மாமன் மகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 1,494
“உங்கள் அம்மா ஊரில் இருந்து வாட்ஸ் அப்பில். போன் பண்றா. நேற்று மாலை இரண்டு தடவைகள் போன் செய்து ,மிஸ்ட் கால் வந்திருக்குது , போனை எடுத்து அவவிடம் என்ன எண்டு கேளுங்கோ அது அவருடைய கால் தான் என்று நினைக்கிறேன் இந்த முறை நீங்கள் அவவோடை பேசும் பொது கவனமாக பேசுங்கோ”, வரதனின் மனைவி ஒலிவியா ஆங்கிலத்தில் அவனுக்கு சொன்னாள்.
வரதன் என்ற வரதராஜன் , யாழ்ப்பாணாத்தில் உள்ள இந்துக் கல்லுரிடில் ஏ லெவல் அறிவியல் பாடங்கள் படித்து . அதன் பின் கொழும்பு பல்கலை க் கழகத்தில் படித்து பி எஸ் சி பட்டம் பெற்றவன் . கொழும்பில் சில காலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைகளத்தில் புள்ளியியல் வல்லுனராக வேலை செய்து , இனக் கலவரத்தின்பின் கனடாவில் உள்ளஸ்காப்ரோவுக்கு புலம் பெயர்ந்து பல ஆண்டுகளாயிற்று . கனடாவுக்கு வந்த புதிதில் அவனுக்கு நல்ல வேலை கிடைக்க வில்லை .
தன் நண்பன் நாதனின் உதவியோடு டிம் ஹோர்ட்டன்ஸ் உணவகத்தில் அவனுக்கு வேலை’ கிடைத்தது .அதன் பின் ,கெனடி வீதியில் உள்ள பத்து மாடிக் கட்டித்தில் செக்யூரிட்டி வேலை செய்தான் . ஆங்கிலம் பேசக் கூடிய
வரதன், ஆறடி உயரமானவன் . சுமாரன அழகன் . பத்து மாடி கட்டிடத்தத்தில் செக்யூரிட்டி வேலை செய்த காலத்தில் ,அங்கு வசித்த ஒலிவியா என்ற பெண்ணை சந்திக்க நேரிட்டது .அவளும் அவனைப்போல் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து புலம் பெய்ரந்தவள். ஆங்கிலம் , பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகள்பேசுவாள். அதனால் அவளுக்கு ஒரு பிரபல நிறுவம் ஒன்றில் உதவி மார்க்கட்டிங் மனேஜர் வேலை கிடைத்தது. வரதன் செக்யூரிட்டி வேலை செய்த கட்டிட்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ஒலிவியா வசித்து வந்தாள்.
ஒலிவியவை அடிக்கடி சந்தித்த வரதன் திருமணாமாகத அவளின் மேல் அவனுக்கு காதல் காதல் ஏற்றபட்டது . அவளுக்கும் தோற்றமுள்ள சிரித்து பழகும் அவனை பிடித்துக் கொண்டது . இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர்.
அவர்களின் காதலை அறிந்த வரதனின் நண்பனன நாதன் ஒரு நாள் சொன்னான் ”மச்சான் வராதா நீ ஒலியாவை காதலித்து திருமணம் செய்யாப் போவது எனக்கு தெரியும் . நீ ஒரு இந்து, அதோடு யாழ்ப்பாண தமிழ் கலாச்சரத்தில் வளர்ந்தவன் . உன் அண்ணன் ஒரு மாவீரன். உனக்கு தெரிய வேண்டும் ஐரோப்பாவில் இருந்து புலம் பெயர்ந்த ஒலிவியா ஒரு கிறிஸ்தவ பெண் என்று . உனக்கு அவளது பூர்வீகம் தெரியாது. அது மட்டுமல்ல அவர்களுடைய கலாச்சாரம் வேறு . அனேக வெள்ளைக்கார பெண்கள் ஒருவனை காதலித்து திருமணம் செய்து சில வருடங்களுக்கு பின் விவாகரத்து செய்து விடுவார்கள். அவர்களுக்கு கணவனை மாற்றுவது ஆடை மாற்றுவது போல, நீ யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கலாச்சாரம் வேறு.
உனக்கு ஊரிலைஉன் மாமன் மகள் மஞ்சுளா உனக்காக அங்கு திருமணம் செய்யாமல் காத்திருக்கிறாள் . உன் அம்மாவுக்கு அவளை’ உனக்கு செய்து வைக்க விருப்பம் ஏனென்றால் மஞ்சுளா உன் அம்மாவின் தம்பி மகள். நீ யோசித்து முடிவு எடு, பின் கவலை பட வேண்டி வரும். இதுக்கு மேல் நான் ஒண்டும் உனக்கு சொலப்போவதில்லை“.
“மச்சான் நாதன் நீ சொல்வது உண்மைதான் ஆனால், என் மச்சாள் மஞ்சுளாவுக்கு ஒரு சொல் ஆங்கிலம் பேச வராது. அவள் ஊர்கலாச்சாரத்தில் வளர்ந்தவள். ஊரில் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. அடிக்கடி கோயிலுக்குப் போவாரள். விரதம் இருப்பாள் . சிரித்து பேச கூச்சப் படுவாள். ஒரு காலத்தில் நானும் அவளும் ஒன்றாக ஓடிப் பிடித்து விளையாடினோம் என்பது உண்மைதான் அது ஒரு காலம்.
அம்மாவுக்கு விருப்பம்நான் அவளை நான் முடிக்க வேண்டும் என்று. அவள் இங்கை வந்தால் இந்த கலாச்சாரத்துடன் ஒத்துப் போகமாட்டாள் . எனக்கு ஒலிவியாவை பிடித்துவிட்டது அவள் ஆங்கிலம், பிரெச் , ஜெர்மன் மொழிகள் பேசுவாள். நல்ல வேலையில் இருக்கிறள். என்னிலும் பார்க்க அவள் கூட சம்பளம் எடுக்கிறாள் கார் வைத்து இருக்கிறாள். அவளுக்கும் என்னை பிடித்து விட்டது. நாங்கள் திருமணம் செய்ய தீர்மானித்து விட்டோம்”.
“இனி உன் இஷ்டபடி செய். ஒரு நாளைக்கு நீ செய்த தவறை உணர்வாய்”, நாதன் சொன்னான்.
வரதனுக்கு நண்பன் சொன்னது பிடிக்கவில்லை. அதன் பின் அவனை சந்திப்பதை வரதன் தவிர்த்தான்.
வரதன் ஒளிவியவை திருமணம் செய்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது . தனது ஊர் சனங்கலின் சந்திப்பை வரதன் தவிர்த்தான், காரணம் தான் ஒலிவியாவை திருமணம் செய்த செய்தி ஊருக்கு போய் விடும் என்ற பயம் அவனுக்கு. திருமணம் ஆகி அவர்களுக்கு குழந்தைகள் இல்லை . காரணம் ஒலிவியா அதை விரும்ப வில்லை . வரதனும் அவளை வற்புறுத்தவில்லை. இந்த நிலையில் தான் வரதனின தாய் கனகம்மாவிடம் இருந்து மிஸ்ட் வட்ஸ் அப் கோல்கள் வந்தன.
“சரி ஒலிவியா நான் அவவுக்கு போன் செய்யிறன் நீர் ஒண்டும அவவோடு பேச வேண்டாம், அவவுக்கு ஆங்கிலம் தெரியாது” என்று ஆங்கிலதில் ஒலியாவுக்கு சொன்னான். நாதன்.
“எனக்கு எல்லாம் தெரியும் நான் ஏன் அவவுடன் பேச வேண்டும்“ ஆங்கிலத்தில் வரதனுக்கு ஒலிவியா பதில் சொன்னாள் .
வரதன் தாயுடன் போனில் பேசினான் “என்னம்மா அடிக்கடி போன் பண்றீங்க.. நான் காசு மாதம் மாதம் அனுப்புறன் தானே இனி என்ன வேண்டும்”
“எண்டை ராசா வரதா உண்டை குரலை நான் கேட்டு கனகாலம். உன்னை பற்றி கெட்டக் கனவு ஒண்டு கண்டனான். அதோடை எங்கடை ஜிம்மி அடிக்கடி ஊளை இடுது. அது தான் உனக்கு போன் செய்தனான். எப்படி சுகமாய் இருக்கிறாயே?”
“ஓம் சுகமாய் இருக்கிறன். எனக்கு வேலை அதிகம் உனக்கு போன் செய்ய எனக்கு நேரம் கிடைப்பதில்லை“
“அவன் செல்வன், சிறாப்பர் சின்னையா மகன் இங்கே கனடாவிலிருந்து ஒரு மாத லீவில் வந்து போனவன் அவனிடம் விசாரித்த போது அவன் சொன்னான் உன்னை கண்டு கன காலம் எண்டு”
”அம்மா அவன் இருகிறது வெகு தூரத்தில் உள்ள கிச்னர் என்ற ஊரில். அவனின் பேச்சை விடு .
அம்மா உன் சுகம் எப்படி ?அது சரி நீ அடிக்கடி போய் உன் உடம்பை டாக்டரிடம் செக் பண்ணுகிறாயே? நான் உனக்கு வேண்டிய காசு மாதமாதம் அனுப்புகிறன் தானே”
“நீ அனுப்புகிற காசை விட உண்டை அப்பரிண்டை பென்சன் எனக்கு வருகுது. எங்கள் வீட்டு அறை ஒன்றை வாடகைக்கு விட்டு அந்த காசம் வருகுது. நீ அனுப்புற காசில உண்டை கலியாணத்துக்கு தாலி செய்ய அவள் நாகம்மா விடம் சீட்டு பிடிக்கிறன். எனக்கு சமைத்து போட ஒரு வேலைக்காரி வந்து போறாரள். எனக்கு ஒரு குறையும் இல்லை”
“அப்ப ஏன் போன் செய்த நீ”
“உன் கல்யாண விஷயமாக தான் பேச போன் செய்தனான் அவள் உண்டை மச்சான் மஞ்சுளா எவ்வளவு காலம் தான் உன்னை கல்யாணம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறது? அவள் பெடிச்சி வேறு ஒருனையும் உன்னை தவிர முடிக்க மாட்டன் எண்டு ஒத்தை காலில் நிக்கிறாள். பாவம் பெடிச்சி உனக்காக விரதம் இருக்கிறாள்.
கெதியிலை நீ லீவ் போட்டு வந்து அவளுடைய கழுத்தில் ஒரு தாலியைக் கட்டி போட்டு அவளை கனடாவுக்கு கூட்டிக்கொண்டு போவன்”, ராசம்மா சொன்னாள்.
“எனக்கு எங்க நேரம் இருக்கு முடிவு உங்கை வர. வேலை கஸ்டம் அம்மா “
“நீ எப்பவும் இதை தான் சொல்லுறாய். இப்போ போய் நீ ஐநது வருஷம் ஆச்சு கல்யாணம் செய்யாமல் போன நீ. அப்ப உன் அப்பவும் நானும் சொன் னோம், உன் மச்சானை முடிச்சி அவளையும் கூட்டிக்கொண்டு போ எண்டு. சின்ன வயசு முதற்கொண்டே உனக்கு அவளை தெரியும்“
“அம்மா இந்த கலியாணக் கதையை விடுங்கள் எனக்கு இப்ப வேலையில் புரமோஷன் கிடைக்க இருக்கிறது . அது எனக்கு முக்கியம். இப்ப லீவு எடுத்து ஊருக்கு வர முடியாது
“அது சரி வரதா , நான் கேள்விப்பட்டேன் உங்க கனடாவுக்கு போனவர்கள் பலர் இங்கை ஊருக்கு வந்து கல்யாணம் முடிச்சு போட்டு மனுசி மாரைய்’ கூட்டி கொண்டு போய் இருக்கிறார்கள் எண்டு . அது உண்மையே. அப்படி நீயும் வந்து உண்டை மச்சாளை கலியாணம் செய்து அவளை கூட்டிக் கொண்டு போவன்”.
“உதை யார் உங்களுக்கு சொன்னது அம்மா”?
“வேறு யார் இந்த சித்தப்பாவின் மருமகனின் தம்பி தான். அவன் கனடாவில் வேலை செய்கிறான். அவனை உனக்கு தெரிய வேண்டுமே”.
“யார் அவன் . பெயரை சொலுங்கோ அம்மா”
“என்னடா கேக்கற உன்னோட ஒரே பள்ளிக்கூடத்தில். படிச்ச சிவலிங்கம் . அவன் க கடைவிலை நாள் உத்தியோகத்தில் ஒருகிறானாம். அவன் உனக்கு முந்தி கனடாவுக்கு போனவன் . சிவா கனடாவுக்கு போய் பல வருசங்களுக்கு பிறகு போன மாதம் ஊருக்கு வந்து தான் ஸ்கூலிலை படிக்கும் போது காதலித்த பெடிச்சியை கல்யாணம் பண்ணி அவளையும் கனடா வுக்கு கூட்டிக் கொண்டு போயிட்டான். “
“நீயும் அவனை போல இங்க வந்து உன் மச்சாள் கழுத்திலை தாலி ஒன்றை கட்டி கூட்டி போவன்“
“உனக்கு எப்ப எடுத்தாலும் என்ற எண்டை கல்யாணத்தை பற்றி தான் பேசுவாய் . உங்கை வந்து போற செலவு அதிகம் எண்டு உனக்கு தெரியும் தானே அம்மா” வரதன் அலுப்புடன் தாயுக்கு சொன்னான்
“வரதா நான் உயிரோடு இருக்கப் போவது கொஞ்ச காலம்தான். அதக்கி டையில் வந்திட்டு போ . என்ன “?
“அம்மா நான் வேலை செய்யும் இடத்தில ஒரு மாதம் லீவு எடுக்கிறது கஷ்டம் . கெதியிலை வரபாக்கிறன்”
“சரி உன்னை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்”
மாதங்கள் சென்றன. வரதன் தாயுக்கு எப்படி தான் ஏற்கனவே கனடாவில் ஒரு வெள்ளைகாரிச்சி யை திருமணம் செய்து விட்டேன் என்று சொல்லமுடியும் அதுவும் தனக்கு தெரித்த பிடித்தவெள்ளைகாரி ஒருதியை காதலித்து திருமணம் செய்துவிட்டேன் அவளும் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாள். நாம் இருவரும் வேலை செய்தால் தான் இங்கு வாழ முடியும்
“உங்கள் அம்மா என்னவாம்?” ஒலிவியா வரதனை கேடாள்.
“ஊருக்கு வந்து கல்யாணம் செய்துகொண்டு போகட்டாம். அவளுக்கு தெரியாது நான் உன்னை கல்யாணம் செய்த விஷயம்“
“அப்ப வரதன் நீங்கள் இவ்வளவு காலமும் உங்கள் அம்மாவுக்கு எங்கள் திருமணம் பற்றி சொல்லவில்லையே“?
“எங்கள் திருமணமணத்தை பற்றி அம்மாவுக்கு சொன்னால் அவ்வவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் வரும். அதனாலை நான் சொல்லயில்லை “.
“நீங்களும் உங்க அம்மாவும் பட்டபாடு. நான் அதை பற்றி பேச விரும்பவில்லை“
சில மாதங்களின் பின் ஒலியாயவுகும் வரதனுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்பட்டது அதன் முக்கிய காரணம் சில காலம் வரதன் வேலை இல்லாமல் இருந்ததது. ஒலியாவின் சம்பளத்தில் மட்டுமே அந்த குடும்பம் நடந்தது . ஒரு நாள் ஒலிவியா தன் கவலையை கொடுக்கத் தொடங்கினார். அது இரவுக்கு பிடிக்கவில்லை இருவருக்கும் தினமும் வாக்குவாதம்.
அது ஒரு குறை இல்லை அவர்களுக்கு திருமணமாகி சுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.
திடீரென ஒரு நாள் ஒலிவியா ஒரு வெள்ளைக்கார இளைஞனை கூட்டி வந்தார்.
அவன் அதை எதிர்பார்க்கவில்லை யார் இவர் என்று கேட்டபோது,
இவர் என்னுடைய ஊரைச் சேர்ந்தவர் என்று என் கம்பெனியில் தான் வேலை செய்கிறார் என்றாள்.
ஏதோ தெரிந்தவன் ஒருவனை கூட்டி வந்திருக்கிறார் என்று முதலில் வெல்ல நினைத்தான் ஆனால் தொடர்ந்து 23 நாட்கள் அவனுடன் வீட்டுக்கு வந்தார்.
அவர்கள் இருவரும் சிரித்து பேசினார்கள் அதுவும் பரதனுக்கு முன்பு.
அவனுக்கு அப்போது தான் புரிந்தது தன்னுடைய நண்பன் நான் சொன்னது.
இந்தக் காட்சிகளை அளவுக்கு நம்பக்கூடாது என்று.
ஒரு நாள் வெல்வான் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் வீட்டில் ஒரே வாக்குவாதம் ஒலிவியா. சில பாத்திரங்களை அழித்துவிடும் அப்போது உறுதியாக சொன்னார். உன்னோடு இனியும் தொடர்ந்து வாழ முடியாது நல்ல காலம் எங்களுக்கு குழந்தைகள் இல்லை இருவரும் பிரிந்து விடலாம் என்று.
நீ உண்மையாய் உண்மையைத்தான் சொல்லுகிறாயா என்று கேட்டான் பெறுதல்
“ஆமாம் உனக்கு உத்தியோகம் இல்லை என் சம்பளத்தில்தான் குடும்பம் நடக்கிறது. அதனால் நான் உன்னை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துவிட்டேன் என்ன சொல்லுகிறாய்”? என்று கேட்டாள் ஒலிவியா.
வரதன் பதில் சொல்லவில்லை.
அந்தக் கேள்வி ஒளிவியாவிடம் இருந்து வரும் என்று வரதன் எதிர்பார்க்கவில்லை இரு நாட்களுக்கு பின் ஒரு நாள் வரதன் கவலையில் குடிததுவிட்டு வரதன் வீட்டுக்கு வந்தான்
இருவருக்கும் திரும்பவும் வீட்டில் ஒரே போராட்டம்.
“நாளை நான் என் லோயருடன் கலந்து ஆலோசித்து உன்னை விவாகரத்து செய்ய போகிறேன் “என்றாள் ஒலிவியா
“நீ போய் எது வேண்டும் என்றாலும் உன் இஸ்டத்துக்கு செய். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. எனக்கு தெரியம் நீ வேலை செய்யும் இடதில் உன் சாதி ஒருவனை பிடித்து விட்டாய் என்று உன்னோடு இனி நான் வாழ முடியாது. உனக்கும் எனக்கும் மனதில் பொருந்தாது”. என்று கோபத்துடன் அவளை அடிக்காத குறைடாக வரதன் சொன்னான்.
அதன் பின் இருவரும் ஒன்றாக சம்மதித்து விவாகரத்து செய்து கொண்டார்கள்
இதை அறிந்த நாதன் ஒருநாள் வரதனை கண்டு பேசினான். “வரதா நீ வேலை சியோம் செக்யூரிட்டி நிறுவனம் மூடிவிட்டது . உனக்கு வேலை இல்லை , வேலை இல்லாமல் கனடாவில் வாழ்வது கஷ்டம் . ஏன் நிறுவனத்தில் உனக்கு பெருத்தமான ஒரு வேலை ஓன்று காலியாக இருக்கிறது நீ அறிவியல் துறையில் படியால் அதற்கேற்ற ஒரு புள்ளிவிவரம் மற்றும் தகவல் சேர்க்கும் துறையில் உனக்கு ஒருவேளை நான் எடுத்து தருகிறேன் சம்மதமா” என்று கேட்டான்.
“நாதன் அந்த வேலையை எனக்கு நீ எடுத்து தந்தால் நான்தான் உன் உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன் இது உறுதி”
ஒரு வெள்ளைக்காரியையும் காதலிக்க் மாட்டேன் நான் ஒலிவியாவுடன் நான் பட்ட பாடு போதும்” என்றான் விரக்தியுடன் வரதன் .
“சரி போனது போகட்டும் இதைத்தான் நான் முன்பே உனக்கு சொன்னேனே
ஆனால் உனக்கு ஒரு நிபந்தனை அதுக்கு நீ சம்மதித்தல் மட்டுமே உனக்கு தருவேன் என்றான் நாதன் .
“என்ன நிபந்தனை நாதன் சொல்லு”, என்றான் வரதன்
நீ வேலை செய்து ஆறு மாதத்திற்குப் பின் நீ போய் உன் சொந்தமாமன் மகளை திருமணம் செயது கனடா கூட்டி வரவேண்டும் .என்ன சொல்லுகிறாய்”?
“ம் ம் நீ சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது அதுக்கு விவகரத்து செய்தா என்னை அவள் திருமணம் செய்ய சம்மதிப்பாளா தெரியாது நான் உண்மையை மறைக்க முடியாது எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்துவிட்டேன் என்று அவளுக்குச் சொல்லவேண்டும் அம்மாவுக்கும் சொல்ல வேண்டும் “.
“அதைப் பற்றி நீ ஒன்றும் யோசிக்காதே. அதை நான் கவனித்துக் கொள்கிறேன்“ என்றான் நாதன்.
சில நாட்களின் பின் நாதன் அவனுக்கு போன் பண்ணி சொன்னாள் “உன் விஷயத்தை அம்மாவுக்கு சொல்லிவிட்டேன் உனக்கு தெரியுமா அவளுக்கு ஏற்கனவே நீ திருமணம் செய்து விட்டாய் என்று . யாரோ இங்கிருந்து போனவர்கள் சொல்லி இருக்கிறார்கள் அவள் உன்னுடைய மச்சான் மஞ்சுளாவுடன் அதைப் பற்றிப் பேசியிருக்கிறாள். அவள் உன் அம்மாவுக்கு சொன்னாளாம்” மாமி என் அத்தான் திருமணம் செய்து விவாகரத்து செய்தாலும் பரவாயில்லை அவர் என் மனதை விட்டு போக மாட்டார் அவர் வந்து எனக்கு தாலி கட்டிக்கொண்டு போகட்டும்“ என்று.
“என்ன நீ உண்மையாகவா சொல்கிறாயா நாதன்?” என்று கேட்டான் வரதன்.
உண்மைதான் சொல்லுகிறன். நீ வேண்டும் என்றால் உன் அம்மாவுக்கு போன் செய்து பேசி பேர் அதன்பின் நீ என் நிறுவனத்தில் வேலை ஆரம்பித்து ஆறு மாதத்திற்குப் பின் நான் உனக்கு லீவு எடுத்து தருகிறேன் நீ ஊருக்கு போய் திருமணம் செய்து இரண்டு கிழமையில் நீ அவளையும் கூட்டிக்கொண்டு இங்கு வேண்டும் என்று சொல்லுகிறாய்
“நண்பா நீ செய்த இந்த உதவிக்கு நான் என்றும் உன்னை மறக்க மாட்டேன்”, என்றான் வரதன் .
“இதெல்லாம் இருக்கட்டும் முதலில் உன் அம்மாவுக்கு போன் பண்ணி மன்னிப்பு கேள். முடிந்தால் உன் மச்சான் மஞ்சுளா வுடனும் பேசி அவளிடம் மன்னிப்புக் கேள்” என்றான் நாதன்.
“இரண்டாம்தாரமாக தாரமாச வர மதிப்பாளோ தெரியாது நான் உண்மையை அவளுக்கு மறைக்க முடியாது எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்துவிட்டேன் என்று அவளுக்குச் சொல்லவேண்டும் அம்மாவுக்கு சொல்ல வேண்டும்“
“அதைப் பற்றி வரதன் நீ ஒன்றுக்கும் யோசிக்காதே , இரு நாட்கலளுக்கு முன் உனக்கு நடந்த உன் விஷயத்தை அம்மாவுக்கு சொல்லிவிட்டேன் உனக்கு தெரியுமா அவவுக்கு ஏற்கனவே நீ விவாகம் செய்து தெரியுமென்று.யாரோ இங்கிருந்து போனவர்கள் சொல்லி இருக்கிறார்கள் அவள் உன்னுடைய மச்சான் மஞ்சுளாவுடன் அதைப் பற்றிப் பேசியிருக்கிறா அவள் சொன்னாள் மாமி என்தான் என் அத்தான் திருமணம் செய்து விவாகரத்து செய்தாலும் பரவாயில்லை அவர் என் மனதை விட்டு போக மாட்டார் அவர் வந்து எனக்கு தாலி கட்டிக்கொண்டு போகட்டும் என்று”
“என்ன நீ உண்மையாய் சொல்கிறாயா“ என்று கேட்டான் வரதன்
“உண்மைதான் வரதா .நீ வேண்டும் என்றால் உன் அம்மாவுக்கும்’ உன் மச்சாள் மஞ்சுவுக்கும் போன் செய்து பேசு , நீ என் நிறுவனத்தில் வேலை ஆரம்பித்து ஆறு மாதத்திற்குப் பின் நான் மனேஜருடன் பேசி உனக்கு இரண்டு கிழமை லீவு எடுத்து தருகிறேன் நீ ஊருக்கு போய் மஞ்சுவை திருமணம் செய்து போட்டு வா . அதுக்கு பிறகு நீ அவளை ஸ்போன்சர் செய்து இங்கை கூப்பிடலாம்“.
நாதனின் கைகளை பிடித்து கொஞ்சிய படியே வரதன் சொன்னான் “நண்பா நீ செய்த இந்த உதவிக்கு நான் உனக்கு என் வாழ் நாள் முழுவதும் கடமை பட்டு இருக்கிறான்.” :
“இதெல்லாம் இருக்கட்டும் முதலில் உன் அம்மாவுக்கு போன் பண்ணி மன்னிப்பு கேள். அவசியம் உன் மச்சான் மஞ்சுளாளுடனும் பேசி அவளிடம் மன்னிப்புக் கேள்” என்றான் நாதன்.
“நான் அவசியம் செய்கிறேன் நண்பா“ என்றான் வரதன்.
நாதனுக்கு தான் ஊருக்குப் போய் மஞ்சுளாவை திருமணம் செய்தித்தாள் அளவுக்கு கூட்டி வேறுவேறாக வாக்குறுதி கொடுத்த பின் அடுத்த நாள் தாய் பிரம்மாவுக்கு வேலன் போன் செய்தார்
தங்கம்மா தன் மகனிடமிருந்து வட்ஷப் எதிர்பார்க்கவில்லை.
எங்கடா வர்த்த திடீரென்று செல்போன் பண்ணுகிறாய் ஏதாவது முக்கிய செய்தி
ஆமாம் அம்மா நான் தீர்மானித்து விட்டேன்.
“என்ன எண்டு விவரமாக சொல்லு”
“ஏன் அம்மா உனக்கு எல்லாம் தெரியும் தானே நாதன் உன்னோட பேசியிருப்பாரன் தானே”
“ம்ம் அவன் நாதன் எனக்கு எல்லாம் சொன்னவன். நீ அங்கு ஒ ரு வெள்ளைகாரிச்சி ஒருததியை காதலிச்சு க, கலியாணம் செய்’து பிறகு விவாகரத்து செய்த கதையை எனக்கு சொன்னவன் . ஏன் உனக்கு இந்த புத்தி நானும் இதை கேள்விப்பட்டனான் ,ஆனால் உன்னிடம் கேட்க விருப்ப படவில்லை. இப்ப அவள்உன்னை விட்டு போய் விட்டார் என்று கேள்வி உண்மையா?”
அதைப் பற்றி பேசாதே அம்மா அது நான் செய்த மிகப்பெரிய தவறு.
இனி ஒருபோதும் இதுபோல நடக்க மாட்டேன் எனக்கு நாதன் தன் கம்பெனியில் புள்ளியியல் வல்லுநர்உத்தியோகம் எடுத்து தந்திருக்கிறார் அவனுக்கு நான் உறுதி அளித்தேன் நான் மஞ்சுளாவை திருமணம் செய்வதாக. நான் வேலையில் சேர்ந்து ஆறு மாதத்திற்கு பின் இரண்டு கிழமை லீவு எடுத்துக் கொண் டு ஊருக்கு வர் தீர்மானித்துள்ளேன்.
மஞ்சுளாவை திருமணம் செய்வதாக முடிவு செய்துவிட்டேன் அது அவளுக்கு நீ சொல்லு அம்மா”
“நான் சொல்லமுன் அவளுக்கு உன்னுடைய காதல் கதை எல்லாம் தெரியும்.
யாரோ அவளுக்கு தெரிந்த குடும்பம் ஒன்று கனடாவிலிருந்து வந்து அவளுக்கு உன்னை பற்றி சொல்லி போட்டினம்“
“அவள் என்ன சொன்னாள் அம்மா ? என் மேல் வெறுப்பு வந்து விட்டது அவள் சொன்னாலா?”
“இல்லை இல்லை உன் மேல் இன்னும் அன்பும் மரியாதையும் நம்பிக்கை வைத்திருக்கிறாள் நீ விவாகரத்து செய்தாலும் அவள் வந்து உன்னை திருமணம் செய்ய சம்மதித்து விட்டாள் நான் அவளிடம் பேசி அவள் முடிவை கேட்டேன்.
கடவுள் கிருபையால் உனக்கு அந்த வெள்ளைகாரியால் ஒரு பிள்ளைகளும் பிறக்கவில்லை அப்படி பிறந்திருந்தால் அந்த பாரமும் மஞ்சுளா தலையில் தான் வந்திருக்கும்”.
“சரி அம்மா நான் அவளிடம் பேசி மன்னிப்புக் கோருகிறேன் அவளைப் போல் உள்ள நல்ல மனம் உள்ள ஒரு பெண்ணை நான் என் வாழ்நாளில் காண முடியாது
“வரதா இதை நீ எனக்கு சொல்லத் தேவையில்லை அவளைப் பற்றி எனக்கு நல்லா தெரியும் நீ முதலில் அவளுக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்புக் கேள் அவள் மனதில் நம்பிக்கையை கொடு நீ இனி
ஒருபோதும் அவளை கைவிடமாட்டேன் என்று சொல்”
“நிச்சயம் செய்கிறேன் அம்மா. நீ என் திருமணத்துக்கு எல்லா ஆயித்தமும் செய் இன்னும் ஆறு மாதத்தில் நான் ஊருக்கு வருவேன் திருமணத்தை ஆடம்பரம் இல்லாமல் எங்கள் ஊர் சிவன் கோவிலில் செய்ய நான் தீர்மானித்து விட்டேன்
அந்த கோவையில் தான் உனக்கும் அப்பாவுக்கு திருமணம் நடந்தது என்று நீ அடிக்கடி சொல்லுவாய்”
“அது நல்ல தீர்மானம் நானும் அந்த ஐயருடன் பேசி ஒழுங்குகள் செய்கிறேன். நீ அனுப்பிய காசில் சீட்டு பிடித்து உன் திருமணத்துக்கு வேண்டிய பணம் வைத்திருக்கிறன் நீ ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்”, என்றாள் வரதனின் தாய்.
வரதன் தாயுடன் பேசி முடித்தபின் மஞ்சுளாவுக்கு போன் செய்து அவளுடன் நீண்ட நேரம் பேசி தனக்கு நடந்தது சொன்னான். பலதடவைகள் அவனிடம் மன்னிப்பு கேட்டான் அதுக்கு அவள் சொன்னாள் “அத்தான் நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆண்கள் எல்லோரும் இப்படிப்பட்ட தவறுகள் செய்வது மீது ஆசை வருவது சகஜம் அதுவும் பிற நாட்டில் வாழ்கை என்றால் உங்களுக்கு வெள்ளை நிறப் பெண்கள் மேல் சகஜம். ஆனால் அவர்களுடைய கலாச்சாரம் வேறு , நாங்கள் வளரும் கலாச்சாரம் வேறு . நான் உங்களுக்கு ஆங்கிலம் பேச தெரியாத ஒருத்தியாக முன்பு இருந்திருக்கலாம் இப்போது ஓரளவுக்கு நான் ஆங்கிலம் பேசுவேன் அதுக்கு நான் படித்த கல்லூரி ஆங்கில ஆசிரியை எனக்கு உதவி செய்தவ”.
அவளுடைய வார்த்தைகள் வரதனின் இருதயத்தை ஊசி குத்துவது போல் இருந்தது.