பெரியாரைத் துணைக் கொள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓம் ஊரில் முருகன், முரடன் என்று இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். முருகன் கெட்டிக்காரன். இராகத்தோடு நன்றாகப் பாடுவான். நல்லவருடனேயே பழகுவான். முரடன் அறிவில்லாதவன். கெட்டவருடனேயே பழகுவான். 

அவ்வூரில் படித்தறிந்த ஒரு பெரியார் இருந்தார். எல்வோர்க்கும் நன்மை செய்வார். ஊரில் அவருக்கு நல்ல மதிப்பு உண்டு. முருகள் அம்பெரியாரைத் துணையாகக் கொண்டு பழகி வந்தான். முரடன் ஒரு கெட்டனோடு சேர்ந்து பழகி வந்தான். 

ஒரு நாள் அவ்வூர் அரசன் அரண்மனையில் ஒரு பாட்டுக்கச்சேரி நடந்தது. கச்சேரிக்குப் பலரும் சென்றார்கள். முரடன் தன் கூட்டாளியுடன் சென்றான். அவ்விருவரையும் அரண்மனை ஆட்கள் உள்ளே விடவில்லை. இருவரும் வெட்கி வெளியே வந்து விட்டார்கள். 

கச்சேரிக்கு வரும்படியாகப் பெரியாருக்கு அழைப்பு வந்திருந்தது. அவர் முருகனையும் அழைத்துக்கொண்டு சென்றார். கடைசியில் கச்சேரியில் முருகனையும் சற்று நேரம் பாடும்படித் செய்தார். முருகன் மிகவும் நன்றாகப் பாடினான். அவன் மேல் அரசனுக்கு ஆசை உண்டாகி விட்டது. ஒர் அழகிய முத்துமாலையை முருகனுக்குப் பரிசாகக் கொடுத்தான். அவன் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான். முரடன் கேள்விப்பட்டான். தானும் பெரியாரைத் துணையாகக் கொள்ளாததற்கு வருத்தப்பட்டான். (ஆகையால்) 

அறிவில் சிறந்த பெரியாரைத் துணையாகக்கொள்ள வேண்டும்.

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *