செய்வன திருந்தச் செய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 53 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு வீட்டில் செல்லம் என்று ஒரு பெண் இருந்தாள். அவள் எந்தக் கரியத்தையும் முழுதும் செய்ய மாட்டாள். ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும் போதே அதை விட்டு வேறொரு வேலையைக் கவனிப்பாள். அல்லது வெளியில் சென்று வேடிக்கை பாப்பாள். 

ஒருநாள் அடுப்பில் சோறு கொதித்துக்கொண்டு இருந்தது. செல்லம் அப்படியே விட்டுவிட்டுப் பக்கத்து வீட்டுப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாள். சோறு அடுப்பில் வழிந்துவிட்டது. அதனால் கணவன் திட்டினான்.

ஒருநாள் வீட்டு வாசலில் புளி, அரிசிமாவு முதலியவற்றைக் காயவைத்திருந்தாள். சாயங்காலம் வரையிலும் அவற்றை எடுத்து வைக்கவே யில்லை. அன்று சினிமா பார்ப்பதற்காகச் சீக்கிரம் சமைத்தாள், சமைத்ததை மூடாமலேயே சினிமாவுக்குச் சென்றாள். சினிமா பார்க்கும்போது மழை சோ’ என்று பெய்தது. ஆட்டம் முடிந்ததும் செல்லம் விட்டிற்கு வந்தாள். 

வாசலில் காயவைத்திருந்த புளியும், அரிசிமாவும் மழையில் கரைந்து வீணாகிவிட்டன. சமைத்ததை மூடாமையால், பொரியலையும், சோற்றையும் பூனைகளும் எலிகளும் தின்றுவிட்டன. அதனால் செல்லத்திற்கும் கணவனுக்கும் சண்டை உண்டாயிற்று. செய்யும் காரியத்தைத் திருந்தச் செய்யாமையால் அன்று இரவு பட்டினியாய்ப் படுத்துக் கொண்டார்கள். (ஆகையால்) 

எதையும் அரைகுறை யில்லாமல் திருத்தமாகச் செய்ய வேண்டும்.

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *