பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 1,263 
 
 

அடர்ந்த காடு ஒன்றில் கழுதை ஒன்று எந்த விலங்குடன் நட்பு கொள்ளாமல், வம்புக்கு இழுத்து அடிக்கடி சண்டை போட்டு வந்தது.

காட்டில் ஒரு நாள் அதற்கு இறந்து போன புலி ஒன்றின் தோல் கிடைத்தது. அது புலித் தோலைப் போர்த்திக் கொண்டு புலி போல் அந்தக் காட்டில் வலம் வந்து பல விலங்குகளை அச்சமுட்டியது.

இது புலி என்றே முயல், குரங்கு , யானை உள்ளிட்ட அனைத்து விலங்குகளும் நம்பி இதைக் கண்டு பயந்து ஓடின. சிங்கம் கூட இது புலி என்றே நம்பி விட்டது.

ஆனால், புத்திசாலி குரங்கு ஒன்றுக்கு இதன் மீது சந்தேகப் பார்வை இருந்து வந்தது. எல்லா விலங்குகளும் அக்கம் பக்கத்தில் இருந்த தருணத்தில் குரங்கு துணிச்சலுடன் புலி வேடம் போட்டிருந்த கழுதையின் அருகில் சென்று ‘புலியாரே உங்கள் உறுமல் ஓசை கேட்டு பல நாளாயிற்று. கொஞ்சம் உறுமிக் காட்டுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டது.

கழுதை உடனே வாய் விட்டு கத்தியது. உடனே கழுதையின் புலி வேடம் கலைந்தது.

ஏமாந்த அனைத்து விலங்குகளும் அதைத் துரத்த ஓடி வந்தன. கழுதை வனத்தில் ஓடி ஒளிந்தது.

நீதி – பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

(ஈசாப் கதைகளிலிருந்து)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *