மீது ஊண் விரும்பேல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 7
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மீது — அளவு மீறிய, ஊண் – சாப்பாட்டை, விரும்பேல் – விரும்பிச் சாப்பிடாதே.
ஒரு காட்டில் ஒரு குரங்குக்குட்டி இருந்தது. அளவு மீறிச் சாப்பிட்டால் உடம்பு கெடும் என்பது அதற்குத் தெரிவதில்லை. எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே யிருக்கும். அதனால் அதனை எல்லா மிருகங்களும் குண்டோதரன் என்று கூப்பிடுவது வழக்கம்.
குரங்குக் குட்டிக்குக் கலியாணம் நடந்தது. மனைவியோடு மாமியார் வீட்டிற்கு மருவுண்ணப் போயிற்று. மாமிக்குக் குரங்குக் குட்டியின் மேல் ஆசை அதிகம். குரங்குக் குட்டிக்கு மாமி செய்யும் பலகாரத்தின் மேல் ஆசை அதிகம்.
ஒருநாள் காலையில் மாமி இட்டலி பரிமாறினாள். வைக்க வைக்கக் குரங்குக் குட்டி பேசாமல் சாப்பிட்டுக் கொண்டே யிருந்தது. போதும் என்று சொல்லவே யில்லை. சுமார் பத்து இட்டலிக்கு மேல் சாப்பிட்டது. இரண்டு செம்புக் காப்பியையும் வயிற்றில் ஊற்றிக்கட்டியது. வயிறு வெடித்து விடும்போல் ஆய்விட்டது. மூச்சுத் திணறியது. எழுந்திருக்கவே முடியவில்லை. மெதுவாகச் சென்று படுத்துக்கொண்டது.
பகல் பன்னிரண்டு மணிக்கு, மாப்பிள்ளையைச் சாப்பிடக் கூப்பிட்டார்கள். பசியே யில்லாதிருந்தும் மாப்பிள்ளை யாகிய குரங்குக்குட்டி எழுத்து போய் இலையில் உட்கார்ந்தது. லட்டு, வடை, பாயாசம் முதலியவற்றை வாரி வாரி உள்ளே விட்டது. வயிறு படார் என்று வெடித்தது. உயிரும் மடார் என்று போய்விட்டது. (ஆகையால்)
எதையும் அளவுமீறிச் சாப்பிடக்கூடாது.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கேள்வி முயல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கைவினை கரவேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கொள்ளை விரும்பேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
