துரையப்பனும் துறவியும்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 9
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரிலே துரையப்பன் என்னும் பெயருடைய செல்வன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பொருள் மிகுதியாக இருந்தது. அவன் தன்னைப் பொறுத்த வரையில் நன்றாக உண்டு உடுத்துக் களித்துச் செருக்கித் திரிந்தானேயன்றித் தருமஞ் செய்வதில் சிறிதுங் கருத்துச் செலுத்தவே இல்லை. இந்தச் செல்வன் மேலும் மேலும் பொருளைப் பல வழி” களிலும் தேடிக்கொண்டே யிருந்தான். ஒருநாள் துறவியொருவர் துரையப்பனுடைய ஊருக்கு வந் தார். துரையப்பனுடைய செல்வப் பெருக்கையும் அவன் பிறருக்குச் சிறிதும் பயன்படாமல் வாழ்தலை யும் உணர்ந்தார். அவனுக்கு அறிவுரை கூறி நல் வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணினார். உடனே துரையப்பன் வீட்டிற்குச் சென்றார்.
துரையப்பன் துறவியை வரவேற்றுப் போற்றி னான். துறவியார் துரையப்பனைப் பார்த்து, “அப் பனே! நம்முடைய இந்த உடம்பு ஒரு துன்பப் பை யாகும். எல்லாவகையான துன்பங்களும் இந்த உட லுக்குள் அடைத்துவைக்கப்பட்டுள்ளன. நீ பெரும் பொருள் படைத்தவனாக இருந்திருக்கிறாயே; என் றைக்காவது மகிழ்ச்சியுடன் இருக்கிறாயா? உண் பதையும் உடுப்பதையும் உண்மையாக நினையாதே. நல்ல அறங்களை மிகுதியாகச் செய். அதுதான் உனக்கு நற்பயனை அளிக்கும். அறப்பயனைத் தேடா’ மற் காலங்கழிப்பாயானால், உன்னை எமதூதர்கள் பிடித்துக்கொண்டுபோய்க் கொடுமையாகத் துன் புறுத்துவர்,” என்று அறிவுரை கூறி அச்சுறுத்தினார். துறவியாரிடம் வியக்கத்தக்க ஆற்றல் அமைந்திருந்த படியால் துரையப்பன் அன்று முதல் திருந்தி அறஞ் செய்யத் தொடங்கினான்.
“இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் விடு.”
(உரை.) இயல் உடம்பு இது – பொருந்திய இவ்வுடம் யானது, இடும்பைக்கு-துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே – இட்டுவைக்கும் பையல்லவா?, இடும் பொய்யை – உணவினை யிடுகின்ற நிலையில்லாத இவ் வுடம்பை, மெய் என்று இராது-நிலையுடையது என்று எண்ணியீராமல், கடுக – விரை வாக, இடும்-வறியார்க்கு அறஞ் செய்யுங்கள், உண்டாயின் அறம் உங்களிடத்தில் உண்டாகுமானால், பெரு வலிநோய் – மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும, விண்டாரை- நீங்கியவரை, கொண்டாடும் வீடு-அறிஞர்களால் போற்றப் படுகிற வீடுபேறானது, ஊழின் உண்டாகும் – முறைமையாக உங்கட்குக் கிடைக்கும்.
(கருத்து.) நீங்கள் அறஞ் செய்வீர்களானால், உங்கட்கு வீடுபேறு எளிதில் உண்டாகும்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026