பூமி என்னைச் சுத்துதே…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 8, 2026
பார்வையிட்டோர்: 3,590 
 
 

வாக்கிங் போய் வந்தவன் வாசற்படிக்கட்டில் நெற்றியை அழுத்திப் பிடித்தபடி உட்கார அவன் மனைவி பதறிப்போய்…’ ஏங்க என்னாச்சு உங்களுக்கு.. ?! இந்தாங்க, மொதல்ல ஒரு கிளாஸ் தண்ணி குடிங்க!’ன்னு கொண்டு வந்து கொடுத்து, ஆரஞ்சு மிட்டாயும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள். அவளுக்குத் தெரியும் அவனுக்கு ‘லோ சுகர்’ இருக்குன்னு!

‘எப்படி இருக்கு?’ என்றாள்.

‘பரவாயில்லை..,! ஆனா, கோயிலுக்குப் போறதைவிட கொடுமை வாக்கிங்க் போறது’ என்றான்.

‘அதிலென்ன கொடுமை இருக்கு?! கோயிலுக்குப் போனா மனசுக்கு நல்லது!. வாக்கிங்க் போறது ஒடம்புக்கு நல்லதுதானே?’ என்றாள்.

‘கோயில்ல எத்தனை சுத்து சுத்தணும்னு பூவையோ, இலையையோ கிள்ளிப் போட்டு, கணக்கு வச்சுக்கலாம். ஒன்பதா? பதினெட்டான்னு? ஆனா, வாக்கிங்க் போறதுல சுத்துன சுத்து எண்ணிக்கை மறந்துடறதுனால..

ஓவரா சுத்தி, கிறுகிறுப்புத்தான் வந்துடுது! இன்னைக்குன்னு கிரவுண்டை இப்படி மூன்று சுத்து., அப்படி மூன்று சுத்துன்னு மொத்தமா ஆறு சுத்து சுத்தீட்டிருந்தேன்!. அங்கிருக்கறவங்கெல்லாம், ‘என்ன சுதாகர்… நேத்து அடிச்சது இன்னும் தெளியலையா?! இப்படி, அப்படிச் சுத்தறயேங்கறாங்க?!

கோயில்ல யாரு எப்படி சுத்தறாங்கன்னு யாரும் கண்டுக்கறதில்லே…! வாக்கிங்ல ஒருத்தன் சுத்தறதைக் கூடவா பார்ப்பானுக?!

‘டைமர்’ வச்சுக்கலாம்னா ஒவொருநாள் ஒவ்வொரு வேகத்துல சுத்தறதுனால அதுவும் சரிப்பட்டு வரலை!.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காயா கோயிலைச் சுத்தீட்டு வந்துடறேன். புண்ணியமும் கூடி வெயிட் கொறையும், அதோட, பூமியும் என்னைச் சுத்தாது இல்லையா?னான்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *