கவலையால் மாண்ட காராளன்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 8
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூதூர் என்னும் மூதூர் ஒன்றிலே ஏறக்குறைய நாற்பத்தெட்டு யாண்டுகளுக்கு முன் காராளன் என் னும் பேராளன் ஒருவன் இருந்தான். இவன் முன் பிறப்பில் செய்த வினைப்பயனால் வறிய குடும்பத்தில் தோன்றினான். அன்றாடம் உழைத்துத்தான் அவன் வாழ்க்கையை நடத்த வேண்டும். செல்வத்தைக் காராள னுக்கு மிகுதியாகக் கொடுக்காத கடவுள், மக்கட் பேற்றை விரிந்த மனப்பான்மையோடு நன்றாக வழங்கினார். ஆணும் பெண்ணுமாகப் பன்னிரண்டு பிள்ளைகள் தோன்றினர்.
பெருங் குடும்பியாகப்போன காராளன் பெருஞ் செல்வனாக வேண்டும் என்று பெரிதும் முயன்றான். பொருள் தேடுவதற்காகப் பலவகைத் தொழில்களில் ஈடுபட்டான். பொருள் இவனிடம் குவியவில்லை. செல்வஞ் செல்வத்தோடு சேரும் என்பதற்கேற்ப அது செல்வர்களிடமே செருகிக் கொண்டிருந்தது. காராளன் குடும்பத்தைப் பாதுகாக்க மிகுந்த தொல்லைப் பட்டான்.
குடும்பச் சுமையைக் குறைத்துக்கொண்டால் பாதுகாப்பது எளிதாக இருக்கும் என்று எண்ணினான். மக்களிற் சிலரை உறவினர்கட்கு வளர்ப்பாகக் கொடுத் தான். ஆனால், வளர்ப்பாகச் சென்ற மக்கள் வளர்ப்புத் தாய் தந்தையர்களைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை) யென்று கூறி ஈன்ற தாய் தந்தையர்களிடமே வந்து விட்டனர். இதனால் காராளனுக்கு நாளுங் கவலை மிகுதிப்பட்டுக் கொண்டே யிருந்தது. காராளன் கவலையால் நாள்தோறும் இளைத்துக் கொண்டே இருந்தான். எல்லாம் வினைப்பயன் என்று அவன் சிறிதும் உணர்ந்துகொள்ளவில்லை. இறுதியில் மாண்டுபோனான். காராளனுடைய இரங்கத்தக்க நிலையைக் கண்ட பலரும் வருந்தினர்.
”வருந்தி அழைக்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.”
(உரை.) வாராத – வரக்கூடாதவை, வருந்தி அழைத்தாலும் – பரிந்து அழைப்பினும், வாரா – வாராவாம், பொருந் துவன – வருபவற்றை, போமின் என்றால் – என்னை விட்டுப் போங்கள் என்று கூறினால், போகா – போகமாட்டாவாம், இருந்து ஏங்கி – இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக – மனம் புண்ணாகுமாறு, நெடுந்தூரம் தாம் நினைந்து – அவற்றைக் குறித்துத் தாம் மிகுதியாக எண்ணி, துஞ்சுவதே – இறந்து போவதே, மாந்தர் தொழில் – மனிதர்களுடைய வேலையாக இருக்கிறது.
(கருத்து) எல்லாம் ஊழ்வினைப்படியே நடைபெறுமே யன்றி மனிதர்களுடைய முயற்சியினால் எச்செயலும் நிறை வேறமாட்டா.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026