கதையாசிரியர் தொகுப்பு: ஜூனியர் தேஜ்

60 கதைகள் கிடைத்துள்ளன.

கலியன் மதவு

 

 அத்தியாயம் 7 – 8 | அத்தியாயம் 9 – 10 அத்தியாயம் – 9 “குடலைப் பிரட்டும் துர்நாற்றம். பொறுத்துக் கொள்ள முடியாமல் மூக்கைத் துணியால் மூடிக்கொண்டு பிரேதம் சுமந்தனர். வழக்கமான திக்கில்தான் இறுதியாத்திரை நகர்ந்தது. கண்ணில் விளக்கெண்ணை கொட்டிக்கொண்டு கூர்ந்து கவனித்துக்கொண்டே முன்னே போனார் மாதய்யா. முத்தனூர் எல்லையில் ஜனக்கூட்டம் சற்றே அதிகமாய் இருப்பதாக உணர்ந்தார் மாதய்யா. பிரேதத்தை முன்னே விட்டுப் பின்னே சென்றார். அந்தனூர் எல்லை முடிந்து , முத்தனூர் எல்லைத் தொடக்கத்தில்


கலியன் மதவு

 

 அத்தியாயம் 5 – 6 | அத்தியாயம் 7 – 8 அத்தியாயம் – 7 “நெடிய உருவம். இரட்டை நாடி. தொப்புளுக்குக் கீழ் மடித்துக் கட்டிய லுங்கி… லுங்கியை இடுப்போடு அழுத்திப் பிடித்துக் கொள்ளவும், காசு பணம் வைத்துக் கொள்ளவும் வசதியாகத் துருத்திக்கொண்டுள்ள, பர்ஸ்ஸுடன் கூடிய, சாயம் போன பச்சை கலர் பெல்ட். கழுத்தில் மாலை போலத் தொங்கும் கலர் கலராய்க் கட்டமிட்டத் துண்டு… அய்யனார் சிலை போல வஜ்ரமாய் இறுகிய அகலமான மார்பு… வயிற்றை


கலியன் மதவு

 

 அத்தியாயம் 3 – 4 | அத்தியாயம் 5 – 6 அத்தியாயம் – 5 “மாதய்யாவை விட குந்தலாம்பாள் அரை அடி உயரக் குறைவு… உயரத்திற்கு ஏற்ப உடல்வாகு. மாநிறம். மஞ்சள் பூசிப் பூசிக் கலை பொருந்திய முகம். நெற்றி நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் அளவாக இட்டுக் கொண்டிருக்கும் அரக்குக் கலர் குங்குமம். காதுகளில் கச்சிதமாக ஜொலிக்கும் கல் தோடு. மூக்கில் மின்னும் எட்டுக் கல் பேசரி. உழைத்து உழைத்து உரமேறிய புஜங்கள். பேச்சில் பிசிர்


கலியன் மதவு

 

 அத்தியாயம் 1 – 2 | அத்தியாயம் 3 – 4 | அத்தியாயம் 5 – 6 அத்தியாயம் 3 “அய்யா, அனாவசியமா அரை ஏக்கர் தெடல் சும்மாத்தானே கெடக்கு, ஒரு காளவா போட்டுத் தெடலைக் கரைச்சிட்டமுன்னா, எடமும் வெளைச்சலுக்கு வந்துரும்… காளவாயில போடற காசு ரெண்டு பங்கா திரும்பிரும்…! வேண்டாம்’னு மட்டும் சொல்லிராதீங்கய்யா…?” என்று ஆத்மார்த்தமாகக் கேட்டான் தொப்ளான். “காளவா போட, ராசி வேணும்னு சொல்லுவாங்களே… ஜோசியரய்யாவைக் கலந்துக்கிட்டு அப்பறம் யோசிக்கலாமேன்னேன்…” “அய்யா… அதல்லாம்


கலியன் மதவு

 

 அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம் 1 ‘பாதை வகுத்தாச்சு பயணம் அவர் பாடு… கோதை எடுத்தாச்சு புளிக்குழம்பு அவர் பாடு… சாதம் வடிச்சாச்சு சாப்பிடுவதினி அவர் பாடு… ஏதும் எனக்கில்லை எனச்சொல்லிப் போனீரோ……… வைகரையின் ரம்யமான அமைதியை கீறிக் கிழித்துக்கொண்டு பிசிர் இல்லாமல் ஒலித்துப் பரவியது அகிலாண்டக் கிழவியின் ஒப்பாரி. ‘கிளவி ஒப்பாரி பாடுதே…!’ ‘நோவு நொடீல படுத்தக் கிளங்கட்டைங்கக் கூட தெருவுல யாருமேயில்லையே…!’ ‘பாம்பு கீம்பு கடிச்சி யாரும்… …!’ ‘திடீர்னு யாரு


ஷெல் ஷாக்!

 

 அருணும் தன் தாய்மேல் பாசத்தைக் கொட்டினான்..! கொட்டுகிறான்..! கொட்டுவான்..! இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு வந்த பூமிகா தன்னை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்கிறாள் என்பதை ஒரு சதவீதம் கூட அறியாதவன் அருண். அன்னபூரணியம்மா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். துளசி மாடத்துக்குக் கோலம் போட்டுவிட்டுத் திரும்பும்போது, “துளசியம்மா; உனக்கு இதுதான் என்னோட கடைசி பூஜையா இருக்கும். இருக்கணும்..!” விண்ணப்பம் போலவும், வேண்டுதல் போலும் அவளது உள்ளக்கிடக்கை வெளிப்பட்டது. அதே சமயம் ஆழ்மனம் விழித்துதெழுந்து


இட்லி

 

 மணி இரவு 9.30. அமைச்சர் அமலனின் கார் ஊருக்குள் நுழைந்தது. பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு, வாழ்க கோஷம், கட்சிக்காரர்கள் ஷால் போர்த்தல், பத்திரிகையாளர் சந்திப்பு என எல்லா சம்பிரதாயங்களும் சமுதாயக்கூடக் கட்டடத்தில் முறைப்படி விமரிசையாக நடைபெற்றன. எல்லா வழக்கமான சடங்குகளும் முடிந்தபின். அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் முத்து… தங்கும் அறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்ததால் இரவு நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தார். ஆறு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி


சஸ்பென்ஸ்

 

 “என்னங்க..!” முதல் நிலைக் காவலர் (Police Constable – Grade 1) முருகன் தன் சீருடையின் மேற்கையில் தைக்கப்பட்டிருந்த இரண்டு பட்டைகளைப் பார்த்தார். ‘விரைவில் மூன்று பட்டைகளை தைக்கப் போகும் (Head Constable) தலைமைக் காவலராக உயரப் போகிறோம்!’ என்கிற மகிழ்ச்சியான நினைவோட்டத்துடன், சீருடையை மரியாதையோடு ஹாங்கரிலிருந்து எடுத்தபடியே, “ம்..” என்றார். “இன்னிக்கு ‘லீவு’ போட்டுட்டு என் கூட இருங்களேன்…?” சீருடையை அணிந்தபின் ‘பெல்ட்’ அணிந்து கொண்டே “எதுக்கு…வள்ளி ?”- அவளின் பூசினாற்போன்ற முகத்தைக் கரிசனத்தோடு பார்த்தபடியே


எதிர்வினை

 

 திருமணலூர்.  இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். “நாங்க ஆஸ்பத்திக்குப் போய் வரோம்!” என்று தாய் தந்தையரிடமும், குழந்தைகளிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர் கார்டியாலஜிஸ்ட் இருள் மற்றும் அவர் மனைவியும் ஃபார்மஸிஸ்டுமான சந்திரமதி இருவரும். பேரன் பேத்திகளுக்கு பாட்டி கேப்பைக் கூழ் ஊட்டிவிட, எதிரில் அமர்ந்து வில்லி பாரதம் கதை சொல்லிக் கொண்டிருந்தார்  தாத்தா. அனைவரும் அவர்களுக்குக் கையசைத்தனர். வழக்கப்படி கிராமத்து அழகை ரசித்துகொண்டே வந்து,  இருளப்ப சாமியைக் கை கூப்பிக் கும்பிட்டு விட்டு மருத்துவமனையை அடைந்தனர் டாக்டர் இருள் சந்திரமதி இணையர் . நெஞ்சுவலியால்


கன்ஸர்வேடிவ் – ஒரு பக்க கதை

 

 ‘இந்த அல்ட்ரா மாடர்ன் பெண் யாரு?’ அலுவலகத்தில் தன் முன் மிடுக்காக நின்றவளைப் பார்த்துக் குழம்பினான் சத்யம். “சார்.. ஐம் ரேணுகா….” என்று ஆன் செய்த ‘டாப்’பை அவனிடம் கொடுத்தாள். கல்யாணத்தரகர் வாட்ஸ்ஸப்பிய அதே புகைப்படம். சத்யம் மேலும் குழம்பினான். “உங்க விருப்பப்படி பட்டுச்சேலை, க்ளோஸ்டு ஜாக்கெட், பின்னிய கூந்தல், மல்லிகைச்சரம், தோடு, மூக்குத்தி, வளையல்னு. போட்டோஷாப் செய்த என் போட்டோதான்..” சத்யம் அதிர்ந்தான். “மிஸ்டர் சத்யம்.. பெண்பார்க்க வரும்போது இந்த போட்டோஷாப் பெண்ணா நான் மாறணுமாம்..அம்மாவோட