உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 3,029 

அஞ்சுவிடம் மனம் கொதித்துக் கத்தினாள் செல்வி.. “ போடீ.. நீயும் உன் தீர்வும்! நீ, எப்ப பார்த்தாலும் ஒண்ணு என் புருஷனுக்குச் சப்போர்ட் பண்றே..! இல்லே.., என் பிள்ளைங்களுக்குச் சப்போர்ட் பண்றே! உன்னை ஒரு பிரண்டுன்னு நெனச்சு வந்து பிரச்சனையைச் சொல்ற என்னை ஒரு மனுஷியா மதிக்கறதே இல்லை!.. உன்னை எல்லாம் பிரண்டுன்னு சொல்லிக்கவே வெட்கப்படறேன்! பொரிந்து தள்ளினாள் செல்வி.

எப்போ எந்தப் பிரச்சனை வந்தாலும் செல்விக்கு ஒரே வடிகால் அவள் தோழி அஞ்சு தான்!. செல்விக்குக் கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகள் உண்டு. அவள் கணவன் நல்ல வேலையில் இருந்தார். ஆனால், அவர் கொஞ்சம் முன்கோபி. அவரின் முன்கோப குணத்தால்.., அவரும் அவரால் குடும்பமும் சந்தித்த., சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.ஏராளம்!

“இனி உன்னைத் தேடி வரமாட்டேன்னு உறுதியாச் சொல்லீட்டுப் போவாள் செல்வி!., ஓரிருநாட்களில், வீட்டுக் காரர் முருங்கை மரம் ஏறிவிடுவார். அவள், அஞ்சுவைத் தேடி வந்து விடுவாள்.

அன்றும் வந்தாள்…

‘என்னாச்சு’ என்றாள் அஞ்சு.

‘பின்ன என்னடீ?! ஒங்கப்பன் போடறேன்னு சொன்னபடி நகை போட்டானா? நான் வேற பொண்ணைப் பார்த்திருந்தா எனக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்குமா? ‘ஜாம்! ஜாம்!னு’ ராஜாவாட்டாம் இருந்திருப்பேன்னு!” குதிக்கறார்டீ. எங்கப்பா, கைல இருந்த காசையும் இருந்த காட்டையும் வித்து நகை பண்ணித்தான் போட்டார். இப்ப பதினைஞ்சு வருஷம் கழிச்சு, வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணீயிருந்தா ராஜாவாட்டம் இருந்திருப்பேங்கறாரே? யார்

வேண்டாம்னா… இப்பவும் ஒண்ணும் குடி முழுகிப் போயிடலை போச் சொல்லு!” என்றாள் செல்வி புத்தியில்லாம.

“டீ! செல்வி உன் புருஷனுக்குத்தான் முன் கோபம்னு நெனைச்சேன். உனக்குமாடீ????!!! என்ன பேசறோம்னு தெரிஞ்ச்சுதான் பேசறயா? திட்டினாள் செல்வியை அஞ்சு.

நீ தான் என் புருஷனுக்குப் பரிஞ்சு பேசுவயே? நான் என்ன தப்புடீ பண்ணினேன். அவரு ஆபீசுல கோபத்துல கத்தி சண்டை போட்டு மேலதிகாரிட்ட தகராறு பண்ணி வேலைய ரிசைன் பண்ணீட்டு வந்துட்டு இப்ப அழுதா யார் பொறுப்பு?!” கேவினாள்.

“நான் புருஷனுக்கும் உன் பிள்ளைங்களுக்கும் சப்போர்ட் பண்றேன்னு சொல்றயே.. ஏன் பண்றேன்னு சொல்லு?!” கேட்டாள் அஞ்சு

“ஏன்? நீதான் சொல்லேன்??”

“டீ ,இப்ப நீ கோபத்துல கொதித்துப் பேசயில நானும் உனக்குப் பரிஞ்சு உன் வீட்டுக்காரரையும் உன் பிள்ளைங்களையும் தப்பாப்பேசினா.. உனக்கு அது தொக்காப் போயிடும்… அதனால, உன் குடும்பம் பிரிஞ்சு சின்னா பின்னமாயிடும். என் கண்கள் உன் பிரச்சனையை பெரிசு பண்ண என்னைக்கும் பார்க்காது! மாறாத் தீர்வு சொல்லத்தான் வழி தேடும்!

நீயே சொல்லீட்டே உன் புருஷன் கோபத்துல வேலையை ரிசைன் பண்ணீட்டு வந்துட்டார்னு வேலையில்லாம ஆம்பளை வீட்டுல உட்கார்ந்திருந்தா மனசு என்ன பாடு -படும். யோசி! தவறான முடிவெடுக்க தப்பான வழி தேட, வாழ்க்கை தேட நாமே காரணமா இருந்துடலாமா? பணிந்து போறதுல தப்பில்ல.. கோபம் தரையில எறிஞ்ச பந்து மாதிரி! குதிச்சு மேல தான் போகும்! ஆனா… கைவிட்டுப் போயிடாது. திரும்பி தரைக்குத்தான் வரும்..! அப்படி வரையில போன வேகம் இருக்காது…! கொஞ்சம் கொஞ்சமாக் குறையும் குறையும் வரை பொறுத்துதான் ஆகணும் அதுதான் வாழ்க்கை!” என்றாள் அஞ்சு.

செல்வியின் விழியில் அஞ்சு பார்க்கும் உலகம் சண்டையைத் தூண்டும் உலகமல்ல சமாதானம் பேணும் உலகம்!

புரிந்து கொண்டதாய்த் தோன்றினாலும் என்னைக்கும் மீண்டு வருவாள்.., வரட்டும். பிரண்ட் இன் நீட் ஈஸ் பிரண்டு இண்டீட் இல்லையா. அவள் பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தால் சரி. நினைத்துக் கொண்டாள் அஞ்சு.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *