யார் பெரியவர்?
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 215
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காற்றுக்கும் பகலவனுக்கு மிடையே ஒரு சொற்போர் எழுந்தது, அவர்கள் இருவரிடையே யார் பெரியவர் என்றறிவதே அதன் நோக்கம்.
“அதோ சாலை வழியே செல்லும் மனிதன் போர்த்துச் செல்லும் போர்வையை அகற்றுபவர் யாரோ அவரே பெரியவர்,”என்று இருவரும்பேசிக் கொண்டனர்.
காற்றுத் தன் வன்மையை யெல்லாம் சேர்த்து அடித்தது. மனிதன் தன்னாலியன்ற மட்டும் இறுக் கமாகப் போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டான்.
பகலவன் சற்றே காய்ந்தான்; மனிதன் உடனே போர்வையை அகற்றினான்.
பகலவன் மென் கதிர்களுக்குக் காற்றின் பெரு வீச்சுத் தோற்றது.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.