இன்பந் தேடிய இளங்கீரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அளகை என்னும் பெயருடைய ஊரிலே இளங் கீரன் என்னும் பெயருடைய மனிதன் ஒருவன் இருந் தான். அந்த அளகையிலே இருந்தவர்கள் ஊர்ப் பெயருக்கு ஏற்ப நல்ல செல்வச் சிறப்புடன் வாழ்ந் திருந்தார்கள். அளகாபுரியிலும் பிச்சைக்காரர்கள் உண்டு என்பற்கேற்ப இளங்கீரன் மட்டும் மிகுந்த வறுமையால் வருந்திக் கொண்டிருந்தான். பொருள் தேடி மற்றவர்களைப்போல் இன்ப நலங்களை இனி தடைந்து வாழவேண்டுமென்பது அவனுடைய பேரவா.ஆனால், அதற்கேற்ப நல்வினை இல்லையே! என்ன செய்வது? எல்லாவற்றிற்கும் நல்வினையன்றோ மூல காரணம் ? “ஆசை இருக்கிறது தாசில் பண்ண ; அதிருட்டம் இருக்கிறது கழுதை மேய்க்க,” என்பர் பெரியோர். 

இளங்கீரன் பொருள்தேடிக் குவிப்பதற்காக எத்தனையோ துறைகளில் முயற்சி செய்தான். வாணிகஞ் செய்தான். மரக்கலமேறி வெளிநாடுகட்குச் சென்று அவ்விடங்களினும் மிக முயன்று பொருள் தேடினான். பொருள் குவிந்தபின் ஊரையடைந்தான். நல்ல பெரிய மாளிகை ஒன்று கட்டிக்கொண்டு இன்ப நலங்களை யெல்லாம் இனிது துய்க்கவேண்டு மென்று எண்ணினான். நோய்கள் பல இளங்கீரனைப் பற்றிக் கொண்டன. கஞ்சியைத் தவிர வேறு எதனையுஞ் சாப்பிடமுடியவில்லை. வெகுநாள் நோயால் வருந்தி இறுதியில் மாண்டுபோனான். 

இளங்கீரன் வருந்திப் பொருள் தேடியும நுகர முடியாமல் மாண்டானே என்று பலரும் இரங்கினர். இளங்கீரனுக்குத் திருமணங்கூட நடவாமல் இருந்த படியால், அவன் தேடிய பெரும்பொருளை அவனு டைய உறவினர் பங்கிட்டுக் கொண்டு நுகரலாயினர். 

“உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகம் 
கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறி னுலென்
உடலோடு வாழும் உயிர்க்கு.” 

(உரை.) ஒருவருக்கு – ஒருவர்க்கு, உள்ளது ஒழிய – ஊழ் வினையினால் உள்ள அளவேயில்லாமல், ஒருவர் சுகம்-மற்றொரு வருடைய இன்பங்களை, கொள்ள – நுகர விரும்பினால், கிடையா. முடியாது; ஆகையால், குவலயத்தில் – பூமியில், உடலோடு வாழும் உயிர்க்கு – மக்களுடலோடு கூடி வாழும் உயிர்களுக்கு, வெள்ளக்கடல் ஓடி மிகுந்த நீரையுடைய கடல் கடந்து சென்று (பொருள் தேடிக்கொண்டு), மீண்டு கரையேறினால் – திரும்பீ வந்து கரையேறினாலும், என்-அதனாற் பயன் என்ன? 

(கருத்து.) நல்வினைக்குத் தகுந்த அளவுதான் இன்பம் உண்டாகுமே தவிர அதற்குமேல் சிறிதும் உண்டாக மாட்டாது. 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *