சோம்பித் திரியேல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 48
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு வண்ணாவிடத்தில் ஒரு கழுதை இருந்தது. அது சோம்பேறிக் கழுதை. மூட்டை காப்பது என்றால் அதற்குப் பயம். அப்படியே படுத்துக் கொள்ளும். வண்ணானுக்குத் தெரியாமல் அடிக்கடி ஓடி மறைந்து கொள்ளும்.
ஒரு நாள் வண்ணான் ஒரு மூட்டை கட்டினான். அதைக் கண்டதும் கழுதை காட்டுப் பக்கம் ஓடிவிட்டது. அங்கே ஒரு கல்தச்சன் அம்மி, உரல் முதலியவற்றைச் செய்து வைத்திருந்தன். கழுதையைக் கண்டதும் பிடித்துக் கொண்டான். அதன் முதுகில் அம்மிகளைபும், உரல்களையும் ஏற்றினான். கழுதைக்கு மூச்சுத் திணறியது. ஐயையோ! துணி மூட்டையை விட இக்கருங்கற்கள் கனமாக இருக்கின்றனவே என்று வருந்தியது. ஒரு நாள் கல்தச்சனையும் ஏமாற்றிவிட்டு ஓடியது.
ஓடும் வழியை, ஓர் எறும்பு அரிசி இழுத்துக்கொண்டு போவதைப் பார்த்தது. அதனிடத்தில் பேச்சுக் கொடுத்தது. உடனே எறும்பு கழுதையைப் பார்த்து, உன்னைப் போல் நானும் சோம்பேறி யில்லை ; எனக்கு வேலையிருக்கிறது; பேச நேரம் இல்லை என்று சொல்லிப் போய்விட்டது. பிறகு தேன் எடுத்துக் கொண்டு ஒரு தேனி வந்தது. கழுதை பேச்சுக் கொடுத்தது. தேனீயும் எறும்பைப் போலவே பதில் சொல்லிப் போய்விட்டது. கழுதைக்கு மானம் போனது. பழையபடி வண்ணானிடமே போய்ச் சேர்ந்தது. (ஆகையால்)
சோம்பேறியாய் வீண்காலம் போக்கக் கூடாது.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கொள்ளை விரும்பேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கேள்வி முயல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கைவினை கரவேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
