கோது ஆட்டு ஒழி
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 53
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு கிராமத்தில் வீணன் என்று ஒரு பையன் இருந்தான். அவன் எப்போதும் விணாக விளையாடுவான். யாரைக் கண்டாலும் கேலி செய்வான். இல்லாததைக் கூறி ஏமாற்றுவான். அது அவனுக்கு விளையாட்டாகத் தெரிந்தது.
ஒருநாள் வேடிக்கையாகக் காகிதத்தைச் சுருட்டிச் சுருட்டுக் குடித்தான். புகை மூக்கில் ஏற மயக்கம் வந்து விட்டது. அதனால் தகப்பனாரிடம் உதை வாங்கினான். ஒரு நாள் ஒரு குட்டிச் சுவரின் மேல் ஏறி விளையாடினான். தவறிக் கீழே விழுந்தான். அதனால் கால் ஒடிய, நொண்டி யென்று எல்லோரும் ஏளனம் செய்தார்கள். அது அவனுக்கு வெட்கமாய்ப் போய்விட்டது.
விணன் ஒரு கயிற்றைப் பாம்புபோல் முறுக்கி வைத்திருந்தான். அந்தக் கயிற்றை இராத்திரியில் எல்லோர் மேலும் போட்டுப் “பாம்பு பாம்பு” என்று பயங்காட்டுவான். எல்லோரும் அலறுவார்கள். அது அவனுக்கு விளையாட்டாகத் தெரிந்தது. ஒருநாள் அவன் தகப்பனார் அக்கயிற்றை அடுப்பில் போட்டுவிட்டார். அது தெரியாமல் விணன் கயிற்றைத் தேடினான். அவன் கயிறு வைக்கும் இடத்தில், தற்செயலாய் ஓர் உண்மையான பாம்பு படுத்திருந்தது. விணன் கயிறு என்று எண்ணிப் பாம்பை எடுத்தான். அது கடித்துவிட்டது. உடனே விடம் தலைக்கேறி இறந்துவிட்டான். (ஆகையால்)
கெட்ட விளையாட்டுக்களை விளையாடக்கூடாது.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கேள்வி முயல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கைவினை கரவேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கொள்ளை விரும்பேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
