இருக்கு,


கண்டேன் பேயை

 

 பேய் அப்படின்னாலே எல்லாருக்குமே பயம் ஆனா அது எனக்கு பிசினஸ். ஆமா நான் பேயா வச்சுதான் பணம் சம்பதிக்கிறேன் . அதுக்காக நான் பேயை புதுசா உருவாக்கி பயமுறுத்தி அப்டிஎல்லாம் இல்ல அதெல்லாம் பழைய ஸ்டைல். நான் சம்பாதிக்க தேவையான பயத்தை இன்வெஸ்ட் பண்ணி வச்சிருக்க நீங்க ஒவ்வொருத்தரும் என் பாட்னர்தான். இந்த நவீன காலத்திலும் பேயையும் என்னையும் வாழ வைக்குற கஸ்டமர் இருக்குற வரைக்கும் என் காட்ல பணபேய் மழைதான். அதுக்காக பேய்யல்லாம் என் பிரண்டும்


ஜென்மம்

 

 வழக்கம் போல் லீலா இறைவனிடம், என்னைய ஏன் மனுஷ பிறவியா படைச்சீங்க. அதுவும் பொண்ணா எதுக்கு படைச்சீங்க. இந்த வீட்ல என் தம்பிக்கு இருக்குற ஃபிரீடம் கூட எனக்கு இல்ல. ஐ ஹாவ் நோ ஃபிரீடம். அப்பாவோ, மொபைல் யூஸ் பண்றதுக்கு ரெஸ்ட்ரிக்க்ஷன், ஃப்ரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போறதுக்கு ரெஸ்ட்ரிக்க்ஷன், பைக்ல லாங் டிஸ்டன்ஸ் டிராவல் பண்றதுக்கு ரெஸ்ட்ரிக்க்ஷன்… இப்டி சொல்லிட்டே போகலாம். இதுல அம்மா வேற அப்பப்ப அத செய் இத செய், அத செய்யாத


நாலு சுவத்துக்குள்ளே நடக்குதய்யா நாடகம்..!

 

  “சவிதா..மேல என்ன சத்தம்..உலக்கையால் யாரோ இடிக்கிற மாதிரி..! இந்த காலத்தில யாராவது உலக்கையில அரிசி குத்துவாங்களா…? தலவலி மண்டைய பொளக்குது…” “அய்யோ..அப்பா..அப்பா..! மேல என்னோடே ஃப்ரண்ட் நிமிஷா வீடுன்னு தெரியாதா..? அவ ஆன்லைன்ல டான்ஸ் கத்துக்கறாப்பா.!” “ஒரு நாள் பூராவுமா…? காலைல ஆரம்பிச்சது….!” “அதுக்கப்புறம் அவ சொல்லித்தராளே..இப்ப அவளுக்கு ஏக டிமாண்ட்..தெரியுமா..? இருபது ஸ்டூடண்டஸ்… பணம் கூரையைப் பிச்சிட்டு கொட்டுது….” இங்க நம்ப கூர பிஞ்சிடும் போலயே…நல்லா வந்துது லாக்டவுன்….” ஒரு வழியாய் ஒரு மணிக்கு


நான் TV நடிகனான கதை

 

 நானும் ஒரு டிவி நடிகனாகத் தலை காட்டின ‘சோகக் ‘ கதைய உங்களிட்ட சொல்லித்தான் ஆகவேணும். அதைத் தெரிஞ்சு கொள்ளட்டால் உங்களுக்கு ஒண்டும் ஆகப் போறேல்லை. ஆனால் அதைச் சொல்லாட்டில் எனக்குத் தான் தலை வெடிச்சுப் போயிரும். கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக எங்கிட யாழ்ப்பாணி யளுக்கு ஒரு நல்ல குணம் -ஆரையும் லேசில் நம்பாயினம். சந்தேகக் கண் ணோடதான் எல்லாரையும் பாம்பினம். எந்தப் புத்தில எந்தப் பாம்பிருக் குமோ ஆருக்குத் தெரியும்? அதால


நடக்காதென்பார்… நடந்துவிடும்!

 

 50 வயதில் ரவிக்குமாரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாதுதான்…. ஆனால் என்ன செய்வது?… உலகத்தில் நாகரீகம் வெகுவாகத்தான் மாறிப் போயிருந்தது. வாலிபத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் மருந்து ஒன்றை இந்தியாவில் ஒரு சித்த வைத்தியர் கண்டுபிடிக்க…. அம்மருந்து உடனேயே உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது! அதன் காரணமாக ஆங்காங்கே சில நகைச்சுவையான சம்பவங்கள், சில சோகமான சம்பவங்கள், சில கொடூரமான சம்பவங்கள், என அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது…. ரவிக்குமாரின் வாழ்க்கையில் ஒரு கொடூர சம்பவம்….


கல்யாணத்துக்கு கல்யாணம்

 

  கல்யாணத்துக்கு, பலவருஷங்களாய் பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வயசு ஏறிக்கொண்டே சென்றது. வயசு ஏறுவதற்கு மட்டும் ஏணியோ அல்லது சின்னதா ஒரு ஸ்டூல் கூட தேவையில்லை. தானாகவே ஏறிவிடும், விலைவாசி போலவே. அவனோட ஜாதகத்தில், சந்தோஷம் ஒன்னை தவிர எல்லா தோஷமும் இருந்தது.செவ்வாய் தோஷம், புதன் தோஷம் என்று வாரத்தில் ஏழு நாட்களுமே தோஷம்தான் அவனுக்கு. இதெல்லாம்கூட பரவாயில்லை. தோஷங்களை கழிக்க பரிகாரம் செஞ்சிக்கலாம்.ஆனா..உள்ளூர் தோஷம்னு ஒன்னு இருக்கு .அதுதான் எந்த பரிகாரத்துக்கும் குறையாத தோஷம். அந்த ஓட்டலுக்கு


முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நித்தியகல்யாணி

 

 முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நித்தியகல்யாணி சொன்ன விக்கிரமாதித்தனைக் கண்ட சாலிவாகனன் கதை “கேளாய், போஜனே! நகரே ‘நவராத்திரி விழா’க் கோலம் பூண்டிருந்த சமயம் அது. மிஸ்டர் விக்கிரமாதித்தர் குடும்ப சமேதராகக் கடை வீதிக்குச் சென்று, அந்த வருடம் கொலு வைப்பதற்காகப் புதிய புதிய பொம்மைகளைத் தேடித் தேடி வாங்கிக்கொண்டிருந்தார். அதுகாலை அவரைக் கண்ட அவருடைய நண்பர் ஒருவர், ‘ஹெல்லோ, மிஸ்டர் விக்கிரமாதித்தன்! ஹெள ஆர் யூ?’ என்று விசாரிக்க, ‘விசாரிப்பதைத் தமிழில் விசாரிக்கக் கூடாதா, ஐயா?’ என்று