மூர்க்கரோடு இணங்கேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூர்க்கரோடு – அறிவில்லாத முரடர்களோடு, இணங்தேல் – நீ சினேகம் செய்யாதே. 

ஒரு காட்டில் ஒரு தாய்க் குதிரை இருந்தது. அதற்கு ஓர் அழகான குட்டி உண்டு. அக்குதிரைக்குட்டி ஒரு முரட்டுக் குணம் உடைய புலிக்குட்டியோடு சினேகம் செய்து வந்தது. தாய்க்குதிரை தடுத்துப் பார்த்தது. குட்டிக் குதிரை கேட்கவில்லை. 

ஒருநாள் புலிக்குட்டி குதிரைக்குட்டியையும் கூட்டிக் கொண்டு. ஒரு யானைக்குட்டியோடு சண்டை போட்டது. யானைக்குட்டியும் எதிர்த்து அடித்தது. புலிக்குட்டி சமாளித்துக் கொண்டது. ஆனால் குதிரைக்குட்டியால் அடி தாங்க முடியவில்லை. அழுதுகொண்டே தாய்க்குதிரையினிடம் ஓடி நடந்ததைச் சொல்லிற்று. தாய் குட்டியைப் பார்த்து, புலிக்குட்டியோடு சேர்ந்தால் இப்படித்தான் அடி கிடைக்கும் என்று புத்தி புகட்டியது. 

மற்றொருநாள் புலிக்குட்டியும் குதிரைக்குட்டியும் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது அவ்வழியே ஒரு கரடிக்குட்டி வந்தது. உடனே புலிக்குட்டி குதிரைக் குட்டியைப் பார்த்து, இக்கரடிக் குட்டியோடு சண்டை போடலாம் வா என்று கூப்பிட்டது. அதற்குக் குதிரைக்குட்டி, ஐயையோ! நான் சண்டைக்கு வரவே மாட்டேன்; என் அம்மா அடிப்பாள் என்று மறுத்துவிட்டது. மறுபடியும் சண்டைக்கு வரவேண்டும் என்று புலிக்குட்டி வற்புறுத்தியது. வரவே முடியாது என்று குதிரைக்குட்டி பிடிவாதம் செய்தது. உடனே முரட்டுப் புலிக்குட்டிக்குக் கோபம் வரக் குதிரைக்குட்டியை நன்றாக அடித்து விட்டது. அடி தாங்க முடியாமல் குதிரைக்குட்டி இறந்துவிட்டது. (ஆகையால்) 

மூர்க்கர்களோடு சினேகம் செய்யக்கூடாது. 

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *