வீட்டுக்கொரு காந்தி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 3,247 
 
 

வீட்டுக் கொரு காந்தியா என வியக்க வேண்டாம்! நாட்டுக் கொரு காந்தி உண்டு!. இந்தியாவின் அன்னல் மகாத்மா காந்தியைப் போலவே உலக நாடுகளிலெல்லாம் இருக்கும் நபர்கள் காந்தியின் பெயராலேயே அழைக்கப்படுகிறார்கள்.

‘எல்லை காந்தி’ என்று கான் அப்துல் கபார்கான். அமெரிக்க காந்தி என மார்ட்டின் லூதன் கிங்க்! தென் ஆப்ரிக்க காந்தி நெல்சன் மண்டேலா! இப்படி..நாட்டுக்கொரு காந்தி இருக்கையில்…, உருவாகையில் ஏன் வீட்டுக்கொரு காந்தி இருக்கக் கூடாது?!

காந்தி அப்படி என்ன செய்துவிட்டார்?!

போராட்ட முறையில் தனித்தன்மை! அன்றாடச் செயல்பாட்டு அணுகுமுறைகளில் மாறுபாடு!

வேற்றுமை பாராது எல்லாரையும் சமமாக பாவித்த பாங்கு!. இப்படி ஏராளம் சொல்லிக்கொண்டேபோகலாம்!தன் தன் வேலைகளைத்தானே செய்து கொண்ட மேன்மை..!படித்திருக்கிறோம்! பார்த்ததில்லை!

ஒவ்வொரு ஞாயிற்ற்றுக் கிழமையும் வீட்டின் லாய்லெட்டுகளைச் சுத்தம் செய்வது சுதாகர் வழக்கம்!. அன்று டாய்லெட் கழுவ பிரத்தேயமாய் வாங்கி வந்த ‘பிரஸை’ எடுத்துக் கொண்டு போனான்.

நீள பிளாஸ்டிக் கம்பில் குண்டு உருளைமாதிரி பிரஸ் அது! ‘எல் மாதிரி வளைந்த் பிரஸ் கழுவ நுழைத்தால் குளோசெட்டில் இடிக்கும் சப்தம் வரும். குளேசெட்டை உடைத்துவிடுமோ என்கிற அச்சத்தில் வாங்கிய உருளை பிரஸ்! அது. நல்லா அழுக்கு நீக்கியது! சும்மா சொல்லக்கூடாது! எந்த பிரகஸ்பதி கண்டுபிடிப்போ?!!. கழுவுவதும் ஒரு கலைதானே?!

டாய்லெட் கிளீனர் நீலக் கலரில் ஊற்றி பிரஸ் வைத்துத் தேய்க்க டொபுக்குனு பிச்சுக்குச்சு உருண்டைக் குஞ்சம்!… ‘அய்யோ பத்திக்கிச்சுன்னு….’ பூனைக் கண்கள் போல மின்னலுடன் அலறவா முடியும்?! பிஞ்ச குஞ்சம் உருளை உருண்டு, குளோசெட்டின் உள்ளே போய் உட்கார்ந்து, சிக்கிக் கொண்டது.

கைவிட்டா எடுக்க முடியும்!? அசிங்கம் ஆச்சாரம்வெல்லாம் அடி வயிற்றைப் புரட்ட, குப்பை எடுக்க வரும் குமாரைக் கூப்பிட்டால்… வந்தான்…

‘ஆயிரம் ரூபாயாகும்!’ என்றான் கூசாமல்.

டாய்லெட் கழுவக் கூசினதினால்தானே அவன் கூசாமல் ஆயிரம் ரூபாய் கேட்கிறான் குஞ்சமெடுக்க?!

‘ஏம்ப்பா? இது, எடுக்க ஆயிரம் ரூபாயா?!

‘எது எடுத்தா என்ன? ஆயிரம் ரூபாய்க்கு ஐந்து ரூபாய் குறையாது!’ என்றான் தீர்மாணமாக!.

‘ஏம்ப்பா… டாஸ்லெட்டில் விழுந்த பிளாஸ்டிக் கிளீனரோட புருசு குஞ்சம் அத எடுக்கணும்! அதிலென்ன இருக்கு?! இதுக்கா ஆயிரம் ரூபா?! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுப்பா!’ கெஞ்சினான் சுதாகர்.

சார்…! அரிசி உங்களுக்கும் கிலோ எழுபது ரூபா எங்களுக்கும் அதேதான். நான் குப்பை எடுக்கறவங்கறதால கடைல விலை கொறைக்கறானுகளா? இல்லையே!

சரிப்பா.. அதுக்குன்னு இப்படியா?… உனக்குத்தான் ரேஷன்ல அரிசி போடறாங்களே?

ஏன்? உங்களுக்கும்தான் போடறாங்க.!. ஆனா நீங்க அதை வாங்கறதில்லை. பிரஸ்டீஜ்! சர்க்கறையை மட்டும் சமத்தா போதுன்னு வெவரமா வெள்ளைக் கார்டு வாங்கிக்கிறீங்க! இன்னும் சிலர் கவுரமா.. ஆதார்க்கு மட்டும் இணைக்கன்னு அடையாள கார்டு வாங்கிக்கிறீங்க! அதெல்லாம் எதுக்கு?!

ஆயிரம் குடுங்க எடுக்கறேன்!. வேற எடம் போகணும்! என்றான் குமார் கறாராக!,

அவன் சொன்ன ஆதார் அடையாள அட்டை வெள்ளை ரேஷன் கார்டு எல்லாம் வெளியேற, ‘ஆயிரம் ரூபாய்’ மட்டும் ,மனசுள் அப்படியே நின்னது!.

சரி, அப்புறமா சொல்லி அனுப்பறேன்னு சொல்லி, அவனை அனுப்பிச்சுட்டு… மனைவியை அனுப்பி ஒரு ‘லாங்க் ஹாண்டில் கிளவுஸ்’ வாங்கி வரச் செய்து கையில் மாட்டிக் கொண்டு குளோசெட்டில் கூச்சப்படாமல் கையை நுழைத்து… காந்தியைத் துதித்துக் சிக்கிய குஞ்சத்தை சிக்கனமாய் எடுத்து எறிந்தான்.

மனசு கைதட்டி கவுரவித்தது!. காந்தி அவர் கழிப்பறையை அவரேதானே கிளீன் பண்ணினார்?!

நீதான் இன்றிலிருந்து…

இன்றிலிருந்து…?

இந்த ‘வீட்டுக் காந்தி!’ என்று வெகுமதிப் பாராட்டை விநியோகித்தது மனசு!

அய்யோ!ஆயிரம் பொன்னாச்சே?! ஆயிரம் பொன்னாச்சே?!ன்னு அடித்துக் கொண்டது பர்ஸ்!

ஆயிரம் ரூபாய், அமுக்கமாய்ச் சிரிக்க, அதன் வாயை அமுக்கி மூடியது பர்ஸ்!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *