மயக்கமா? கலக்கமா?
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 22, 2026
பார்வையிட்டோர்: 74

எதற்கும் கலங்காமல் எஃகு இரும்பாக இருப்பாள் கமலாட்சி! அண்மையில் இறந்து போய்விட்ட தன் சகோதரியின் துக்கத்தில் துவண்டு போயிருந்தாள். எல்லார் இறப்பிலும் கல்லாய் இருந்தவள்.. சாவு சர்வ எதார்த்தம் என்று எல்லார்க்கும் தைரியம் சொல்பவள் மலை சரிந்ததாய்ச் சரிந்து போனாள்.
ஊரில் எல்லாரும் ஆச்சரியப்ப்பட்டார்கள். கமலாட்சியா இப்படி இடிந்து போயிருக்கிறாள்? என்று.
என்ன செய்வது? சாவு தவிர்க்க முடியாத வாழ்க்கைப் புத்தகத்தின் ஒரு அத்தியாயம்!. அது சிலருக்கும் கடைசி அத்தியாயத்தில் வரும்!. சிலருக்கு ஆரம்பத்தில் கதை துவக்கமே சாவாய் வந்து சவாலாய் இருக்கும். சிலருக்கு நட்ட நடுவழியில்.. அல்ப ஆயுசில் அதிர்ச்சி தரும்!.
கமலாட்சியின் இறந்து போன சகோதரிக்கும் வயது எழுபதுக்கும் மேல்தான். கமலாட்சியைப் போலவே அவளும் பேரன் பேத்திகளைப் பார்த்து விட்டுத்தான் கண்மூடினாள். என்றாலும், உடன்பிறப்பு என்பதால் ஒடிந்து போயிருந்தாள் கமலாட்சி.
ஒருநாள் கமலாட்சியின் பேரன் பேசினான் போனில். ‘ஆச்சி! (பாட்டியை அவன் அப்படித்தான் அழைப்பான்) என்ன நீயே ஒடிஞ்ச்சு போயிட்டியாமே?! செத்துப் போனது உன் அக்கா தானே?! நீ இல்லையே?!’ என்றான் சர்வ சாதாரணமாக. அப்படி அவன் சொன்னதில் கமலாட்சி அதிர்ந்து போய்விடவில்லை. காரணம் பேரன் அடுத்துப் போட்டம் அஸ்திரம்தான் அப்படி!.
‘ஆச்சி நீ செத்துப் போயிருந்தா எங்க எல்லாருக்கும் ஆறுதல் சொல்ல தைரியம் சொல்ல ஆளில்லாமல் போயிருக்கும்இல்லையா?! பார்த்தியா.. கடவுள் ஒரு உயிரைப் பறிக்கறதுல கூட யாரை முன்னுக்குப் பறிக்கணும் யாரைப் பின்னுக்குப் பறிக்கணும்னு கணக்கு வச்சிருக்கான். அதுக்கு ஒரு காரணமும் வச்சிருகான். நீ செத்திருந்தா எனக்கு ஆறுதல் சொல்ல யாரிருக்கா? விடு கவலையை!’ என்று அவன் சொன்னது வேதாந்தமா? இல்லை விட்டுப் போன உயிருக்கானவேதனை நீக்கும் தைரிய வார்த்தையா?! புரியாமல் கமலாட்சி கலங்கினாள்.
சகோதரி சாவில் வராத மயக்கம் பேரன் துக்க விசாரிப்பில் கலக்கத்தைத் தந்து எழ வைத்தது ஆச்சரியத்தில் கலங்க வைத்தது!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 22, 2026
விட்டில் பூச்சிகள்
சிவசங்கரி குருநாதன்
August 22, 2026
செண்பகம், ஆஷா மற்றும் உஷா
எஸ்.மதுரகவி
August 22, 2026
