புதிய மடமைகள்





(1975ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சமூக சீர்திருத்தவாதியான ஒருவரைச் சந்திக்கப் போனேன். சந்திரன்தான் கூட்டிப்போனான். இருவருக்கும் பொதுவான நண்பன், அவன் எங்களுடன் ராசுவும் கூடவந்தான்.

என் கையிலிருந்த பச்சை நிற “பைலை” க் காட்டி “இதை எங்கேயாவது வைச்சிட்டு வா: இந்த நிறம் அவருக்குப் பிடியாது” என்றான் சந்திரன்.
ராசு சிரித்துவிட்டுக் கேட்டான்.
“ஆள் கீரைக்கறி, வல்லாரைப் பச்சடி, இதுகளையும் சாப்பிட மாட்டாரோ?”
– ‘கடுகு’ குறுங்கதைத் தொகுதி, முதற் பதிப்பு: ஆடி 1975, ஐ.சாந்தன் வெளியீடு, மானிப்பாய்.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.