கூடிப் பிரியேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு நகரத்தில் ஒரு பிரபு இருந்தார். அவர் மிகவும் நல்லவர். அவருடன் சாத்தன், கொற்றன் என்ற இரண்டு மனிதர்கள் சினேகம் செய்து இருந்தார்கள். அவர்கள் எப்போதும் பிரபுவை விட்டுப் பிரியவே  மாட்டார்கள். 

நாளாவட்டத்தில் பிரபுவின் செல்வத்தைப் பலர் ஏமாற்றி எடுத்துக் கொண்டார்கள். அதனால் பிரபு ஏழையாய் விட்டார். உடனே கொற்றன் அவரை விட்டுப்பிரிந்து விட்டான். சாத்தன் மட்டும் பிரியவே இல்லை. ஏழ்மைக் காலத்திலும் பிரபுவின் கூடவே இருந்து, வேண்டிய ஒத்தாசைகளைச் செய்து வந்தான். அவரை ஏமாற்றியவர்களுக் கெல்லாம் புத்தி வரும்படிச் செய்தான். 

பிறகு பிரபுவை ஏமாற்றியவர்கள் எல்லோரும் அவருடைய செல்வத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டார்கள். பிரபு பழையப்படி பணக்காரரானார். சாத்தன் மேல் முன்னிலும் பத்து மடங்கு அன்பு கொண்டார். அவர் பணக்காரர் ஆனதை அறிந்த கொற்றன் முன்போல் அவரிடம் சினேகிக்க வந்தான். பிரபு அவனைச் சேர்த்துக் கொள்ள வில்லை. கூடிப்பிரியாத சாத்தனுக்குத் தன் சொத்தில் பங்கு கொடுத்தார். கொற்றன் கூடிப் பிரிந்த குற்றத்தை எண்ணி வருந்தினான். (ஆகையால்) 

நல்லவரோடு கூடிப் பிரியலாகாது.

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *