பாஸ்!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,540
காரில் சென்றுகொண்டு இருந்தோம். முன்னால் சென்றுகொண்டு இருந்த காரின் பின்புறக் கண்ணாடியில், ‘மை பாஸ் இஸ் எ ஜூயிஷ் கார்ப்பென்ட்டர்’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
“அப்படி என்றால் என்ன டாடி?” என்றான் என் அருகில் உட்கார்ந்திருந்த பத்து வயது மகன்.
“ஜீசஸ் ஒரு ஜூ(யிமீஷ்). தச்சுத் தொழிலை மேற்கொண்ட குடும்பம் அவருடையது என்பதால், இப்படித் தமாஷாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்” என்றேன்.
உடனே என் மகன், “டாடி! மை பாஸ் இஸ் ரெஸ்ட்டிங் இன் ஹிமாலயாஸ்!” என்றான்.
‘ஆஹா! குழந்தை எப்பேர்ப்பட்ட அறிவாளி! சிவபெருமான் இமயமலையில் வீற்றிருப்பதை
என்ன அழகாகக் குறிப்பிடுகிறான்’ என்று நெகிழ்ந்துபோனேன் நான்.
இருந்தாலும், அவன் வாயாலேயே அதற்கான விளக்கத்தைக் கேட்கும் ஆவலில், “யாருடா அது உன் பாஸ்?” என்றேன்.
“என்ன டாடி, இது தெரியாதா? சிவாஜி – தி பாஸ்! ரஜினி, டாடி! அவர் தானே அப்பப்போ ரெஸ்ட் எடுக்க ஹிமாலயாஸ் போவாரு!” என்றானே பார்க்கலாம்!
– 28th நவம்பர் 2007