கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 23, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

அந்தோணியும் கிளியோப்பாத்ராவும்

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. அந்தோணியோ : ரோம வீரன், ஒப்பற்ற படைத்தலைவன். ஆசியா நாடுகளையும் எகிப்தையும் வென்றடக்கியவன் – கிளியோப்பாத்ராவின் ஆருயிர்க் காதலன். அவள் காதலால் வீரவாழ்வும், அரசியல் வாழ்வும் இழந்தவன். மூவருள் முதல்வன். 2. அக்டேவியஸ் ஸீஸர் : மூவருள் ஒருவன் – ஜூலியஸ் ஸீஸரின் புதல்வன் – அரசியல் சூழ்ச்சியில் வல்லவன்.மற்ற இருவரையும் எதிரிகளையும் வைத்துச் சொக்கட்டானாடிய தலைவன்.


அவள் அங்கமும் தங்கம் அவள் பெயரும் தங்கம்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் ஒரு சேற்றுத் தாமரை; கீற்றுநிலா; ஆற்றுப் படகு, ஐந்தெழுத்துக் கதம்பம்; ஆறுகால் வண்டு; ஈரமேகத்தில் தோன்றும் ஏழு நிறங்களைக் கொண்ட வானவில். பச்சை வாழை தன் பக்கத்தில் இருந்தால், அப்போது மதிப்பு மிக்க மரகதம் போலவும்; செருந்திப்பூ அருகில் இருந்தால், செம்பொன் போலவும்; மலர்ந்த செந்தாமரை அருகில் இருந்தால், மாணிக்கம் போலவும், தோற்றம் அளிக்கக் கூடிய ஒரு பளிங்குக் கல் போன்றவள்


குட்டையில் ஊறிய மட்டைகள்

 

 தீவிரவாதிகளின் ஊடுருவலாலும், அவர்களின் சதித் திட்டங்களாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரத்த பூமியாக மாறி இருந்தது. ஒருபுறம் சதித் திட்டங்களை முறியடிக்க அரசு முயற்சித்துக் கொண்டிருந்த நேரத்தில், மற்றொருபுறம் எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்து வந்தன. இந்தச் செய்தியை வெளியிடுவதை இந்திய ஊடகங்கள் ஒரு சடங்காகவே பின்பற்றி வந்தன. ஆனால் தமிழகத்தில் ஒரு அரசியல் பத்திரிகை மட்டும் எப்போதாவது இந்த செய்தியை வெளியிட்டது. பத்திரிகை விற்பனையும் குறைந்து போனதால் பத்திரிகைக்குச் சொந்தக்காரரான எதிர்க்கட்சித் தலைவர், ஜம்மு காஷமீர்


தேவதையைக் கண்டேன்!

 

 ஞாயிற்றுக்கிழமை, காலைப் பொழுது. பலருக்கு அன்று ஒரு நாள்தான் ஓய்வாக இருக்கும் நாள். எனக்கும் தான். நான் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீண்ட நேரம் தூங்கி எழுவேன். அம்மா செய்து வைத்திருக்கும் சிற்றுண்டியைச் சுவைத்துச் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுவிடுவேன். இரவு ஏழு மணிக்குப் பிறகுதான் மறுநாள் வேலைக்குப் போக வேண்டும் என்பது நினைவுக்கு வரும், கூடவே பதற்றமும் ஏற்படும். இன்று ஏனோ சீக்கிரம் எழுந்துவிட்டேன். குளித்துவிட்டு வந்த எனக்கு மேசையில் தயாராய் இருந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டுக் கூடத்தில்


பைத்தியங்கள்

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நான் இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் போவதில்லை. நான் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து வந்த இந்த ஊருக்கு நான் இனிமேலும் வடுவை தேடிவைக்க போவதில்லை. குழந்தைப் பருவத்தில் உருண்டு புரண்டு விளையாடிய மண்ணில் நான் இனிமேல் மிதிக்கப் போவதேயில்லை. “என்னை நீங்கள் ஒரு பைத்தியக்காறணெண்டு நினைக்கலாம். நான் உண்மையிலை ஒரு பைத்தியக்காரன் தான். ஒரு பொருளிலை அளவுக்கு மீறி ஆசை வைத்து, அந்தப்


நாணயம்

 

 காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தபடி இருந்தது. பெண்கள் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் நடந்தனர். டம்ளர் நிறைய சூடான காஃபியுடன் பொறுமையின்றி அமர்ந்திருந்தேன். ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளில் ஒன்றின் பாதையில் காஃபியை வைத்து விடலாமா என்று யோசித்தேன். தண்ணீர் போன்ற இந்தக் காஃபியைக் குடித்து முடிக்கிற வலி அகலும். விருந்தினர் வீட்டில் தரப்படுகிற காஃபியை முடிக்காமல் வைத்து விடக்கூடாது; குறிப்பாக அந்த விருந்தினர் உங்கள் மாமனாராக இருக்கும்போது. அது மரியாதையில்லை. விருந்தினர்


தன்வினை தன்னைச்சுடும்

 

 தான் பொறந்து வளர்ந்து வாழ்ந்த கிராமத்தை நோக்கி ரெண்டு கால்கள் நடந்து கொண்டிருந்தன… நடந்து கொண்டிருந்த பாதையோ சரியான பொட்டல் காடு… சூரியனுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சியோ… நன்றாகவே சுட்டெரித்துக்கொண்டிருந்தான் நிலத்தை… கூட பேச்சுத்துணைக்கு கூட யாருமின்றி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தன கால்கள்… சிறிது வயதாகிவிட்ட காரணத்தால் நடையில் ஒரு தடுமாற்றம் இருந்தது… கால்கள் சிறிது சிறிதாக முன்னொக்கிச் செல்ல… மனது அதுபாட்டுக்கு பின்னோக்கி சென்றது… அப்பொழுது இவருக்கு சொந்தமா எக்கச்சக்கமான வயற்காடும் தோட்டமும் இருந்துச்சு… ஊருலேயே


கடன் பிள்ளை

 

 என் மனைவி பிரசவித்து மயக்கத்தில் கண் மூடி படுத்திருந்தாள். சொல்லி வைத்தது மாதிரி பெண் குழந்தை. மகிழ்ச்சி. ஆனால் துக்கத்துடன் வார்டை விட்டு வெளியே வந்தேன். காரணம்… ‘இது கடன் தீர்க்க வேண்டிய குழந்தை!’ – மனதில் கனம் ஏறியது. எங்களுக்கு இரண்டும் ஆண் குழந்தைகள். நானும், என் மனைவியும் இரண்டாவது பெண் பிறக்குமென்று எதிர்பார்த்தோம். ஆணொன்று, பெண்ணொன்று என்கிற கணக்கில்லை. எங்களுக்குப் பெண் பிள்ளை மீது பிரியம். அது செக்கப் செவேலென்று சின்ன இதழுடன் ரோஜாவாக


மினிசோட்டாவின் கழுகு மலை

 

 அமெரிக்காவில் பெரிய ஏரிக்கு அருகே உள்ள மினசோட்டாவுக்கு வேலை நிமித்தம் என் குடும்பதொடு சென்றேன், என் மனைவி மாதங்கி மென் பொருள் போரியியலில் பட்டம் பெற்றவள். எங்களுக்கு விக்னேஷ் மட்டுமே ஒரு பிள்ளை. பத்து வயதான அவனுக்கு சிறு வயது முதல் கொண்டே பறவைகள் என்றல் ஆர்வம். பறவைகள் பார்ப்பது அவனின் பொழுது போக்கு. பறவைகள் பார்ப்பது என்பது வனப்பகுதிகளில் இயற்கையான வாழ்விடங்களில் அல்லது நகர்ப்புறங்களில் அவற்றின் மேம்பட்ட வாழ்விடங்களில், ஒருவேளை சொந்த முற்றத்தில் கூட பார்க்கப்படுவதாகும்.


வாஷிங்டனில் திருமணம்

 

 (1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னுரை இருபத்திரண்டு வருடங்களுக்கு முன், நானும் நண்பர்கள் சிலரும் திருவையாற்றில் நடைபெற்ற தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருந்தோம். காவிரிப் படித்துறையில் இறங்கி ஸ்நானம் செய்து கொண்டிருந்த போது, நாலைந்து வெள்ளைக்காரர்கள் தண்ணீரில் முகம் கழுவிக் கொண்டிருப்பதைக் கண்டோம். தென்னையும் வாழையும் மண்டிய காவிரிக் கரைச் சூழ்நிலையில், சட்டை களைந்த சங்கீதக்காரர்களுக்கும் விபூதி பூசிய ரசிகர்களுக்கும் இடையே அந்த வெள்ளைக்காரர்கள் சற்றும் பொருத்தம் இல்லாதவர்களாகக் காணப்பட்டனர்.