மனைவி அமைவதெல்லாம்….!

2
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 7,326 
 
 

‘பிறந்தநாள். இன்று பிறந்தநாள்..நாம் பிள்ளைகள் போலே தொல்லைகளெல்லாம் மறந்த நாள்! ஹாப்பி பர்த் டே டு யு!’  நாம் மூவர் படத்தில் வரும் அருமையான பாடல்! இப்பாடல் வரிகள் அந்தக் காலக் கட்டங்களில் நேயர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களின் பெயர், பிறந்த தின தேதியுடன் ஒரு  வானொலியில் ஒலி பரப்புவார்கள்.  அது ஒரு வஸந்த காலம்.

அந்தக் காலம் வருமா…மிகப் பெரிய கேள்விக் குறி!

சரி. இந்தப் பாடல் வரிகளைத் தழுவி வரும் சின்னஞ் சிறு கதை!

பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு, சரக் சரக் என நடந்தவாறு  புருஷன் அரவிந்த் முன்னால் வந்து நின்றாள் காயத்ரி.

“என்னங்க..கொஞ்சம் எழுந்து கிழக்குப் பக்கமா பார்த்து நில்லுங்க!”  திடு திடுப்பென்று வந்து நின்ற காயத்ரி சொன்னதும் படித்துக்கொண்டிருந்த பேப்பரை அப்படியே சோஃபா மீது போட்டுவிட்டு எழுந்து நின்றான் அரவிந்த். மகாலக்ஷ்மி போல் தோற்றமளித்த மனைவியைக் கண்டு உவகை கொண்டான்.

சடாரென்று அரவிந்த் கால்களில் நான்கு முறை விழுந்து வணங்கி எழுந்தாள் காயத்ரி.

“என்ன விசேஷம்?” அரவிந்த் புரியாமல் கேட்டான்.

புன்சிரிப்பொன்றை உதிர்த்த காயத்ரி “இன்னிக்கு என்னோட ஸ்டார் பர்த் டே!” என்றாள்.

“ஓ..மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் மை டியர!”

“தேங்க்ஸ் வெரி மச் மை டியர்!”  என்றாள் சிரிப்பு குறையாமல்.

“இரு இதோ வரேன்.”

“எங்கே போறீங்க?”  நகர முற்பட்டவனை தடுத்தாள்.

“உனக்கு பர்த் டே பிரசண்ட் பணமா 500 ரூபாவாவது கொடுக்கணும்னு …அதை எடுத்து
வரத்தான்….”

“வேணாங்க! போன வாரம் என் பர்த் டேட்டுக்கு நீங்க வாங்கிக் கொடுத்த காஸ்ட்லி சாரியே போதும். அதைத்தான் இப்போ கட்டியிருக்கேன். இன்னிக்கு ஸ்டார் பர்த்டேனால உங்களை நமஸ்காரம் பண்ணினேன். உங்கள் ஆசிர்வாதமே போதும். ரெண்டு தடவை ப்ரசண்ட்டெல்லாம் செய்ய வேண்டாம். ” எனக் கூறி விட்டு காயத்ரி அகன்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த் மனதில் தோன்றிய எண்ணங்கள், ‘மெத்தப் படித்தவள் என்கிற தலை கனம் இல்லை; பணக்காரி; அழகி என்கிற திமிர் இல்லை. பெரியவர்களிடம் மரியாதை, அவர்களிடம் அன்பும் பாசமும் கலந்து நடந்து கொள்ளுதல். முக்கியமாக புருஷனான தன்னிடம் எந்தச் சந்தர்ப்பத்திலும் முகம் சுழிக்காமல் இருப்பது; அநாவசிய செலவுகளைத் தவிர்க்கும் நற்குணம். அவளின் இந்த நற்பண்புகள். இதை யெல்லாம் கொண்டவளை மனைவியாக ஏற்றுக்கொண்டது தான் செய்த பாக்கியம்’ என நினைத்தான்.

மொத்தத்தில் ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்று  தன் மனைவியைப் பற்றி பெருமையாக எண்ணிக்கொண்டான் அரவிந்த்.

2 thoughts on “மனைவி அமைவதெல்லாம்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *