தமிழ் சினிமா!
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,449
“அப்பா! எனக்குக் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா, அது அந்த ரகுவோடதான்!”
“போயும் போயும் ஓட்டல்ல டேபிள் துடைக்கிற பையன் எனக்கு மாப்பிள் ளையா? சே! நெனைக்கவே கேவலமா இருக்கு.”
“அவரைக் கைதூக்கிவிட ஆளில்லேப்பா! அதனால கௌரவம் பார்க்காம வேலை செஞ்சு, மேல படிக்கிறாரு. பணம் இல்லேன்னா என்னப்பா, நல்ல குணம் இருக்கு அவர்கிட்டே! திறமையும் ஆர்வமும் இருக்கு. கூடிய சீக்கிரமே ஃபாஸ்ட் ஃபுட் கடை திறக்கிற முயற்சியில இருக்காரு.”
“கிழிச்சான். தமிழ் சினிமாவுலதான்மா நீ சொல்றதெல்லாம் நடக்கும். இது வாழ்க்கை. புத்திசாலித்தனமா முடிவெடு. என் அக்கா பையன் ராஜாதான் உனக்குப் பொருத்தமானவன். உக்காந்து சாப்பிட்டாலும் ஏழேழு தலைமுறைக்குச் சொத்து இருக்கு.”
“ஆனா, அவன் எத்தனை மோசம்னு உங்களுக்குத் தெரியாதாப்பா? குடி, பொம்பளை சகவாசம்னு அத்தனை கெட்ட பழக்கமும் இருக்கு!”
“கல்யாணம்னு ஒண்ணு ஆச்சுன்னா திருந்திடுவான்மா! ஒரு பொண்ணு நினைச்சா எப்பேர்ப்பட்ட அயோக்கியனையும் ஆளாக்கிடலாம்மா!”
மகள் அப்பாவின் கண்களை ஆழமாகப் பார்த்துவிட்டுக் கேட்டாள்… “ஏம்ப்பா, இதுமட்டும் தமிழ் சினிமா இல்லையாப்பா?”
– 29th ஆகஸ்ட் 2007