சூது விரும்பேல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 49
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூது -சூதாட்டத்தை, விரும்பேல் – நீ விரும்பி ஆடாதே.
ஓர் ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் தினந்தோறும் கோடாலியை எடுத்துக்கொண்டு காட்டிற்குச் செல்வான். சாயங்காலம் வரை விறகு வெட்டுவான். பின்பு, அவற்றைக் கற்றையாகக் கட்டிக்கொண்டு வந்து காசுக்கு விற்பான். இப்படி நெற்றி வேர்வை நிலத்தில் விழச் சம்பாதித்து ஆயிரம் ரூபா மீதி வைத்திருந்தான்.
ஒருநாள் விறகு விற்றுவிட்டு ஒரு ரூபாவுடன் வீட்டிற்குத் திரும்பினான். வழியில் சிலர் சூதாடிக் கொண்டிருந்தார்கள். சூதில் சிலருக்குக் காசு வருவது போல் தெரிந்தது. அதைக் கண்டதும், விறகு வெட்டியின் நாக்கில் தண்ணீர் ஊறிற்று. தன்னிடம் இருந்த ஒரு ரூபாவைப் பந்தயமாக வைத்துச் சூதாடினான். ஆனால் தோற்று விட்டான்.
ரூபாவைத் தோற்றதால் விறகு வெட்டியின் வயிறு “திகி திகி” என்று எரிந்தது. இன்னும் சூது ஆடி விட்ட ரூபாவைப் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணினான். வீட்டிற்கு ஓடி மற்றொரு ரூபாவை எடுத்துக் கொண்டு வந்தான். அதையும் தோற்றுவிட்டான். இப்படியே ஆடி ஆடித் தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாய்களையும் தோற்றுவிட்டான். சாப்பாட்டிற்கும் காசு இல்லாமல் போய்விட்டது.
விறகுவெட்டி ஓரிடத்தில் உட்கார்ந்தான். சூதாடியதால் வேலையும் கெட்டதே; கையில் இருந்த காசும் தொலைந்ததே; ஐயையோ! என்று ஆத்திரப்பட்டுப் பெருமூச்சு விட்டான். (ஆகையால்)
எப்பொதும் சூது ஆடக் கூடாது.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கொள்ளை விரும்பேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கேள்வி முயல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கைவினை கரவேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
