வெற்றியும் தோல்வியும்
கதையாசிரியர்: காமேஷ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 2,181
எங்கே விழுந்தோம் என்பதை விட எங்கே கவனத்தை சிதறவிட்டோம் என்பதை கவனித்து பாருங்கள் விழவே மாட்டீர்கள்.

ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது அதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் கமல்ராஜ் என்பவன் இருந்தான். இவனுக்கு அருள் என்ற ஒரு நண்பனும் இருந்தான் நன்கு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேரும். சிறிது காலம் சென்றது கமல்ராஜ் கணக்கில் ஒரு பாடம் எடுக்கும் நேரத்தில் சிறிது விளையாட்டு புத்தியவுடன் சாதாரணமாக விட்டு விட்டான் கவனிக்கவில்லை மற்ற பாடங்களை எல்லாம் நன்கு கவனித்தான். ஆனால் கணக்கில் மட்டும் சிறிது கவனக்குறைவாய் இருந்தான். ஆனால் அருள் அனைத்து பாடங்களையும் நன்கு கவனித்தான்.
SSLC தேர்வு வந்தது ஆங்கிலம் தமிழ் தேர்வுகளை கமல்ராஜ் நன்றாக எழுதினான் கணக்கில் மிகவும் கொடுமையாக எழுதினான். இவனுக்கு ஒரே மன கஷ்டம் மற்ற அறிவியல் சமூக அறிவியல் பாடங்களை நன்றாக எழுதினான்.
ஒரு மாதம் கழித்து தேர்வு முடிவுகள் வெளியானது அருள் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்களை எடுத்தான். ஆனால் கமல் ராஜ் கணக்கில் தோல்வியை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளானான்.
அருள் கமலுக்கு ஆறுதல் கூறி “நாம் எங்கே விழுந்தோம் என்பதை விட எங்கே கவனத்தை சிதறவிட்டோம் என்பதை கவனித்து பார்த்தால் விழவே மாட்டோம்” என்று கூறி நான் உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன் நீ கவலைப்பட வேண்டாம். அடுத்த முறை இந்த தேர்வு வைக்கும் போது நீ கண்டிப்பாக தேர்ச்சி பெறுவாய் என்று ஆறுதல் கூறினான்.
தொடர்புள்ள சிறுகதைகள்
நடுவில் இருந்தது
சு.அப்துல் கரீம்
September 6, 2026
இந்த பிரபஞ்சத்தின் நாயகன்…
இளையவேணி கிருஷ்ணா
September 6, 2026
கள்வர் தலைவன்
பம்மல் சம்பந்த முதலியார்
September 6, 2026