விரல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2026
பார்வையிட்டோர்: 144 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெளியே-

இருளும், ஒளியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, கலந்து, குமைந்து உறவாட… மாலைப்பொழுது ‘குழந்தை’ உருவாகிக் கொண்டிருந்தது! இரு ரு பொருள்களின் இணைப்பிலே புதிதாக இன்னொன்று உதயமாகும் ‘தத்துவ’த்தை இயற்கை போதித்துக்கொண்டிருந்தது!..

உள்ளே-

வீடு கலகலப்பாக இயங்கிக்கொண்டிருந்தது! எங்கும் ஒரே பரபரப்பும் ஆரவாரமுமாக,-அன்று அங்கு ஏதோ விசேடமாக நடக்கப் போவதற்கு அறிகுறியாக–விளங்கியது. வீட்டார்களனைவரும் வைத்த பொருளை எடுக்கச் செல்வதைப்போல் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர்.

வீட்டின் நடுக் கூடத்தில் சிறு மேடையொன் அமைக்கப் பட்டிருக்கிறது. அதில் ஒரு ‘பழைய காலத்து காஷ்மீர் கம்ப ளம் தூசிதட்டி விரிக்கப்பட்டிருக்கிறது அந்த மேடையின் நடு விலே அழகான வீணையொன்று வைக்கப்பட்டிருக்கிறது! அந்த மேடைக்கு கீழே சற்றுத் தள்ளி புத்தம் புதிய ‘புற்பாய்’கள் வருவோருக்காக விரிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புற்பாய்களின் ஒன்றின் மத்தியில் ஒரு வெள்ளித் தட்டில் சந்தனக்கிண்ணம், பன்னீர்ச் செம்பு, வெற்றிலை, பாக்கு, தேங்காய் – முதலிய மங் சுலப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன!

கல்யாணிக்கு நிற்க நேரமில்லாமல் வேலையிருந்துகொண்டே இருக்கிறது!… அவள் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறாள். நெற்றியிலே துளிர்க்கும் வேர்வையைக்கூட துடைக்க நேரமில்லாமல்

“எடி கல்யாணி! எங்க தொலஞ்சு போயிட்ட… இஞ்ச வாடி… கூடத்தில எல்லாத்தையும் ஒழுங்காக் கொண்டுபோய் வைச்சுட்டியா.. ?” அடுக்களையிலிருந்து சின்னம்மா கூப்பாடு போடுகிறாள்.

“அப்பவே வைச்சுட்டனே சின்னம்மா…!” என்கிறாள் கல்யாணி.

“கல்யாணி! கொஞ்சம் லச்சுமியை அலங்கரிச்சு விடு அவர்கள் வருகிற நேரமாச்சு நேரமாச்சு ”-என்கிறாள் பாட்டி.

“அதோ லச்சுமியே நல்லா சிங்காரிச்சு வந்துட்டாளே!… நான் எதற்கு?..” என்கிறாள் அங்குவரும் லச்சுமியைக் காட்டி..!

“மூதேவிக்குப் பொறாமை! தங்கச்சிக்கு நல்லதை செய்யக்கூட சாட்டுச் சொல்லுது நல்லா… தெரியாமலா கடவுள் குதிரையின் குணம் அறிஞ்சு கொம்பு கொடுக்காமல் விட்டிருக் காரு…” – பாட்டி முணுமுணுக்கிறாள். கல்யாணியிள் முகம் வாட்டமடைகின்றது.

“டீ கல்யாணி, அங்க என்ன ‘விடுப்பு’ப் பார்க்குறாய்?… இங்க வந்து பலகாரங்களை எடுத்து ஒழுங்கா தட்டத்தில வை!” என்று சின்னம்மாவின் குரல் உச்சஸ்தாயில் எழும்பவே, கல்யாணி பறக்கிறாள்…

“இதோ! எல்லாரும் வந்தாச்சு!… எல்லாம் தயாரா வைச்சிருக்கியளா?..” – என்று அவசரம் அவசரமாக உள்ளே நுழைகிறார் அப்பா கார்த்திகேசு.

கல்யாணி அவசரம் அவசரமாக கூடத்தை நோக்கி விரைகிறாள். “ஏண்டி சனியனே! நல்லநாளுமா அதுவுமா இந்தக் கிழிசலைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்!.. பாக்கிறவை எல்லாம் என்னைத்தானே திட்டுவார்கள்… நான் கொடுமைப் படுத்திற னெண்டு!… என்னமோ பூவும் மஞ்சளும்தான் அழிஞ்சு போச் செண்டா. உடுக்கிறதையாவது நல்லதாக் கட்டக்கூடாதா?…”

‘ஐயோ, சின்னம்மா!… நல்லநாளும் அதுமா என்னை மூதேவி, சனியன் என்றெல்லாம் திட்டலாமா?…’ கல்யாணியின் மனம் அழுகின்றது.

கல்யாணி ஒரு வரட்சிப் புன்னகையை உதிர்த்துவிட்டு, அறைக்குள் சென்று ஒரு வெள்ளை ‘வாயில்’ புடவையொன்றை அவசரமாக சுற்றிக்கொள்கிறாள். வாய்விட்டு அழவேண்டும் போல இருக்கிருக்கிறது. ஆனால்…நல்லநாளும் அதுமா?..

வெளியே வந்து தூண்மறைவாக நின்றுகொண்டு, கூடத்தைக் கவனிக்கிறாள்! என்னதான் விதவைக் கோலம் பூண்டு கொண்டாலும் வயதுக்குரிய ‘விடுப்பு’ப் பார்க்கும் குணம் போய் விடுமா? நீ விதவை என்று கூறி சமூகம் அவளிடம் வெள் ளைக் கலையைக் கொடுத்து, உன்னைப் பொறுத்த வரையில் உல கம் ருண்டுவிட்டது, இன்பம் அற்றுவிட்டது! ஆனால். நீ சாகக்கூடாது!.. வாழவேண்டும்! நடைப்பிணமாகவாவது வாழ்ந்தே தீரவேண்டும்!. என்று சொல்லி அவளைச் சிறைப்படுத்திவிட்டால், அவள் உணர்ச்சிகளெல்லாம் இற்று விடும், அற்றுப் போய்விட்டன என்ற எண்ணமா?.. ‘பாகற்காயை’ நன்றாக நன்றாக வதக்கிக் காய்ச்சினால் கூட அதன் தன்மை’ அற்றுப் போவதில்லையே! அப்படி இருக்கும்போது-உயிரோடு உயிராக, ரத்தத்தோடு ரத்தமாக கலந்துவிட்ட உணர்ச்சிச் சுழிப்புகளும், எண்ணக் கனவுகளும் பச்சைக் கிளியை பிடித்து யி லடைத்துவிட்டால், அதற்கு பறக்கும் ஆசை அற்றுவிட் டது என்ற எண்ணமா? விந்தை மனிதர்கள்! விந்தையான சமூகம்!.. விசித்திரமான சட்டம்!

கல்யாணி இள வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்துவிட்டு, சின்னம்மாவின் ஏசலுக்கும், பழிச் சொற்களுக்கு மிடையே உயிர் வாழும் ‘சாதுப் பசு’…

லக்ஷ்மி – சித்தியின் ஒரே அருமை மகள்… செல்வ மகள்… வீட்டில் அவளிட்டதுதான் சட்டம் அவளுக்குத் திடீரென்று ஆசை வந்துவிட்டது ‘வீணை’ கற்கவேண்டுமென்று. அம்மாவை அண்டினாள் அப்புறம் மறுப்பேது?… ஆனால்… முதலில் கார்த் திகேசு மறுக்கத்தான் செய்தார். அவளுக்கு எதற்கு வீணை பாட்டெல்லாம்?… நாளைக்கு ஒருவனிடம் போய் வாழப் போகிறவள். அவனுக்கென்ன நித்தம் வாசித்துக் காட்டிக் கொண்டா இருக்கப் போகிறாள்?”

“ஏதோ நல்ல நாளும் அதுவுமா அவள் பாடாமலா இருக்கப் போகிறாள்… எனக்குத் தெரியாது அவளுக்கு ஒரு நல்ல வீணை வித்துவானாகப் பாருங்கோ!…”

“மூத்தவளுக்கு பாட்டெல்லாம் சொல்லி வைத்து என்ன பயனைக் கண்டோம்… அவள் வீணையைத் தொடாதவாறுதான் கடவுள் செய்து வைத்திருக்காரே!”

“அந்த மூதேவியின் தலையில் அப்படி எழுதியிருந்தா அதுக்கு நாம் என்ன செய்யிறது?… எதுக்கும் ‘பொசிப்பு’ வேண்டாமா?… என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது அவளுக்கு வீணை கற்பிக்க ஏதாவது வழி செய்யுங்க!… பாவம் பிள்ளையும் ஆசைப் படுறாள்!”

இறுதியில் அவள் பிடிவாதம்தான் வென்றது! லக்ஷ்மியும் ஓரளவு கெட்டித்தனமாக பயீன்றுவிட்டாள்… அவளின் அரங்கேற்றம் தான் இன்று நடக்கப்போகிறது! .. கார்த்திகேசு அரங்கேற்றத்தை ஆடம்பரமாக நடத்த விரும்பவில்லை சங்கீதம் பற்றி நல்லாத் தெரிந்த நாலு பேரின் முன்னால், அரங்கேற்றி, அவர்களின் அபிப்பிராயத்தை பெற்றுவிட்டால் போதும் என்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்..

கூடம் நிறைய ஆட்கள் வந்து நிரம்பி விட்டார்கள். முன் வரிசையில் சங்கீதப் பெரியார்களும், பின் வரிசைகளில் பக்கத்து டுக்காரர்களும், முன் வீட்டுக்காரர்களும் தங்கள் ‘குஞ்சும் குளுவான்’களோடு வந்து, கூடத்தை நிரப்பிவிட்டார்கள்.

முதலில் எல்லாருக்கும் வெற்றிலை பாக்கு வழங்கப்படுகிறது! தொடர்ந்து பலகாரங்கள் காலியாகின்றன..

“ம் இனி தொடங்கலாமே?…” என்கிறார் ஒருவர்.

லக்ஷ்மி தழையத் தழையக் கட்டிய பட்டுப்புடவை ‘சர சர’க்க கூடத்துக்கு வருகிறாள்! கூடத்திலிருந்தவர்களை வணங்கி விட்டு வீணையைக் கையிலெடுத்தாள்!… இயற்கையிலே அவ ளுக்கு நல்ல சாரீரம் அமைந்திருந்தது! வீணையின் மதுரகாண மும், அவளின் மதுர கண்டமும் போட்டியிடுகின்றன!… அவை யோரின் தலையாடத் தொடங்குகிறது!.. ஒன்று முடிந்து மற் றொன்று என்று, தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கிறாள் இதோ சாருகேசி ராகத்தில்…

கல்யாணி திடுக்கிடுகின்றாள்! அவருக்குப் பிடித்தமான ராகம்! அவள் மெய்சிலிர்க்கிறது! .. கண்கள் கண்கள் இசையின் இன்ப மயமான தழுவலில் மூடிக் கொள்கின்றன! அவள் எங்கோ பறந்து கொண்டிருக்கிறாள்.. அவள் காலத்தின் முன் நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறாளா?… மனப்பூ அவளின் கடந்தகால நினைவுகளில் பூவிதழ் விரிக்கின்றதா?.. அதன் சுகந்த மணத்தில் கல்யாணி லயித்துப்போய் விடுகிறாள்!


முதலிரவு! மணப் பெண்ணான கல்யாணியின் உள்ளத்திே இனம் தெரியாத பூரிப்பு! அத்துடன் இனந் தெரியாத பயமும் உள்ளத்தை ஊடுருவுகிறது; பிறந்தநாட் பயனை அனுபவிக்கப் போகிறோமே என்ற எண்ணத்தில் பிறந்த கிறக்க நிலை! இட்ட அடி மெல்லெடுத்து, பாலுடன் அறைக்குள் செல்கிறாள். மலர் தூவிய மஞ்சம் வரவேற்பு கொடுக்கின்றது. அதில் அவன் அமர்ந்திருக்கிறான். அவள் நிற்கிறாள். அவன் அவளைக் காணாததுபோலப் பாவனை செய்துகொண்டு…

அவளுக்கு ஆத்திரமும், அழுகையும் வெட்கம் அருகில் செல்ல விடாது தடை செய்கின்றது. அவள் கண்களில் முத்து திரள்கின்றதா?… அவன் திடுக்கிடுகின்றான்… இந்த அழகிய ஊடலுக்குப் பரிசாக கண்ணீர்த் துளிகளா?……

“அடடா!” என்று அவளைத்தேற்றி, அருகிலணைத்து

“கல்யாணி!””

“உம்..!”

“பேசமாட்டாயா?”

“உகூம்…!”

“ஏன் அப்படி…?”

“ஏனோ அப்படித்தான்!”… என்று சொன்னவள் கலக வென்று சிரிக்கிறாள். அவன் அந்தப் போதையில் கிறங்குகிறான்….

”கல்யாணி'”

”என்னத்தான்?” செல்லமாக கேட்கிறாள்.

“அன்று பாடினாயே அத்த சாருகேசி. அதைப் பாடுகிறாயா?…”

“இப்போதா அத்தான்?…”

“இப்போதில்லாமல், எப்போதாம்?…” செல்லமாக கேட்கிறான். மறுக்க முடியுமா அவளால்?…

அவள் கைகளில் வீணை அழகு பெறுகிறதா?… வீணையின் நாதநரம்புகளில் விரல்கள் லாவண்யத்துடன் நர்த்தன மிடுகின் றன. வீணையும் நாதமுமாக ஒன்றி விடுகின்றாள்!… நாதவலைகள் ஒன்றிலிருந்து ஒன்றாக அலை பிரிந்து.. நாதச் சுழிப்பிலே, கானத் தின் போதையிலே அவன் கிறங்குகிறான்!

“ஆ! இதென்ன அவன் முகத்தில் சுருக்கங்கள்.. அவனுக்குங் பாட்டுப் பிடிக்கவில்லையா என்ன?”. கல்யாணி திடுக்கிடுகிறாள்..

அவளின் பழைய நினைவுகள் அறுபட்டுப்போகின்றன!…..


லக்ஷ்மி இன்னமும் சாருகேசியைத்தான் மீட்டிக்கொண்டிரு கிறாள். ஆனால்.. தென்ன சுருதிபேதம். ஐயோ லக்ஷ்மி உணரவில்லையா சுருதிபேதப் படுவதை? ? அவளின் நெஞ்சம் துடிக்கிறது. சுருதிபேதம் வரவர வலுக்கிறது!

‘.. அவருக்குப் பிடித்தமான ராகம்! அதிலே சுருதிபேதமா?’ நீண்ட காலம் செயலற்றுக்கிடந்த அவளின் விரல்கள் துடிக் கின்றன! உடலிலே பதறல்! மனதிலே ஆவேசம்… என் செய்கிறேன் என்பதை கல்யாணி மறந்துவிடுகிறாள் மேடைக் குப் பாய்ந்தோடுகிறாள்…

லக்ஷ்மியின் கரத்திலிருந்த வீணை கல்யாணியின் காத்துக்கு மாறிவிடுகின்றது. அவளின் விரல்களின் அசைவுகளுக்கேற்ப நாத நரம்புகள் வளைந்து கொடுக்கின்றனவா? அல்லது …. நரம்புகளுக்கு ஏற்ப அவளின் விரல்கள் ஓடிவிளையாடுகின்றனவா? கந்தர்வ கானமா? நாரதரின் நாத வெள்ளமா? கானவெள் ளத்தில் சபையோர் மூழ்கித் திளைத்து…

அவர்கள் எங்கோ, எங்கோ… காடுமலை, நாடுநதி எல்லாம் கடந்து வானமண்டலத்திலே சஞ்சரிக்கிறார்களா? அவர்களின் சுலைகளெல்லாம் தென்றல் தழுவிய பூக்க பூக்களாக ஆடுகின்றன!

‘ஆகா! ஆகா! சாட்சாத் சரஸ்வதியே அமர்ந்து வீணை வாசிப்பது போல…’

அப்போது…

“வாடி! இதென்ன ஆட்டம், பந்தி நடுவில உன்ர குணம் அறிஞ்சு தான் கடவுள் உன்னை இப்படிச் செய்திருக்கிறார் நிகழ்ச்சியை பாழ் படுத்திவிட்டியே! என்ன திமிரடி உனக்கு! வா உன்னை என்ன செய்தால் போதாது!…” – அவள் தலையை பற்றி ‘கரகர’ வென்று ழுத்துக் கொண்டு உள்ளே போகிறாள் சின்னம்மா உரத்த குரலில் அவளைத் திட்டும் பேச்சுகள் வெளியிலே கேட்கின்றன…

சபையோர் ஏதோ வானமண்டலத்திலே இருந்து வீழ்ந்த அதிர்ச்சி நீங்கப் பெறாமல், நடந்தது என்ன வென்று புரியாத நிலையில்…

கார்த்திகேசுதான் நிலைமையைச் சமாளிக்க முன்வருகிறார். “பறவாயில்ல… தொடர்ந்து லச்சுமியே வாசிச்சு முடிக்கட்டும்.

… ஏதோ கோளாறு நடந்து போச்சு!… வாம்மா லச்சுமி நீ வந்து வாசி!” என்று சொல்லி நகர்கிறார்!

லக்ஷ்மி தன் வீணையை எடுத்துக்கொண்டு தன் மென் விரலை நாத நரம்புகளில் ஓடவிடுகிறாள்! அப்போது-

“டங்!” – என்ற ஓசையுடன் வீணையின் நாதநரம்பான தந்தி அறுந்து சுருள்கிறது! லக்ஷ்மியின் முகம் இருள்கிறது! மயங்கிச் சாய்கிறாள்! சபையோர் பிரமையிலாழ்கின்றனர்!…

அங்கே வீணையின் நாத நரம்பு மட்டும் துண்டிக்கப்படவில்லை! உண்மைக் ‘கலைஞி’யின் விரல்களுமல்லவா துண்டிக்கப்பட்டு விட்டன.

– ரசிகர் குழு போட்டிக் கதைகள், பதிப்பாசியர்: எம்.ஏ.ரஹ்மான், முதற் பதிப்பு: மே 1966, அரசு வெளியீடு, கொழும்பு.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *